Friday 23 November 2012

ஆடு ஜீவிதம்...!

உள்மனதில் பதிந்து உள்ள அத்தனை துயரங்களும் மேலோங்கி வந்தது உண்டு, எனக்கு மட்டுமே சொந்தம் என்று நம்பிக்கொண்டு இருந்த ரகசியங்கள் எல்லாம் வெட்ட வெளிச்சதில் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தது உண்டு, இத்தனை நாட்களாக இப்படி ஒருவருடன்  நான் வாழ்ந்து வந்து இருகிறேன் என்று ஆச்சிரிய பட்டதுண்டு, உலகம் இத்தனை அழகானதா என்று வியந்து வியந்து ரசித்தது உண்டு, வாழ்கையின் கடைசி நிமிடம் போல் உருகி உருகி காதலித்தது உண்டு, என்றுமே நேராத எப்போதோ  நேர்ந்த இழப்புகளை நினைத்து விதியை நொந்து கொண்டது உண்டு, காரணம் இல்லாமல் ஏதோ ஒன்றை மனதுக்குள்  கற்பனை செய்து கொண்டு சிரித்தது உண்டு, கண்ணீர் வற்றும் வரை அழுதது உண்டு, எல்லாவற்றையும்  வெறுத்தது உண்டு, எல்லாவற்றையும்  நேசித்தது உண்டு, பெயர் சூட்ட முடியாத உணர்வுகள் பிறந்தது உண்டு, உலகத்தின் அத்தனை சந்தோஷத்தையும் ஒரே நொடியில் கையில் தூக்கியது உண்டு, வெறுமை மட்டுமே நிரம்பியது உண்டு இப்படி பல அனுபவங்களை தந்து உள்ளது புத்தகங்கள். புத்தகங்கள் மூலம் பல முறை ஜனனம் சந்தித்து இருகிறேன் சில முறை மரணம். ஆனால் இதுவரை உணராத ஒரு அனுபவம், சற்றும் எதிர்பாரா ஒரு மாற்றம்- என் துயரங்கள் எல்லாம் மறைந்து போனது, நான் என்றைக்கும்  அலட்சியமும், வெறுப்பும் காட்டும் கடவுள் மீது ஒரு ஈர்ப்பு வந்து உள்ளது. என் மனம் முழுவதும் நிரம்பி உள்ளது நஜீப்...! ஒரு மனிதன் இத்தனை துயரத்தை சந்திக்க முடியுமா? இத்தனை சந்தித்தும் வாழ வேண்டும் வாழ்ந்து கொண்டுஇருக்கும் நஜீப்  க்கு எத்தனை நம்பிக்கை! எத்தனை பெரிய  கஷ்டங்களும் தீவரமான   வேதனைகளும் கால ஓட்டத்தில் வாழ்க்கையின் அம்சம் ஆகவே மாறிபோகும் என்பது நஜீப்  யின் வாழ்கை அனுபவம். இந்த புரிதல் யாருக்கும் எளிதில் வந்து விடாது. அவரின் இழப்புகள் எல்லாம் ஒன்றுகூடி அவருக்கு கற்று தந்தது இது. நஜீப்  ஏன் வாழ்வதற்கு  ஜெயிலை தேர்ந்து எடுக்கிறார் பசி உடலை வாட்டி எடுத்தாலும் ஏன் ஆட்டு கறியை மட்டும் தொடுவது இல்லை என்ற கேள்வி காண பதில் அவர் இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்கை . 200 பக்கங்களில் பென்யாமின் நஜீப் யின் வாழ்க்கையை சித்திரமாக தந்து உள்ளார். வாழ்கையை பற்றிய அப்பட்டமான உணர்ச்சி குவியல் தான் புத்தகம் முழுவதும் நிரம்பி உள்ளது. மனதில் பல கனவுகளும் எதிர்பார்புகளும் அழகான கற்பனைகளும் சுமந்து கொண்டு கேரளாவில் இருந்து gulf க்கு செலும் நஜீப் யின் வாழ்க்கை பாதை பலர் கடந்து சென்றதாக இருக்க கூடும் ஆனால் எத்தனை நாள் பயணம் செய்தார்கள், எத்தனை பேர் நம்பிக்கையை மட்டும் வைத்து வாழ்ந்தார்கள் எத்தனை பேர் மீண்டும்  வந்தார்கள் என்பது கேள்வி குறிதான். நம்முடைய கனவுகள் பெரும்பாலும் கற்பனைகள் மட்டுமே நிரம்பி உள்ளது நமக்கு தெரியாத ஒரு விஷயத்தையோ இல்ல  பார்காத ஒரு இடத்தையோ தான் அதிகமாக நினைக்கிறோம். நம்முடைய  ஆசைகள், கனவுகள் எல்லாம் ஒரு கற்பனை உலகத்தில் இருந்து தான் உருவாகிறது. சொர்க்கம் போல் உள்ளது, சொர்க்கம் போன்ற அனுபவம் என்று நாம் அடிக்கடி சொலுவது எல்லாம் நாம் யாரும் சொர்கத்தை நேரில் பார்காத காரணத்தில் தான்.. அருகில் இருப்பதை அலட்சிய  படுத்துவதும் தொலைவில் இருபதின் மீது ஈர்ப்பு வருவது மனித இயல்பு தான். நமக்கு தெரியாத விஷயங்களை பற்றியும் எங்கோ நடக்கும்  விஷயங்களை  குறித்தும் விளையாட்டா கூட கனவு கண்டு விடாதிர்கள், என்றோ ஒரு நாள் அது உங்கள் வாழ்வின் யதார்த்தமாகி விட்டால், அப்போது  அதை நேருக்கு நேராக பார்பதற்கு கூட இயலாத விதத்தில் அது அத்தனை  பயங்கரமாக இருக்க கூடும் என்பது தான் நஜீப் நமக்கு தரும் எச்சரிக்கை. நிஜ வாழ்க்கைக்கும் கனவுக்கும் உள்ள வித்தியாசம், கனவு வை அடைந்து  விட்டோம் என்று நம்பும்  தருணத்தில் கனவு  அந்நியமாகி போவது போல் வேதனை எதுவும் இல்லை. சுய வாழ்கையை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தமக்குள்ளே  முடங்கிபோகும் பரிதாப   ஜீவனாய் வருகிறார் ஹமீது. பாதி வழி யிலே முடிந்து போகும் வாழ்கை தான் எத்தனை!
உலகதில் எந்த துயரத்தையும் தாங்கி கொள்ளலாம் அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒருவர் இருந்தால் ஆனால் சில நேரங்களில் நம்மை நன்கு புரிந்தவர்களும் நம்மை நேசிகிரவர்களுக்கு கூட நம் நிலைமை சொல்ல தயங்குவது உண்டு நம்முடைய சந்தோஷமே அவர்களுடைய சந்தோஷம் உலகம் என்று இருபவர்களுக்கு நம்முடைய துயரத்தை மறைத்து நம் நேசிபவரை சந்தோஷ படுத்துவது ஒரு மேலோட்டமான சுகம் ஆனால் மனதை கிழிக்கும் துயரம். நஜீப் அவருடைய சைனு க்கு அனுப்ப முடியாத எழுதிய கடிதங்கள் கூட அப்படி தான். கடிதம் முழுவதும் பொய், எழுதி முடித்து விடு தேம்பி தேம்பி அழுவார் அந்த அழுகை மட்டுமே உண்மை யாரும் படித்து பார்காத உண்மை.
 பாலைவனத்தின் வாழ்க்கை முறைகளும் ஆட்டு உடைய ஆண்மையை வெட்டும் கொடூரமும் பார்த்து அதிர்ச்சி அடைந்தது ஒரு பக்கம். நான் மிகவும் வியந்தது சாப்பிட  ஆகாரமில்லை, தண்ணீரில்லை, துணி இல்லை, படுக்க ஓரிடம் இல்லை, கூலி இல்லை, வாழ்கை இல்லை, கனவுகள் இல்லை, ஆசை இல்லை உயிர் மட்டுமே எஞ்சி இருக்கும் நிலையில் கூட அல்லா மீது இருக்கும் நம்பிக்கை மட்டும் குறைய வில்லை. கடவுள் இருக்கிறார் என்று நம்பிய காலத்தில் கூட தடுக்கி விழுந்தால் கடவுள் மீது கோவபடுவது உண்டு. அல்லா மீது  கோவபடுவதற்கு எல்லா நாயமான காரணங்கள் இருந்தும் அவர் அல்லா மீது நம்பிக்கை வைத்து உள்ளார்.  எல்லாவற்றுக்கும் கடவுள் கடவுள் என்று கூப்பிடுவர் மீது கோவமும் சில சமயம் எரிச்சலும் வரும் ஆனால் நஜீப் ஒவ்வொரு முறையும் அல்லா அல்லா என்று அழைக்கும் போது இல்லாத அல்லா மீது எனக்கு ஒருவிதமான ஈர்ப்பு தான் ஏற்படுகிறது! அல்லா  இத்தனைநேசத்துக்கு உரியவரா! வியப்புக்கு அவரே விடையும் தருகிறார் 'பசுஞ் சோலையில்  மெய் மறந்து வாழும் பாக்கியம் பெற்றவர்களே.. உங்களை பொறுத்தவரை பிராத்தனைகள் வெறும் பிரசங்கள் ஆகவும்  சடங்குகள் ஆகவும் இருக்கலாம் ஆனால் எனக்கோ அது தான் வாழ்கையின் கடைசி அச்சாணி '
            அரைசாண் வயிற்றுக்காக  வீட்டையும் நாட்டையும் பிரிந்து மணல் காட்டுக்கு போய் அகப்பட்டு கொண்ட நஜிப் ஸ்பரிசம் , வாசனை, அன்பு, ஆசை என்ற மனித நிலை முற்றிலுமாக பரி கொடுத்து விட்டு ஆடுகிடையில் ஒரு ஆடுஆகவே  மாறி போன அவலம் தான் நஜீப்.
              அந்த வாழ்கையை  வெறுத்த போதிலும் ஒவ்வொரு நொடியும் தப்பிக்க நினைத்த போதிலும் அதற்கான சந்தர்பம் வரும் போது ஆடுகளை விட்டு பிரிய மனம் இல்லாமல் ஏதோ ஒன்று தடுப்பது அழகிய உணர்ச்சி குவியல்.  சந்தர்பங்களுக்காக காத்து இருப்பது அந்த சந்தர்பம் வந்து கதவை தடும போது பயன்படுத்த விருப்பமின்றி விரகத்தில் மூழ்குவது போன்ற வாழ்க்கையின்  முரண்பாடுகளை நம் மனதை விட்டு போகாத படி பதிவு செய்து உள்ளார் பென்யாமின்.
                                              மனிதனின் இயலாமைகள், விலங்குகளின் புரிதல்,எதிர்பாரா நேரத்தில் வரும் உதவி, ஒரு நாளில் வாழ்கை மாறி போகும் விசித்திரம், வாழ்க்கையின் முரண்பாடுகள் இவற்றை எல்லாம் நஜீப்  மூணு வருஷம், நாலு மாசம், ஒன்பது நாட்களில் கற்று கொண்டார்  நாம் வெறும் 240 பக்கங்களை படித்து தெரிந்து கொண்டோம் இதுவும் வாழ்க்கையின் ஒரு விசித்ரம் தான்.. நஜீப்  வேர் ஒருவர் விசாவில் தான் gulf  யில் வந்து இறங்கினார் அது constuction  கம்பெனி யில் வேலை செய்வதற்கான விசா .ஆனால் பாலைவனத்தில் வசிக்கும் ஒரு அர்பாபு ஆடு மேய்பதற்காக அவரை கூட்டிசென்று விட்டார்.  வேறு ஒருவர் விதியில் தான் தல்லபட்டு இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதுற்கு அவர் அவரின் இயல்பை கூட இழக்க வேண்டிய தாயிற்று.   புத்தகத்தை மூடிய பிறகும் நஜீப் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று கொண்டே இருக்கிறார். என் துயரங்கள் முழுவதும் அழித்துவிட்டு அவருடைய வாழ்க்கை சுவடுகள் மட்டுமே நிரம்பி உள்ளது
                            ஆடு ஜீவிதம்- வித்தியசமான வாசக அனுபவம் மட்டும் அல்ல வாழ்கை பாடம் கூட- மனித உணர்சிகளின் குவியல். உயிர்மை பதிப்பகத்தின்  ஆடு ஜீவிதம் (தமிழ் யில் -எஸ்.ராமன்) தமிழில் சமீபத்தில் வெளி வந்த ஒரு முக்கிய நாவல்.
                                                                                                                                              (உயிரோசை)

No comments:

Post a Comment