Friday 23 November 2012

நிலாவிற்கு என் முத்தங்கள்...

குழந்தைகளுடன் இருக்கும்போதெல்லாம் நான் குழந்தையாகவே மாறிப்போகிறேன், இதை தாண்டி வாழ்வில் வேறு ஏதும் தேவையில்லை என்றே தோன்றுகிறது. சில நேரங்களில் என் குழந்தைகளைப் பற்றிய சிந்தனைகள் தோன்றி மறையும்.என் பிள்ளையின் எதிர்காலம் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பும் அதனுடே கலந்த பயமும் பெரும் குழப்பங்களை விளைவிக்கும். ஆனால் நிச்சயம் அழகான ஒரு உலகத்தை அமைத்து தர வேண்டும் என்ற ஆசை எப்போதுமே மேலோங்கி உள்ளது.குழந்தையை வளர்ப்பது, அது வளர்வதை ரசிப்பதை விட வேறு சிறந்த அனுபவம் உலகில் உண்டா என்பது எனக்கு தெரியவில்லை. எது எப்படியாயினும் குழந்தைகள் உலகில் கலந்துவிட எப்போதுமே துடிக்கிறது மனம். ஆனால் வாழ்க்கை எப்போதும் முரண்பாடுகளால் நிரம்பிகிடக்கிறது. நாம் எதிர்பார்க்கும் எல்லாமே எப்போதும் நடந்துவிடுவதில்லை. எனக்கு பிடிக்கும் அத்துணையும் என் காதலனுக்கும் பிடிக்கும் என்று நிச்சயமில்லை. பெற்றோர்களின் ஆசைகளும் கனவுகளும் நம் கனவுகளின் எதிர் திசைகளிலே பயணிக்கும். திருமணம் என்ற கட்டமைப்பை வெறுக்கும் எனக்கு குழந்தை வளர்ப்பு பற்றிய ஆசை பெரும் காதலாய் மனம் முழுதும் நிரம்பிக்கிடக்கிறது. திருமணத்தை பற்றி நம் சமூகத்தில் இருக்கும் எதிர்பார்புகளும் எண்ணங்களும் அபத்தமாகவே தெரிகிறது,உண்மையில் அவை அபத்தமே. நீங்கள் காதல் திருமணம் தான் செய்து கொள்ள போறீர்களா எனும் கேள்வி முன்வைக்கப்படும் போதெல்லாம் என் கோபம் அதிகரிக்கிறது. எப்படி காதல் இல்லாமல் அல்லது காதலிக்கப்படாமல் ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடியும்.

"கால காலமாக செய்து வருவது தானே,அவர்கள் எல்லாம் வாழவில்லையா?" என்ற என் கேள்விக்கு "அவர்களை போல் நான் ஏன் வாழ வேண்டும்" எனும் கேள்வியை நானே பதிலாகவும் தருகிறேன், ஒரே ஜாதி, ஒரே குலம் , ஒரே பழக்க வழக்கம் உடையவர்கள், பணம், நல்ல குடும்பம் இவை மட்டுமே திருமணத்துக்கு போதுமானது என்று நினைத்தால் 'திருமணம்' என்ற ஒரு கட்டமைப்பு பெரிதாக தோன்றாது அதில் பிரச்சனைகளோ மாற்று கருத்துகளோ வருவதற்கு வாய்ப்பில்லை. இவை எல்லாம் மீறி வாழ்க்கை முழுவதும் ஒருவரை முழுமையாக ஏற்று கொண்டு,நம் சுயத்தை அழித்து கொள்ளாமல், காதல் நிரம்பிய காமம் கொண்டு, நான் பெறும், தரும் முத்தங்கள் எல்லாம் உடலை மட்டும் சேராமல் ஆத்மாவிற்கு சென்றடைய வேண்டும் என்ற பைத்தியகாரமான எண்ணங்கள் தோன்றும் மனிதர்களுக்கு இச்சமுக நடைமுறையில் செயல்படும் திருமணம் அடக்குமுறைகளும், வன்முறைகளும் நிரம்பிய அதிகார அமைப்பாகவோ அல்லது பெரும் சுமையாகவோ தான் இருக்க முடியும்.

யாருமே இல்லாத வீட்டில் கூட பெண் கதவை சாத்திக்கொண்டு குளிக்கும், உடைமாற்றும் இந்த சமுகத்தில், இருபது வருடங்கள் தனக்குள் தோன்றும் காதல், காமம் என்று எல்லா உனார்வுகளையும் அடக்கிக்கொண்டு திருமணம் எனும் பெயரில் அனுமதி பெற்ற விபச்சாரம் செய்ய தன் கன்னித் திரை கிழியாமல் பாதுகாத்து, அதற்கு கற்பு, கன்னிமை எனும் பெயர்கள் சூட்டி (பத்தினி தெய்வங்கள் என்று சொல்லப்படும் கண்ணகியை, சீதையை துணைக்கு அழைத்து) யார் என்று அறியாத கணவன் என்று சொல்லப்படும் ஒருவனுக்கு ஏதும் தெரியாதா ஒரு இரவில் தன் உடலை அவனின் இச்சைகளுக்காய் தாரைவாக்க வேண்டியுள்ளது.
பையனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை.மது அருந்த மாட்டான், புகை பிடிக்க மாட்டான் நல்ல பையன் என்று சொல்லி திருமணம் செய்து வைப்பது கொடுமையாக இருக்கிறது. மதுவை ஒருமுறையாவது சுவைத்து பார்த்து விட்டு அந்த பழக்கத்தை விட்டவனை புரிந்து கொள்ள முடியும் ஆனால் ஒரு முறை கூட மது அருந்தியது இல்லை, புகைத்ததில்லை, பொய் சொல்லியதில்லை என்று சொல்லப்படுபவனிடம் என்ன அனுபவங்கள் இருந்து விட முடியும்? ஒரு முறை கூட பொய் சொல்லாமல், ஒரு முறை கூட ஏமாற்றாமல், ஒரு முறை கூட தோற்று போகாமல், ஒரு முறை கூட விட்டுக்கொடுக்காமல், ஒரு முறை கூட வாழ்விற்கும் தற்கொலைக்கும் இடையே உள்ள வெறுமையில் வாழாத, ஒரு முறை கூட காதலிக்காத ஒருவனிடம் என்ன அனுபவம் இருக்க முடியும்? வாழ்வு குறித்தான ஆனந்தமும், அனுபவமே இல்லாதவனிடம் கூடி வாழ்வதை விட அனுபவமும், மது மீதேனும் காதலும்,ஆனந்தமும் கொண்ட குடிகரானுடனே வாழ்ந்து விடலாம்.அவனிடம் தான் எத்தனை கதைகள் இருக்கும். லட்சங்களும், கோடிகளும் நிரம்பிய ஒருவன் நேசிப்பதை காட்டிலும் பலகோடி முறை அதிகமாய் வாழ்வை அனுபவிக்கும் குடிகாரனிடம் காதல் நிறைந்து கிடக்கும்.

நல்லவன் என்று எதை எல்லாம் சமூகம் உருவாக்கி வைத்துள்ளதோ அது எல்லாம் அர்த்தமற்றதாகவே தெரிகிறது. அதே வேலை சமுக தலத்தில் தவறு என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் "காதல் திருமணம்" எல்லாவற்றுக்கும் தீர்வாகிவிடாது.காதல் எனும் அற்புதமான உணர்வு பொதுவாய் நம் சமுகத்தில் "வெற்றி, தோல்வி" என்று இரண்டு நிலைகளில் குறுகி நிற்கிறது, அன்பில் எப்படி வெற்றி தோல்வி இருக்க முடியும். அண்பு என்பதே வெற்றி தோல்விகளை, உண்மை பொய்களை கடந்ததுதானே. வெற்றி தோல்விகளில் குறுகி நிற்கும் காதல் எந்த சுதந்திரத்தை பெண்ணுக்கு தரும். பெற்றோர் மாப்ளை பார்த்து செய்து வைக்கும் திருமணமோ, காதல் திருமணமோ எதுவாகினும் திருமணமானவுடன் பெண்களின் கனவுகள்,ஆசைகள், ஒரு பெண்ணின் சுயம் என்று அனைத்தும் அவள் மீது திணிக்கப்படும் மனைவி, தாய்மை என்று உணர்சிகள் நிரம்பிய சமுக பின்பதால் சிதைக்கப்படுகிறது. உலகத்தில் அதிகமான வன்முறைகள் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராகவே நடக்கிறது அதுவும் குடும்ப வன்முறைகள் சொல்லி முடியாமல் நீண்டுக்கொண்டே போகும். யாரென்றே தெரியாதா ஆண்கள் செய்யும் பாலியல் வன்முறைகளை காட்டிலும் கணவன் எனும் உரிமையில் நடக்கும் பாலியல் வன்முறைகள் அதிகம் நடைப்பெறும் சமுகம் இது. திருமணம் என்ற அமைப்பின் மீது நமக்கு இருக்கும் கற்பனைகளும், புரிதலுமே இத்துணை கொடூரங்களுக்கும் காரணம். திருமணத்தை பற்றிய கருத்துகள் தெரிவிக்கும் போதெல்லாம் நான் பெண்ணியவாதி என்று சொல்லப்படுகிறேன். நம் சமுகத்தில் பெண்ணியம் மீது இருக்கும் புரிதல் திருமணத்தை விட கொடுமையானது. பெண்ணியவாதி என்பவள் புகை பிடிப்பவள், மது அருந்துபவள், எந்த ஆண் மகனுடனும் காமம் கொள்ள நினைப்பவள்.இப்படியெல்லாம் நீங்கள் என்னை பற்றியும் சொல்விர்கள் எனில் நானும் பெண்ணியவாதி தான் ஆனால் நான் புகைக்கமாட்டேன், மது ஒழிக்கவேண்டும் என்று பெரிதும் ஆசைப்படுபவள். நான் அன்பு செய்யும் ஆணுடன் மட்டுமே காமம் கொள்ள ஆசைப்படுபவள். நீங்கள் சொல்லும் பெண்ணியவாதி எனும் புரிதலும் ஆண்கள் உருவாகியதே எனவே அதுவம் நிச்சயம் பெண்ணுக்கு எதிராகவே இருக்கும். என் வெறுப்பு திருமணம் என்ற கட்டமைப்பு மீது, அதன் பெயரில் பெண்களை முடக்குவது குறித்து மட்டுமே தவிர ஆண்கள் மீது அல்ல.அன்பு நிரம்பிய விழிகளுடன் ஒரு ஆண் என் மீது படர்ந்திருக்கவேண்டும் அவனின் கண்களும் மனமும் என்னை, என் பெண்மையை பிரதிபலிக்கவேண்டும் என்றே ஆசைக் கொள்கிறேன். ஆனால் எத்துனை ஆண்கள் தங்கள் இணையை, தோழியை அவளின் பெண்மையுடன் நேசிக்கின்றனர். பெண்மை என்று நான் சொல்ல விளைவது நம் சமுகம் வரையறுத்திருக்கும் பெண்மை அல்ல, ஒரு பெண்ணின் ஆசை, லட்சியம், கனவு, சுயம் இதுவே ஒரு பெண்ணின் பெண்மை என்று சொல்லுகிறேன். அதேப்போல் ஒரு ஆணும் பெண்ணும் பேசி பகிர்ந்து கொண்டாலே அந்த உறவு திருமணத்தில் தான் முடிய வேண்டும், அது காதல் தான் என்ற எதிர்ப்பார்ப்பை என்றைக்கு உடைக்க போகிறோம். மழை வேண்டி மனிதனுக்கும் விலங்குக்கும் திருமணம் செய்யும் சமுகம் சாதி பெயர்களை சொல்லி மனிதர்களுக்குள்ளான திருமணங்களை எதிர்கிறது, மீறும் பட்சத்தில் கொலைகள் செய்யவும் துணிகிறது. இன்னும் காதல் திருமணமே பெரும் குற்றமாய் இருக்கும் ஒரு சமுகத்தில் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்வதென்பது மாபெரும் குற்றமே, அவமானத்துக்குரிய பாவசெயல். மனிதனாய் பிறந்த எல்லோருமே அன்புக்கு தான் அதிகமாய் ஏங்குகிறோம்.பணம், உறவு, சாதி, மதம், மொழி, இனம் என்று எல்லாமே கிட்டும் நமக்கு மனிதமும், அன்பும் கிடைப்பது மட்டுமே பெரும்பானைமை நேரங்களில் அறிதாகிவிடுகிறது. அதே சமயம் பல நேரங்களில் அன்பு எனும் பெயரில் வன்முறைகள் நடந்தேறுகிறது. இதுனாலே மனம் குடும்பம், திருமணம் எனும் அமைப்புகளை விட்டு விலகி நிற்க ஆசைக்கொள்கிறது.

திருமணம் குறித்தான ஆசைகள் எப்போதும் வெறுமையாகவே உள்ளது அதே நேரம் என் பிள்ளைகளுக்கான உலகம் ஒவ்வொரு நாளும் மலர்ந்து கொண்டே இருக்கிறது. எல்லா வகையான முரண்பாடுகளை கடந்தே என் பிள்ளைகளை வளர்க்க ஆசைக்கொள்கிறேன். நம் சமுக அமைப்பில் குழந்தைகள் மீதான பெரும் வன்முறை கல்வி.கல்வி என்ற பெயரில் குழந்தை பருவத்தையே பறிக்கும் அந்த கொடுமையை என் குழந்தைக்கு தர துளியும் விருப்பமில்லை. அவர்கள் அவர்களாக வளரவேண்டும். நான் என் பெயர் குறித்து என் அம்மாவிடம் எப்போதும் சண்டைப்போடுகிறேன். என் பெயருக்கான அர்த்தம் தெரியாதது எனக்குள் எப்போதும் பெரும் வருத்தமாய் நீடிக்கிறது. நானே எனக்குள் என் பெயர் குறித்தான பல கற்பிதங்களை உருவாகிக்கொள்கிறேன். என் பெயர் குறித்து யாரவது கேட்டால் நான் எனக்குள் கற்பித்துக்கொண்டதை கேட்டவரும் நம்பும்படி செய்கிறேன். என் பிள்ளைகளுக்கான பெயர்களை இலக்கியங்களில் தேடிக்கொண்டே இருக்கிறேன். "அன்னா கரீனா" என்றோ, "ரஸ்கால்நிகோவ்" என்றோ. மிகபெரும் படைப்பாளியான "அன்டன் செகாவ்" என்றோ பெயர் சூட்ட விருப்பம். இன்னும் பெயர்களுக்கான தேடல் நீண்டுக்கொண்டே இருக்கிறது. என்ன பெயர் சூட்டினாலும், பாலினத்தை கடந்து "நிலா" என்றே அழைக்க ஆசை கொள்கிறேன். எல்லா குழந்தைகளும் படைப்பாளிகள் தான், அறிவாளிகள் தான் ஆனால் கல்வி அவர்கள் அறிவை, படைப்பு திறனை மழுங்கடித்துவிடுகிறது. ஒரு குழந்தை தான் முதன் முதலில் எழுதும் "அ" எனும் எழுத்திற்கு முன் பல நூறு உலகம் காணாத, யோசிக்காத ஓவியங்களை வரைந்துவிடுகிறது. "அம்மா" எனும் சொல்லை சொல்லும் முன் பல நூறு புதிய பாடல்களை, மொழிகளை படைக்கிறது. ஆனால் "அ"வும், "அம்மா"வும் அக்குழந்தையின் அறிவினை அழித்துவிடுகின்றன என்பதே நிஜம். நம் கல்வி குழந்தையை கொலை செய்துவிடுகிறது. வெறும் மதிப்பெண் பெரும் இயந்திரங்கள் நாளை பணம் பெரும் இயந்திரங்களாய் மாற வளர்க்கப்படுகின்றனர். என் நிலா "மதிப்பெண்" என்று முட்டி மோதி போராடுவதை என்னால் கனவிலும் யோசிக்க முடியவில்லை. என் நிலாவிற்கு கல்வி என்னிடமிருந்தே தொடங்கட்டும் நான் படித்த புத்தகங்கள், ரசித்த கலைகள் அவற்றிலிருந்து நிலா கற்றுக்கொள்வாள்/கற்றுக்கொள்வான். புத்தகங்களிலிருந்தும், கலைகளிலிருந்தும், மனிதர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ளாத எதை ஒரு குழந்தைக்கு இந்த இருநூறு வருட பழைய கல்வி முறை கொடுத்துவிடும். விருப்பப்படும் மொழிகளை கற்றுக்கொள்ளட்டும், விருப்பப்படும் படிப்புகளை படிக்கட்டும். ஒரு நல்ல தோழியாய் என் நிலாவிற்கு வழிக் காட்டுவேனே தவிர இதை தான் நீ செய்ய வேண்டும் என்று திணிக்க விரும்பவில்லை. பாசம் எனும் பெயரில் உணர்வுகளை பாதிக்கும் வன்முறைகளை தொடுக்க விரும்பவில்லை, செய்யவும் மாட்டேன். நிலவிற்கான உலகம் அவளுடையது. ஒரு கணித மேதையாய், ஆசிரியராய், நடிகராய், படைப்பாளியாய் எப்படியேனும் இருக்கலாம் ஆனால் எல்லாவற்றையும் தாண்டி மிக உன்னதமான மனிதனாய் இருக்க வேண்டும் என்பது மட்டுமே என் எதிர்பார்ப்பு. நெருப்பு சுடும் என்று யாரோ சொல்வதை கேட்டு நெருப்பை தீண்டாமல் இருக்கதேவையில்லை, நெருப்பு என்றால் இதுதான் அது இப்படிதான் இருக்கும், இதுபோலான வினைகளை புரியும் என்று உணரவேண்டும் என்றே ஆசைக்கொள்கிறேன். எல்லாவற்றையும், எல்லா மனிதர்களையும் நேசிக்க சொல்லித்தருவேன். நிலாவை தூக்கிக்கொண்டு உலகம் சுற்றுவேன்.நிலா முறையான பள்ளி கல்வியில் பயிலவேண்டும் என்று அவசியமில்லை அது நிலாவின் உரிமை.இசையும், கலைகளும், புத்தகங்களும் என்றைக்கும் துணையாக இருக்கும், பயணங்கள் மனிதார்களை அறிமுகப்படுத்தும்.

பயம், வெறுப்பு, கோபம், துரோகம், ஏமாற்றம் இவையெல்லாம் இல்லாமல் என் குழந்தை வளரும் ஆனால் இவை எல்லாம் இல்லாமல் எப்படி ஒரு மனிதன் உருவாக முடியும்? அவை எல்லாவற்றையும் இச்சமுகம் வாரி வாரி கொடுக்கும். கடவுள், சாதி.இவை எல்லாம் என்னவென்றே தெரியாத குழந்தையை கண்டிப்பாக சமுகம் ஏற்றுக்கொள்ளாது,ஒதுக்கி வைக்கவே முயற்சி செய்யும், சமுக பாகுப்படுகளை புறம் தள்ளி மனிதனாய் நிற்க முயற்சிக்கும் மனிதனாகவே நிலா இருப்பாள்/இருப்பான். சமுகம் போற்றினாலும் தூற்றினாலும் அரவணைத்து கொள்வதற்கு எப்போதும் வீடு திறந்தே இருக்கும். நிலா எப்படி வளர்ந்தாலும், எத்துனை முறை தோற்றாலும், எத்துனை முறை ஏமாந்து நின்றாலும், எத்தனை முறை விழுந்தாலும் அது என்னுடைய நிலா. நிலவிற்காக எப்போதும் அவள் வீடு காத்துகிடக்கும். இந்த சமுகம் வஞ்சம், துரோகம், பொறாமை என்று எத்துனை கத்திகளை வீசினாலும் நிலா அனைத்தையும் அன்பால் கடப்பாள்/கடப்பான். அவளின் கண்ணீர் துளிகளை துடைக்க என் கரங்கள் என்றும் காத்துக்கிடக்கும்.என் நிலாவிற்கு அன்பை மட்டுமே தருவேன். ஒருவரின் அன்பு தானே இன்னொருவர் வாழ்வதற்கு நம்பிக்கை தருகிறது. அந்த நம்பிக்கையை தருவேன். என் நிலா அவள்/அவன் வாழ்க்கையை மட்டுமே வாழ்வான்/வாழ்வாள்.! யாரின் எதிர்பார்புகளையும் சுமந்து கொண்டு எனக்கான வாழ்க்கை என்று வாழ்க்கையை சமரசம் செய்துக்கொண்டு வாழத்தேவை இருக்காது. நிலாவின் சுயம் ஒரு போதும் எனக்கு பிரச்சனையாக தெரியாது.

நிலா வளர்வதை ஒவ்வொரு நாளும் ரசித்துக்கொண்டே இருப்பேன். என் குழந்தை பேசிய மொழியற்ற முதல் வார்த்தை என் நாட்குறிப்பில் இருக்கும், பேசிய முதல் நாள், நடக்க தொடங்கிய முதல் நாள், நட்பென்று அறிமுகம் செய்து வைத்து நிலாவாய் உருவாக்கி கொண்ட முதல் உறவு என்று எல்லவற்றையும் என் நாட்குறிப்புகளிலும், புகைபடங்களிலும் நிலைத்து நிற்கும். நிலா நிலாவாக வாழ்வாள்/வாழ்வான். உறவுகள் சுமையாக கருதும் வலியை நான் ஒரு போதும் நிலாவிற்கு தரமாட்டேன். என் நிலாவிற்கு என் முத்தங்கள். இன்றைக்கும் எப்போதும் எந்நிலையிலும், எந்த வயதிலும்..

ஆனால் இக்கனவுகளை தாண்டி எதார்த்தத்தில் திருமணமும், சமூகமும் என் கனவுகளுக்கும், நிலாவுக்கும் எதிராகவே இருக்கிறது.

உண்மை, பொய்களை கடந்தவர்கள் ....

வாழ்க்கையின் உன்னதத்தையும்,சந்தோஷத்தையும் குழந்தைகளிடம் இருந்து மட்டும்தான் கற்று கொள்ள முடியும். அவர்களால் மட்டும் தான் அதை முழுமையாக வெளிப்படுத்த முடியும். இதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன்.நம்மைப் போலின்றி எதிர்பார்ப்புகளும், போலிகளுமின்றி மிகவும் எதார்த்தமாக எல்லாவற்றையும் நேசிக்க குழந்தைகளால் மட்டுமே முடியும்.
வாழ்க்கையும் சமூகமும் நாம் நினைப்பதைக் காட்டிலும் வெகுவேகமாய் மாறிக்கொண்டே இருக்கிறது. என் பிள்ளைப் பருவத்தில் நான் பார்த்து ரசித்து விளையாடிய அனைத்தும் இன்று பெரும்பான்மை குழந்தைகளுக்கு அந்நியப்பட்டே கிடக்கிறது, இன்றைய குழந்தை வளர்ப்பு முறை, வளரும் சூழல், குழந்தைகள் மீது திணிக்கப்படும் விஷயங்கள், கல்வி என்ற பெயரில் 'கல்வியாளர்கள்' நடத்தும் வன்முறை, "அன்பு வன்முறை" - பாசம், குழந்தை வளர்ப்பு எனும் பெயரில் குழந்தைகள் மீது ஏவப்படும் வன்முறை.
"கல்வி வன்முறையை" நாம் நன்கு அறிவோம். பள்ளிகளில் நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான அடக்குமுறைகளும், வன்முறைகளும் நாம் கேள்விப்பட்டதையும் படித்ததையும் விடவும் அதிகமாவே  நடக்கிறது. சில பெற்றோர்களுக்கு இது அவசியமானதே  என்று கருதுகின்றனர். அவர்களுக்கு பிள்ளைகளின் பால்ய பருவத்தைப் பற்றி கவலை  இல்லை, மிகுதியான பெற்றோர்கள் எப்படியாவது தங்கள் பிள்ளைகளை IIT, IIM போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்த்து விடுவதே வாழ்க்கையில் பிள்ளைகளை உயர்த்தும் செயல் என்றும் கருதுகின்றனர். இதற்கு எதிராக குரல் கொடுக்கும் சில பெற்றோர்களும் உண்டு, ஆனால் அது மிகச் சிலர் மட்டுமே. இந்த சமுகத்தில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையும் கல்வி, அன்பு,பாலியல்,ஊடகம் என்று இருக்கின்ற அத்துணை அமைப்புகளாலும் வன்முறைக்கு ஆளாகின்றனர்.அன்பு எனும் போர்வையில் பெற்றோர்கள் குழந்தைகள் மீது ஏவும் வன்முறைகளை நாம் பெரிதுபடுத்துவதில்லை. அது குழந்தை வளர்ப்பு முறைக்குள் அடங்கிவிடுகிறது. ஆனால் குழந்தைகள் மீது ஏவப்படும் குற்றங்களில் பெரும்பான்மையான குற்றங்கள் பெற்றோர்களால் மட்டுமே நடத்தப்படுகிறது.
பிள்ளைகளுக்கு counselling எனப்படும் மனநிலை ஆலோசனைகள் ஒரு trend ஆக உள்ளது. சில ஆண்டுகள் முன்பு உண்மையாகவே குழந்தைகளிடம் புரிந்து கொள்ள முடியாத மாற்றங்கள் அல்ல, செயல்கள் இருந்தால் கூட அவர்களை ஆலோசனை மையங்களுக்கு அழைத்துச் செல்லத் தயங்கினர். தங்கள் குழந்தையை மற்றவர்கள் மனநோயாளி என்று நினைத்து விடுவார்கள் என்று பயப்படுவர். counselling என்றாலே மனநோயுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர்.இப்போது நாம் அதை எல்லாம் கடந்து விட்டோம். ஆலோசனை மையங்களில் கூட்டம் அலை மோதுகிறது. ஆனால் அதற்கான காரணங்கள்தான் அபத்தமாக உள்ளது.
இது என்னிடம் படிக்கும் சாத்விகா என்ற குழந்தையின் கதை. அவள் அம்மா என்னிடம் பகிர்ந்து கொண்டதும் அவளின் உண்மைகளும். சாத்விகாவை எனக்கு ஓர் ஆண்டாகத் தெரியும். முதல் இரண்டு நாள் என்னிடம் பேசவே இல்லை. ஏதோ கதைகள் சொல்லி, சாக்லேட் வாங்கிக் கொடுத்து, அவள் டிரஸ் அழகாக இருக்கிறது என்றெல்லாம் சொல்லிய பிறகே பேச ஆரமித்தாள். இப்போது அவள் நேற்று இரவு கண்ட கனவைக் கூட என்னிடம் பகிர்ந்துக் கொள்கிறாள். நான் அவளைப் பற்றி இங்கு பதிவிடுவதற்கு இரு நம்பிக்கைகள் உண்டு. ஒன்று, அவள் பெற்றோருக்கு இது சென்று அடையாது என்ற நம்பிக்கை. இன்னொன்று, அவளின் பெற்றோர் போல் இருக்கும் மற்றவர்களுக்கு எல்லாம் சென்றடையும் என்ற நம்பிக்கை.
சாத்விகா பிறந்து இரண்டு மாதத்தில் அவள் அம்மா பணிக்குச் செல்ல ஆரம்பித்தாள் தாதியின் அரவணைப்பில் வளர்ந்தாள். அவள் அம்மா குழந்தைக்குத் தேடி தேடி விலைஉயர்ந்த உணவு வகைகள் மட்டுமே வாங்கித் தருவார், இருந்தும் அவள் மெலிதாகவே இருந்தாள். இரண்டு வயது குழந்தைக்கு ஒரு கிண்ணம் நிறைய சாப்பாடு போட்டு அம்மா ஊட்டுவார். கொஞ்சம் சாப்பிட்ட உடனே வாந்தி எடுத்து விடுவாள் சாத்விகா . அம்மா கோபத்தில் பிள்ளையை அடித்து மீண்டும் சாப்பிட வைப்பார். கொஞ்ச நாட்கள் கழித்தே சாத்விகா உண்ணாததின் உண்மை புலப்பட்டது. வேலை செய்யும் தாதி குழந்தைக்கு சாப்பிடத் தரமால் அவளே அனைத்தையும் உண்டிருகின்றாள் அதுனால் சிறுமியின் குடல் சுருங்கியே இருந்திருகிறது சிறிது அதிகமாய் உண்டாலே வாந்தி எடுக்கும் நிலைக்கு ஆட்பட்டாள். .
சாத்விகாவின் அப்பா தன் பெண் தன்னுடைய நண்பர்களின் குழந்தைகளை விட ஒரு படி மேல் இருக்க வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டுக் குழந்தை ஏதாவது வகுப்பில் சேர்ந்தால் உடனே தன் மகளையும் சேர்த்து விடுவார். சிறு வயதில் இருந்தே அளவுக்கு மீறிய பாடங்கள் கற்றுத் தரப்பட்டது. மார்க் குறைவாக வாங்கிவிட்டால் அன்றைக்கு முழுவதும் சாப்பாடு இல்லை.இப்போது சாத்விகா நான்காம் வகுப்பு படிக்கிறாள். அப்பா வெளிநாட்டில் இருக்கிறார். சாத்வி அம்மாவுடன் சென்னையில் வாழ்கிறாள். அவள் எப்போதும் இயல்பானவளாய் இருப்பதில்லை, எல்லாவற்றிற்கும் அச்சப்படுகிறாள் பயம் அவளோடு சேர்ந்து ஜீவிக்கிறது.
என்னைப் பொறுத்த வரை சாத்விகா அற்புதமான குழந்தை. மொழி ஆளுமை மிக்கவள். தமிழ் உச்சரிப்பு அழுத்தம் திருத்தமாக இருக்கும். ஆங்கிலமும் சரளமாகப் பேசுவாள். எதையும் எளிதாகப் புரிந்து கொள்வாள். ஆனால் ஏதாவது கேள்வி கேட்டால் நிறைய யோசித்தே பதில் சொல்லுவாள். எதையாவது செய்ய சொன்னாலும் யோசிப்பாள். அதற்கு காரணம் "பயம்". குழந்தை மனது முழுவதும் அச்சத்தால் நிரம்பி வாழ்கிறது. தான் சொல்லும் சொல்லோ அல்லது தான் செய்யும் செயலோ தன் அம்மாவையும் அப்பாவையும் திருப்திபடுத்துமா என்று சந்தேகம். அவர்களின் எதிர்ப்பார்ப்புகள் தான் அவளின் மிகப் பெரிய சுமை. அவர்களைத் திருப்திபடுத்துவதை விட வாழ்கையில் வேறு எதுவுமில்லை என்று அவள் நம்புகிறாள். நான்காம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கடமை. எதாவது தப்பு செய்து விடுவோமா என்ற பயத்தால் மிகவும் மெதுவாகத் தான் எழுதுவாள். தவறைத் திருத்திக் கொள்ளும் பக்குவம் சாத்விகாவிடம் இருக்கிறது. ஆனால் தவறுகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம் அவள் பெற்றோருக்கில்லை.
நான் ஒரு முறை வீட்டுக்கு போனபோது முட்டி போட்டிருந்தாள். அவள் அம்மாவோ உணவு உட்கொண்டிருந்தார். வீட்டுப் பாடம் சொல்லிய நேரத்தில் முடிக்காததால் தான் அந்த தண்டனை. இப்படி முட்டி போட வைத்தால் அவள் குறித்த நேரத்தில் எழுதிவிடுவாளா என்றேன். நான் ஏதும் சொல்லவில்லை, அவளே தன் தவறுக்காக தனக்குத் தானே தண்டனை கொடுத்துக்கொண்டாள் என்றார் அவளின் தாய். நரம்பில் வென்னீர் ஊற்றியது போல் இருந்தது. கண்களில் நீர் தேங்கியது. இந்த வயதிலேயே குழந்தை தன் இயலாமைகளைத் தோல்வி என்று ஏற்றுக்கொள்கிறது. இயலாமை என்பதும் சரியான வார்த்தை இல்லை. படைப்புகளின் அழகே ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பதுதானே. குழந்தை மெதுவாக எழுதுகிறது, கவனத்தை சிதறவிடுகிறாள் என்பதற்காக ஆலோசனை மையத்துக்கு அழைத்துச் சென்றனர் அவள் அம்மா. சாத்விகா தனக்கு நிஜமாகவே ஏதோ பிரச்சினை என்று நம்பினாள்.
ஆனால் ஒரு விஷயத்தைக் ஏற்றுக் கொள்ள வேண்டும் ஆலோசனை மையத்துக்கு அழைத்துச் சென்ற பிறகு குழந்தையிடம் நிறைய மாற்றம் இருந்தது. எல்லாவற்றிலும் ஒரு ஆர்வம் இருந்தது. உண்மையில் அந்தக் குழந்தையை அப்படிப் பார்த்தது என் வாழ்கையில் சந்தோஷமான தருணம். என்னிடம் படிக்கும் பெண் என்பதை தாண்டி ஏதோ ஒன்று சாத்விகாவை நேசிக்க வைக்கிறது.
நேற்று ஒரு அங்கிளைப் பார்த்தாயே அவர் என்ன சொன்னார் என்று கேட்டேன். கண்களை விரித்து கொண்டு அத்தனை ஆச்சரியமாக சொன்னாள், "அவர் என்னாலும் மற்ற பிள்ளைகளை போல் இருக்க முடியும் என்றார்". கத்தியால் குத்தியது போல் இருந்தது. இந்த ஒரு வார்த்தைக்காக அந்த குழந்தை எத்தனை ஏங்கி இருக்கும். இந்த வார்த்தையை ஏன் ஒருபோதும் அவள் அம்மா சொல்லவில்லை? நாளைக்கு அந்த குழந்தையின் எல்லா வெற்றிக்கும் அந்த பெயர் தெரியாத அங்கிளைத் தான் நினைத்துக் கொள்ளும் அவளின் பெற்றோரை அல்ல, எத்தனை பெரிய கொடுமை. இன்னமும் அந்த அம்மா பிள்ளையின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சிறு வயதில் சாப்பாடு ஒழுங்காக கொடுக்காததுதான் காரணம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார். இவரின் அபத்தமான எதிர்பார்ப்புகளும் கோபங்களும்தான் காரணம் என்பதை உணரவில்லை.
எதிர்பார்ப்புகள் மட்டும் காரணம் இல்லை, இப்போது உள்ள பல பெற்றோர்களுக்குப் பொறுமை இல்லை. குழந்தை அதன் வயதுக்குரிய இயல்புகளுடன் வளர்வதை பார்க்க பொறுமை இல்லை. உடனடியாக வளர்ந்து விட வேண்டும் எல்லாவற்றையும் உடனடியாய் கற்று கொள்ள வேண்டும் படிக்க வேண்டும், எழுத வேண்டும், வரைய வேண்டும், ஓட வேண்டும், சாப்பிட வேண்டும், பாட வேண்டும், ஆட வேண்டும் இதில் எதுவும் தப்பு இல்லை. ஆனால் எல்லாவற்றையும் ஒரே நாளில் கற்று கொள்ள வேண்டும் இதில் எந்த தவறும் செய்து விடகூடாது என்று எதிர்பார்ப்பது தான் சகித்துக் கொள்ள முடியவில்லை . எதாவது தவறு செய்து விட்டால் பெற்றோர்களால் ஏற்க முடியவில்லை.
எனக்கு சிறு வயதில் பேச்சு விரைவாய் வரவில்லை என்று என் குடும்பத்தினர் சொல்லுவது உண்டு. எந்த வாக்கியத்தையும் முழுமையாகச் சொல்ல மாட்டேன் எல்லாவற்றிலும் ஒரு இடைவெளி உண்டு. இது எதுவும் எனக்கு நியாபகம் இல்லை . ஆனால் சில விஷயங்கள் நினைவில் உண்டு. என் அம்மா பிஸ்கட் பாக்கெட்டைக் கையில் வைத்துக் கொண்டு என்னைப் பார்பார். நான் கை நீட்டினால் தர மாட்டார். அழுது அடம் பிடித்தாலும் தர மாட்டார். வாயைத் திறந்து 'எனக்கு அது வேண்டும், பிரித்துக் கொடு' என்று முழுமையாக சொன்னால் மட்டுமே கொடுப்பார். தேவை என்று வந்தால் இயலாமைகளைத் தாண்டி தானே போக வேண்டும். அப்படித் தான் நான் ஒழுங்காக பேசக் கற்றுக் கொண்டேன். நான் தரையில் விழுந்து விட்டால் , என் பாட்டி ஓடி வந்து என்னைத் தூக்கி , இந்த தரை தானே உன்னை விழுக்ச் செய்தது, தரையை அடித்து விடலாம் நீ அழுகாதே என்று தரையை சும்மா தட்டுவார். என் அப்பாவோ "அப்படி சொல்லிக் கொடுக்காதீர்கள், எப்போது விழுந்தாலும் யார் காரணம் என்றே யோசிப்பாள் அவள் விழுந்ததுக்கு அவள்தான் காரணம், விழுந்தால் என்ன தூக்கி விடுவதற்குத் தான் இத்தனை பேர் இருக்கோமே எந்திரித்து ஓடட்டும்" என்றார். அப்போது எனக்கு புரியவில்லை. அப்போது மனதில் ஓடியதெல்லாம் அப்பாவை விட பாட்டிக்குத் தான் என் மீது பாசம் அதிகம் என்று. இப்போது உணர்கிறேன், என் அப்பா எனக்குச் சொல்லித் தந்த முதல் பாடம் ஒவ்வொருநாளும் உணர்கிறேன்.
பெற்றோரின் இந்தப் பொறுமையும் எதார்த்தமும தான் குழந்தைகள் வளர்வதற்கு தேவை. எதிர்பார்ப்புகளும் கனவுகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு குழந்தை வளர்வதை ரசியுங்கள். அவர்களின் வெற்றிகளையும் தோல்விகளையும் மதியுங்கள். குழந்தை வளர்வதற்கு நல்ல சூழலை மட்டும் உருவாக்கிக் கொடுங்கள் , விதை போடுவது மட்டும் தான் நம் கடமை. அது மாமரம் ஆக வளரலாம், ரோஜாவாக வளரலாம், வேப்ப மரமாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது உங்கள் குழந்தை,உங்களை முழுதாக நம்பும் உங்கள் குழந்தை. அதே நம்பிக்கையை அவர்கள் மீது வையுங்கள்.
சென்னை வந்த இரண்டு வருடத்தில், பல விதமான மனிதர்களை சந்திக்க நேரிட்டது, புதிய புதிய புத்தகங்கள் படிக்க முடிந்தது, சில கலைகளைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது, புதிய இடங்களுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. புதிய உலகங்களை அமைப்பதும் உடைப்பதுமாக இருந்தாலும் 20 வயதுக்கு மேலாகியும் எனக்கு இன்று வரை முழுமையான சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரக் கூடியது என் குடும்பம்தான். 8 வயதுக் குழந்தைக்கு என்ன அனுபவம் இருக்க முடியும்? என்ன ஒரு உலகத்தை எதிர்பார்க்க முடியும்? அதற்கு இருக்கும் ஒரே உலகம் பெற்றோர் தான். மற்றவர்கள் வெறும் வழிப்போகர்கள்தான். ஒரு நல்ல குடும்பத்தைக் கூட அமைத்துத் தர முடியவில்லை என்றால் என்ன பயன். நீங்கள் நம்பிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள், உங்கள் பிள்ளைகளும் அப்படியே வளரும்.
இறுதியாக, இப்போது தான் நினைவுக்கு வருகிறது . ஒரு முறை சாத்விகாவிடம், சாலையில் ஒருத்தி குழந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறாள். என்ன செய்வாய்? என்றேன். எனக்குத் தெரிந்து யோசிக்காமல் அவள் சொன்ன ஒரே பதில் இதுதான். அந்த குழந்தைக்கு முத்தம் தருவேன் என்றாள். இது வெறும் பதில் இல்லை. அவள் எதற்காக ஏங்குகிறாளோ, எது சந்தோஷமாக இருப்பதற்கு முக்கியம் என்று நினைக்கிறாளோ அதை வெளிப்படுத்துகிறாள். எதிர்பார்ப்பில்லா அன்பை எதிர்பார்க்கும் இந்தக் குழந்தையை நேசிக்காமல் இருக்க முடியுமா? சாத்விக்கு என் முத்தங்கள். என் பெற்றோருக்கு நன்றியாக என் கண்ணீர் துளிகள். நல்ல வேளை நான் 20 வருடங்களுக்கு முன்பே பிறந்து விட்டேன். இல்லையெனில் குழந்தைப் பருவம் என்ற ஒன்றே எனக்கு இல்லாமல் போய் இருக்கும்

கலையும் - வாழ்வும்


இப்போதெல்லாம் புதிய புத்தகங்களை தேடி படிப்பதை விட பழைய  புத்தகங்களை தேடி செல்வதே மனம் விரும்புகிறது. மறுவாசிப்பு புதிய புதிய அர்த்தங்களை தருகிறது. வாழ்கையை புதியதொரு கோணத்தில் காட்டுகிறது.  நான் சமீபகாலத்தில் பெறும் அனுபவங்கள், வலிகள் எல்லாம் சில கதாபாத்திரங்களை  நினைவு படுத்திகிறது. அப்போது தூரமாக நின்று வாசித்தேன்.  இப்போது மனதில் வைத்து கொண்டாடுகிறேன். அப்போது நான் அவர்களை பல கேள்விகளுக்கு உட்படுத்தினேன். இப்போது முழுமையாக ஏற்றுகொள்கிறேன். அப்போ தெரியவில்லை நானும் ஒரு நாள்  அவர்களாக மாற கூடும் என்று.
post - independence யில் வெளி வந்த நாடகங்களில் , கிரிஷ் கர்னாடு ( Girish Karnad ) மோகன் ராகேஷ்( Mohan Rakesh ) தாரம்விர் பாரதி ( Dharamvir bharathi ) மொஹிட் சட்டோபதே (Mohit Chattopadhyay ) ஹரின்றநாத்  சட்டோபதே( Harindranath Chattopadhyay ) திலிப் குமார் ராய் ( Dilip Kumar Roy ) தி பி கைலாசம் ( T P Kailasam ) வி வி ஸ்ரீநிவாஸ் ஐயங்கார் ( V V Srinivas Iyengar ) குறிப்பிடதக்கது. பெண் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் பாரதி சாராபாய்  ( bharathi  Sarabhai ). இவரின் Well of the People மற்றும் Two Women என்ற நாடகம் மனிதர்களிடம் மனித உணர்வை விட சாதி உணர்வு அதிகமாக இருப்பதையும், கலாச்சாராம் என்ற பெயரில் பெண்களை அடக்குமுறைக்கு   உட்படுத்துவதையும் கவிதையாக வர்ணிக்கும்.
                                                   என் மனதுக்கு மிகவும் நெருங்கியவர் நிசிம் எசிகள் ( Nissim Ezekiel ) இவருடைய Dont Call it Suicide என்ற நாடகத்தின் காட்சிகள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது.  இதில் வரும் முக்கிய கதாபாத்திரத்துக்கு பெயர் இல்லை. என்னினும் இவனில் இருந்து தான் கதை தொடர்கிறது. இவன் இறந்து சில ஆண்டுகள் ஆயிற்று. இவனின் நினைவுகள் வாழ்ந்து கொண்டுயிருக்கும் தன்னுடைய அப்பா நந்தா வை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறது.  அவனால் தன் தம்பி தங்கையை போல் நல்ல  மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை. குறைந்த சம்பளத்துக்கே வேலை கிடைக்கிறது. கல்யாணமாகி சில ஆண்டுகளிலே தற்கொலை செய்து கொள்கிறான்.
                                               இவனின்  நினைவுகள் வரும்போதெல்லாம் நந்தா மிகவும் வேதனை அடைகிறார். புரிந்து கொள்ள முடியாத குற்ற உணர்ச்சியும், பிரிவின் வலியும் ஒன்றுகலந்து வந்து அவரை நிலை குலைய செய்கிறது. அவனின் நினைவுகளை மறந்து நிகழ காலத்திலே மட்டும் வாழ்பவர் தன் மனைவி திருமதி. நந்தா  ( தற்கொலை செய்து கொண்டவனுக்கு பெயர் இல்லாமல் இருப்பது கூட பெரிதாக தெரியவில்லை ஆனால்ஒரு பெண் அதுவும் மன வலிமை அதிகம் உள்ள பெண்ணுக்கு ஏன் இதில் பெயர் இல்லைஎன்று தெரியவில்லை வெறும் திருமதி. நந்தா என்றே அழைக்கபடுகிறார்) நந்தாவிற்கு தன் இறந்த மகனின் நினைவு வராமல் இருக்க பாடுபட்டு கொண்டே இருக்கிறார். மகனின் சாவை பற்றி வீட்டில் பேசுவதை தவிர்க்கிறார். நந்தா வோ தன் மகனின் சாவை பற்றி யாரிடமாவது பேச வேண்டும் என்று ஏங்குகிறார்.
                                  தன்னுடைய நெருங்கிய நண்பர் சத்தே (sathe ) வீட்டுக்கு வருகிறார். தன் மனைவியின் எச்சரிக்கையை மீறி தன் மகனை பற்றி சத்தே விடம் பேச முயற்சி செய்கிறார். தன் கேள்விகளுக்கு பதில் சொல்ல சொல்லி கெஞ்சுகிறார். தன் மகனை நன்றாகவே பார்த்து கொண்டேன். படிப்பும் வேலையும் பெரிதாக இல்லாத போதிலும் எவ்விதத்திலும் குறை வைக்கவில்லை. நல்ல இடத்தில் கல்யாணம் செய்து வைத்தோம் பின்  ஏன் அவன் தற்கொலை செய்து கொண்டான்? நான் எதாவது தவறு செய்து  விட்டேனா என்று பல கேள்விகள் முன்வைக்கிறார்.
                                          சத்தே மிகவும் தயங்கி விளக்கம் சொல்லுவார். All human beings  needs loving acceptance and not just tolerance . எத்தனைஅற்புதமான வரி! சகித்து கொள்வதற்கும் முழுமையாக ஏற்று  கொள்வதற்கும் வித்தியாசங்கள் உண்டு. நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மை  சகித்து கொள்ள கூடியவர்களாக  இருக்க கூடும் ஆனால் நம்மை முழுமையாக ஏற்று கொண்டார்களா என்றால் விடை தெரியாத கேள்வியாகவே இருக்கும். நாமும் பல பேரை சகித்து கொள்கிறோமே தவிர யாரையும் ஏற்று கொள்ள முயற்சி செய்வது இல்லை. வாழ்கையில் தோல்வி அடைபவர்கள் எதிர்பார்ப்பது சக மனிதர்கள் அவர்களை ஏற்று கொள்வது தான். சகித்து கொள்வது அவர்களை மேலும் துயரத்துக்கு இழுத்து செல்லும். இந்த உண்மையை உணர்ந்த நந்தா தூக்க மாத்திரை சாப்பிட்டு  உயிரை  விடுகிறார். இந்த நாடகத்தின் கடைசி வரி மட்டுமே பல கேள்விகளை கேட்க தோன்றும். திருமதி நந்தா ,தற்கொலை செய்து கொண்டவனின் மனைவி மாலினி யை கட்டிபிடித்து ..'oh ! my dear child ' என்கிறார். அதோடு நாடகம் முடிகிறது.
                    நந்தா இருக்கும் வரை மாலினியை ஒரு பொருட்டாகூட மதித்தது இல்லை. அவளுக்கு படிப்பு அறிவு இல்லதானால் தன் உழைப்பில் வாழ முடியவில்லை. அவளின் வீட்டுக்கு சென்றால் தன் நிலையை எண்ணி பெற்றோர் தினம் தினம் வருத்தபடுவார் என்று அங்கேயும் செல்ல முடியவில்லை. அவளை எப்போதும் ஒதுக்கியே வைத்திருப்பார். ஒரு போதும் அவர்கள் ஒன்றாக சாப்பிட்டது இல்லை. நந்தாவின் மரணம் அந்த ஒரு நொடி அவள்  மனதில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. கணவன் இறந்து விட்டார் என்பதை உணர்ந்த அவள், அடுத்த நொடி மாலினியை மகளே என்று அணைத்து கொள்கிறார். தான் உயிருடன் இருக்கும் போதே கணவன் தற்கொலை செய்து கொள்வதனின் வலியை உணர்ந்ததாலோ, தன்னுடைய இயலாமையின் காரணமாவோ மாலினியின் நிலை அவளுக்கு புரிந்து இருக்க கூடும். ஆனால் அந்த ஒற்றை நொடி பெரிய மாற்றத்தை கொண்டு வருகிறது.
                                             நான் முதன் முதலில் படித்த போது பெயர் இல்லாத அவன் மீது கோவம் வந்தது. முதல் காரணம் தன்னை நம்பி வந்த அந்த பெண்ணை  விட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டானே அவளை பற்றி நினைத்திருக்க வேண்டாமா, படிப்பும் சம்பளமும் மட்டும் ஒருவனின் வாழ்கையை தீர்மானம் செய்ய முடியுமா? எதற்காக தற்கொலை செய்துகொண்டான் என்று. கேள்விகள் தான் எத்தனை சுலபமாக வருகிறது. ஏனோ அவனின் சிந்தனைகளை மன அழுத்தத்தை அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை.
                                     இப்போ ஏதோ ஒன்று என் மனதை அழுத்துகிறது. சத்தே வின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் படிக்கிறேன். நந்தாவின் மகன் இயல்பகாவே அதிகம் யாருடனும் பேசாதவன். படிப்பு இல்லை என்றால் என்ன.  வாழ்கை க்கு அது தேவை இல்லை என்று சொல்வது சுலபமாக இருக்கிறது. ஆனால் அதை நம் சமூகம் ஏற்று கொள்கிறதா? நாம் எதையாவது ஒன்று இந்த சமூகத்திற்கு வெளிப்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். பட்டாம்பூச்சியை தான் நம்மால் ரசிக்க முடியும் அது பட்டாம்பூச்சியாய் ஆகுவதற்கு முன்பு இருந்த வடிவத்தை ஆங்கிகாரம் கொடுத்தது இல்லை. மதித்ததும் இல்லை. குறைகளை நாம் ஏற்று கொள்வது இல்லை. இதில் நிசிம் எசிகள் ( Nissim  Ezekiel ) உன்னதமான உண்மையை  உணர்த்துகிறார். படிப்பும் வேலையும் மட்டும் அவன் வாழ்வை முடித்து கொள்ள காரணம் இல்லை. அவனுக்கு வாழ்வின் மீது நம்பிக்கை வருவதற்கு, தன் எண்ணங்களை வெளிபடுத்துவதற்கு அவனிடம் எந்த ஒரு கலையும் இல்லை. வாழ்வின் மிக ஆழமான துயரங்கள், வலிகள் எந்த ஒரு மனிதனும்  சக மனிதனிடம் தனியாக சொல்லியது இல்லை. அதனின் வலிமையை ஓவியமாகவும், எழுத்தாகவும், சிற்பமாகவும் ஏதோ ஒரு கலை வடிவத்தில் இருக்கிறது. மரணத்தை வெல்ல கூடிய சக்தி கலைகளிடம் இருக்கிறது.
                      படிப்பை முடித்து பல கனவுகளுடம் புதிய உலகத்திற்கு நான் கால் எடுத்து வைத்த போது தெரியவில்லை ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் என்று. சூழ்ச்சிகள் நிரம்பிய இந்த உலகதில் நான் பற்றி கொள்வதற்கு, மனதுக்கு ஆறுதல் தர இருந்த ஒரே ஜீவன் புத்தகங்களும் ஓவியங்களும் தான் இங்கே அறிவுக்கு கும் , பற்றுக்கும் எந்த மரியாதையும் இல்லை, மீண்டும் அடிமை படுத்தவே வலை விரித்து உள்ளனர். கொள்கைகள், ஆசைகள், கனவுகள் ஒரு போதும் நமக்கு சோறு போடாதே .எதார்த்தத்தை ஏற்று கொண்டு, அதே வலையில் தானாகவே விழ நேரிடும் வலி வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று. வலையில் இருக்கும் சிறிய சிறிய ஓட்டைகளே கலைகள் ஆகும். அதன் மூலமாக தான் சுவாசிக்க முடிகிறது. அந்த கலை என்ற சுவாசம் இல்லை என்றால் என் நிலையும் அந்த பேர் தெரியாதவனின் நிலையையாக தான் இருந்திற்க கூடும்.  எல்லாவற்றையும் ஏதோ ஒரு சந்தற்பத்யில்தொலைத்து விட்டு, உலகத்திற்காக நம் இயல்புகளை மாற்றி கொண்டு வாழ்பவர்களை எல்லாம் வாழ வைப்பது கலை மட்டுமே.
             என்னை போன்று ஒருவளை புத்தகத்தில் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன், கண்ணீர் சிந்துகிறேன், எனக்குள்ளே சிரித்து கொள்கிறேன், என்னால்  மட்டுமே உணர முடியும் என்று நான் நம்புவதை அவளுடன் பகிர்ந்து கொள்கிறேன். என் கோவத்தை காகிததில் எழுதி தீர்த்து கொள்கிறேன். என் உடைந்த கனவுகளை வண்ணங்களாக தீட்டி அது மீண்டும் உயிர் பெற்று விட்டதை போல் பொய்யாக மகிழ்கிறேன். Frida போன்றவரின் வாழ்கையை படித்து ஏதோ ஏதோ நம்பிகையை வளர்த்து கொள்கிறேன்.
               ஏனோ அவனுக்கு தன் வலியை வெளிபடுத்த எந்த வழியும் இல்லாமல் போயிற்று. அவனுக்கு எந்த கலையும் கைகொடுக்க வில்லை தன்  இயல்பை ஏற்று கொள்ள மறுத்த இந்த உலகதினரிடம் எதிர்பார்பதற்கும் நம்பிக்கை வைப்பதற்கும் என்ன இருக்க முடியும். என் சுயத்தை அழித்து கொண்டுஉணர்வகள் அற்று வாழ்ந்து இருக்கும் போதும் கலைகள் மூலம் என் சுயம் வெளியே வருகிறது. அவன் சுயத்தை அழிபதற்கு உலகமே காத்து   கொண்டிருக்கும் போது அவன் தற்கொலை செய்து கொண்டது எனக்கு இப்போது வியப்பாக இல்லை. கோவம் இல்லை. என்னை மாதிரி ஒருவன் கரைந்து போனதை நினைத்து கண்ணீர் மட்டுமே தேம்பி நிற்கிறது.

சென்னை ..!

இன்னும் இரண்டரை மாதங்களில் அப்பாவின் கனவு நிறைவேறிவிடும்.. சென்னை பல்கலைகழகதின் முதுகலை பட்டம் தங்கிய என் புகைப்படத்தை அப்பாவும் அம்மாவும் பெருமிதத்துடன் வீட்டு சுவரில் மாட்டக்கூடும். பெண்,குடும்பம்,கலாச்சாரம் இப்படி எந்த அடையாளமுமின்றி எனக்கென்று  ஓர் உலகை அமைத்துகொள்ளும் கனவுடன் இப்பெருநகருக்கு வந்து இரண்டு வருடங்கள்  முடியப்போகிறது. எனக்கான  உலகத்தை கட்டமைப்பதும் அதை களைவதுமாய் நாட்கள் கடந்துவிட்டன, இந்த இரண்டு வருடத்தின் நாட்காட்டி வெறுமையால் நிரம்பிகிடக்கிறது. இலக்கியமும்,அனுபவமும் ,கனவுகளும்,பாடங்களும் அர்த்தமில்லாத சந்தோஷங்களையும்,வலிகளையும் மட்டுமே  பரிசளித்திருக்கிறது. ஒரு போதும் இவை சோறு போடுவதற்கான வழிகளை திறக்கப்போவதில்லை என்பதை நன்கு உணரமுடிகிறது. இருந்தும் இலக்கியமும், எழுதவேண்டுமென்ற ஆர்வமும் பெரும் விலங்காய் என்னை துரதிக்கொண்டேயிருக்கிறது தப்பிக்க வழியற்று ஒடிக்கொண்டேயிருகிறேன். எனக்கான கற்பனை உலகம் என்னை தனிமை படுத்தினாலும், என்னை கடித்து தின்றாலும் கையில் ஏந்தி கொள்வதற்கு என்றுமே  அப்பா தன் கைகளை விரித்தே வைத்திருக்கிறார். எத்துனைத்தான் நான் தனிமையை காதல்கொன்டாலும் மனம் ஒரு நொடியேனும் அப்பா அம்மாவை நினைக்கத்தான் செய்கிறது, அவர்களின்றி என் வாழ்க்கை வெறுமையானதாய் மட்டுமே இருக்கும். நம்பிக்கை சிதைந்துப்போன நிலையில் இதை எழுதிக்கொண்டிருகிறேன். ஏமாற்றம், துரோகம், வஞ்சம், பொறாமை இவைகள் மட்டுமே நிரம்பிய என் உலகில் இன்னும் சிறிதேனும் காதலும், கனவுகளும்  இருக்கவே செய்கிறது. நீண்டக்கால தோழிகள், எதிர்பாராமல் முறிந்த உறவின் காயங்கள், பெயர் சூட்ட முடியா உறவு,மௌனமான காதல், இயலாமையை,கோபத்தை எழுத்து மூலம் வெளிபடுத்தியதால் கிட்டய நண்பர்கள், இலக்கிய வாசிப்பினால் கிடைத்த தோழமைகள், உதவிகள்,  நான் பெண் என்பதால்  மட்டுமே கிடைத்த  உதவிகள் இப்படி எல்லாம் நிறைந்துள்ளது வாழ்க்கை. 
    தனியானான பேருந்துப்பயணம், அதிகாலை கடற்க்கரை, வழி தெரியா சாலையில் தனியாக அலைந்தது, பத்திரிக்கையாளர் எனும் பொய்யான அடையாளத்தைகொண்டு சிற்ப கலைஞன் ஒருவரின் கதை கேட்டது, யாரிடமும் சொல்லாமல் ஒரு நாள் முழுதும் தனியாக மாமல்லபுரத்தில் அலைந்தது,கையில் இருக்கும் காசுக்கெல்லாம் புத்தகங்கள் வாங்கியது. இப்படி நானாய் வாழ்ந்த சில தருணங்கள் நியாபக இடுக்குகளில் படிந்தே கிடக்கின்றன. மிகுதியனா தருணங்களில் நானும் ஓட்ட பந்தய குதிரையாய் எதற்கு ஓடுகிறேன் என தெரியாமல்  ஓடிகொண்டேயிருந்தேன்.  அறை சுவர்கள் என்றைக்கும் கழுத்தை நெரித்து கொண்டே இருக்கின்றன, நான் காதலித்த தனிமை மிக பெரிய எதிரியாக நிற்கிறது.பெண்ணியம் எப்படியெல்லாம் தவறாக புரிந்து கொள்ள முடியுமோ  அப்படி எல்லாம் புரிந்து கொண்ட ஒரு கூட்டதின் பிடியிலிருந்து பிழைப்பதே பெரிய போராட்டமாக இருக்கிறது. ஒரு கலைஞனாகவோ, மனிதனாகவோஇருப்பதை விட பெண்ணாக இருப்பது தான் மிகவும்  கடினமானதாயிருக்கிறது. இலக்கியம் குறித்து சிறிது உரையாடினாலே 'எதிர்ப்பர்புகளும்' திடிர் 'காதலும்'  பிறந்து விடுகிறது. இந்த இரண்டு வருடம் பயத்தை மட்டுமே அம்மாவுக்கு பரிசாய் தந்துள்ளேன். நினைவு தெரிந்த நாள்முதல் மந்திரங்கள் சொல்லி, பூஜைசெய்து வளர்ந்தவள் நாத்திகம் பேசியது அம்மாவுக்கு பெரும் அச்சத்தை கொடுக்கவே செய்கிறது. சென்னை வந்தும் சில நாட்கள் நான் குட்டி விநாயகரும் குங்குமமும் கைப்பையில் வைத்தவாறு சுற்றினேன்.அனுபவங்களும், பெரியாரும்,புத்தகங்களும் கடவுளை தூக்கிவீச செய்தன. திடிரென சாதி பெயரை பெயரிலிருந்து நீக்கியது, சுய மரியாதை திருமணம் பற்றி பேசியது இப்படி அனைத்துமே அம்மாவின் அச்சத்தை அதிகப்படுத்துகிறது, வெளியுலகம் அறியமால் கடவுளும், சாதியுமே பெரும் குறியீடுகளாய் வளர்க்கப்பட்ட அம்மாவுக்கு என செயல்கள் சாத்தானின் செயல்பாடுகளாகவே தெரியும். யார்மீதேனும் காதலோ எனும் அச்சமும் வியக்கத்தகும் செயலல்ல.
    பிறந்து வளர்ந்த கோவையில் கிடைக்கும் சுகாதாரமான காற்றுயில்லை, மரியாதையான பேச்சுயில்லை, அமைதியில்லை, சுத்தமில்லை, ருசியான தண்ணீரில்லை ஆனால் அனைத்தையும் கடந்து ஏதோ ஒரு பெரும் மாயையாய் இந்நகரம் என்மீது படர்ந்துள்ளது.இந்த கூட்டநெரிசல், அழுக்கு, சத்தம் இப்படி எத்துனை இருப்பினும் இதைவிட்டு இன்னொரு உலகை என்னால்அமைக்க இயலாது. இருமையால் நிரம்பிய இந்நகரை நான் ரசிக்ககற்றுக்கொண்டுவிட்டேன், என ரகசியங்களை மௌனமாய் கேட்கும் கடல், காலடி தடங்கள் பதிந்துமறையும் கடற்க்கரை இதை விட்டு வாழ்வது முடியுமா ? தெரியாது,மனிதனுக்கு தேவையெனில் வந்தால் எதுவும் முடியவே செய்யும். ஆனால் நிச்சயம் இனியும் ஒரு அடிமை வாழ்க்கை வாழ்வதற்கு  தெம்பு இல்லை. இலக்கிய வகுப்பில் அமர்ந்து திருட்டு தனமாக எனக்கு பிடித்த இலக்கியம் படிக்கச் வேண்டிய நிலை இனியிருக்கப்போவதில்லை. எதற்கும் உபயோகம் இல்லா மதிபெண்ணுக்காக கிறுக்க வேண்டிய நிலையில்லை. ஆசிரியர்களின் ஆணவத்துக்கு நான் பலியாக வேண்டியதில்லை. நான்மறக்க நினைப்பவை, என்றைக்கும் நினைத்து மகிழ நினைவுகைளும் தந்தது இந்த நகரம்தான்.
    பல்கலைகழகம் அடிமைதனத்தின் வலியை மட்டுமே தந்தது. இரண்டுவருடங்கள் தாக்குபிடித்தமைக்கு இரண்டு ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லியே தீரவேண்டும். அவர்கள் இல்லை எனில் பல்கலைகழகம் கொடூரம் நிறைந்த சிறைச்சாலையாகவேயிருந்திற்கும். கையில் இருந்த காசையெல்லாம் சிலவு செய்து விட்டதால் சாப்பிடாமல் படுத்தஇரவில் பசியின் வலியை இந்நகரமே முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியது. தனிமையின் வலியை உணர்த்துவதற்கு பெரிதாக எதுவும் தேவை இல்லை,பழைய நினைவுகளே போதும். எல்லாவற்றுக்கும் ஏங்கி ஏங்கியே இரண்டு வருடம் முடிய போகிறது. இருந்தும் சென்னைதான் மீண்டும் என்னை ஏற்றுக்கொள்ளும். ஒவ்வொரு விடியலும் ஏதோஒன்றை மறைத்து வைத்தே விடிகிறது.எத்துனை விதமான மனிதர்கள்,  எத்துனை  கனவுகள் , எத்துனை கலைகள்...! என் உலகம் உயிர்பெற இன்னும் இரண்டு மாதமுள்ளது. பொய், வஞ்சகம், பொறாமை, ஏமாற்றம் எதுவும் மாறப்போவதில்லை ஆனால் இவை இனி என்னை எதுவும் செய்யாது. அதற்க்கனான திறனை இந்த நகரம் எனக்கு கற்றுத்தந்திருக்கிறது. என் ரகசியங்களையும் கண்ணீரையும் ஏந்தி கொள்ள எனக்கானஒரு வீடு வர போகிறது. எனக்கான அறை, எனக்கான சுவர்கள், என்னை போலவே கனவில் மிதந்துகிடக்கும் என் தோழி, எனக்காக மட்டுமே வாழும் என் அப்பா அம்மா. கலைகளை கற்றுகொள்வே விடியும் சூரியன். யாருடைய  அனுமதியில்லாமல் இரவில் நிலவை ரசிக்க,குழப்பம் இல்லாமல் உறங்க, புத்தகத்தை எல்லாம் என் அறையில் அடுக்க, அம்மாவின் சமையல் சாப்பிட,பிடித்த இடத்திற்கு எல்லாம் அப்பாவை கூட்டி செல்ல.. இப்படி எனக்கான வாழ்க்கையை வாழ....இருந்தும் பெண் எனும் பாத்திரத்தால் இவையனைத்தும் எத்துனை தூரம் சமூகமும், பெற்றோரும் அனுமதிக்கப்போகின்றனர் எனத்தெரியவில்லை. நான் பல்கலைகழகதை விட்டு மட்டுமே வெளியேறப்போகிறேன்...பெண்ணாகவே பாவிக்கப்படுவேன். நம்பிக்கைத்தானே..எப்படி வேண்டுமெனிலும் கனவுக்கானலாம்.

உண்மையின் துயரம்...


நினைவுகள் பசுமையானவை விரும்பும்போது மீட்டுக்க நமக்காய் என்றும் காத்துகிடப்பவை.சில நினைவுகள் வலியை மட்டுமே மனது முழுவதும் நிரப்பினாலும் நாம் அதை மனதோடு நெருக்கமாகவே வைத்து கொள்கிறோம்.மறக்க நினைத்தாலும் அந்நினைவுகள் அடி மனதில் துடித்து கொண்டே தான் இருக்கும். உண்மையில் எந்த வலியும் மரத்து போவதோ உறங்கிபோவதோ இல்லை. நாம் தான் மறைத்து வைத்திருக்கிறோம். என்றைகாவது அது அடி மனதில் இருந்து எழுந்து மேலோங்கி நிற்கும்.நினைவுகளை மீட்டு எடுக்கும் கருவி  எதுவாக வேண்டுமெனிலும் இருக்கக்கூடும். அப்பாவின் கையைபிடித்து பள்ளிக்கு போகும் குழந்தையோ, மூட்டை தூக்கும் கிழவனோ, மீதி இருக்கும் உயிரை மட்டும் இறுக்கி பிடித்து சாலை ஓரத்தில்  உறங்கிகொண்டிருக்கும் மனிதனோ, வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறி பார்வையிலிருந்து கடைசி துளியாய் கரையும் வரை மீண்டும் மீண்டும் திரும்பி பார்த்து செல்லும் குடும்பமோ இல்லை.நீண்ட நாள் கழித்து கையில் அகப்பட்ட அந்த புத்தகம். பழைய புத்தகங்களை, பழைய  பரிசுகளை  மீண்டும் மீண்டும் அரவனைதுக்கொள்வது   ஒரு அழகியல் என்றாலும் கூட என்றைக்கும் அது மகிழ்ச்சியை மட்டும் தருவது இல்லை. நம்மால்  மட்டுமே உணர கூடிய புன்னகையுடன்  ஒரு சில கண்ணீர் துளிகளையும் பரிசாக தருகிறது. மூன்றுவருடங்களுக்கு முன்பு படித்த புத்தகம் ஒன்று கையில் கிடைத்தது. பெண்களின் நிலை முன்பு போல் இல்லை, அவர்களுக்கு இப்போது சுதந்திரம்உள்ளது, பாதுகாப்பு உள்ளது, ஆண்களுக்கு நிகரான உரிமைகள் உண்டு என்று நான் கற்பனை செய்து வைத்து இருந்த எல்லா நம்பிக்கையும் சிதைத்தபுத்தகம் தான் அது. Simone De Beauvoir யின் 'even in Russia Women  are still Women ' என்ற வரியின்  கொடூரமான உண்மையை ஒவ்வொரு வார்த்தையிலும் உணரவைத்த புத்தகம். உண்மையை உணர்ந்து அதனுடன் நம் இயலாமையையும்  உணர்வதின் வலி, ரத்தம் கசிந்து கண்ணீராக வரும் துளிகளைக் கொண்டே விவரிக்க முடியும்.
                       பாகிஸ்தானி பெண் Tehhmina Durrani எழுதி அவருடைய சுய சரிதையான பிளாஸ்பமே()  அந்த புத்தகம். இது அந்த புத்தகத்தின் விமர்சனமல்ல அப்புத்தகத்தை விமர்சனம் செய்வது என்பது முடியாத ஒன்று. மதமும் ஆணாதிக்கமும் மட்டுமே உள்ள ஒரு சமுதாயத்தில் வாழும், இல்லை செத்து கொண்டு இருக்கும் பெண்ணின் உண்மை கதை. பெண்ணாக அவர் சந்தித்த முதல் தோல்வி தன் காதலை நிறைவேற்றி கொள்ள முடியாதது தான். கட்டுபாடு, குடும்ப மரியாதை, கலாச்சாரம் இப்படி அனைத்தும் உலகெங்கும் பெண்களை சார்ந்துதான் உள்ளது. அல்லாவின் நெருங்கிய மனிதன் ! என்று நம்பப்படும் ஒருவனுக்கு மனைவி ஆகிறாள். அவனின் பார்வை, ஆசை  அனைத்தும் தெஹ்மினாவின் உடலை சார்ந்தே இருக்கிறது. முதல் இரவில் அவள் உடலை தனக்கு அடிமையாக்கி கொள்கிறான்.அடுத்து வரும் நாட்களில் அவளின் அறிவையும், ஆத்மாவையும் அடிமையாக்குகிறான். இத்துணை நாட்களாக முக்கியத்துவம் தந்த உடலை தெரியாத ஒருவனிடம் ஒப்படைப்பது சுலபம் இல்லை. அதிலும் காமம் மட்டுமே நிரம்பி நிற்க்கும் விலங்கிடம் உடலை தருவது அடிமைத்தனத்தின் உச்சகட்டம். எந்த ரத்த கரையை காரணம் காட்டி பெண்கள் கோவில்களில் நுழைய கூடாது என்று  ஆண்கள் தடை விதிகிறார்களோஅதே ரத்த கரையில் தான் படுத்து உறங்கி கொண்டு இருகிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். அவள் கன்னி தன்மை உடையவள் தானா என்பதை தீர்மானம் செய்ய அடுத்த நாள் மாமியார் தன் படுக்கையை பார்க்க வருகிறாள். உடைந்த கனவுகள், அடிமைத்தனம்,உடலுக்குள் இருக்கும் உயிரை மறந்து அதனை வேட்டையாடும் வலியின் அடையாளமாய் படிந்து கிடக்கும் ரத்தம்  தான் அவள் திருமணத்துக்கு முன்பு வரை  கன்னித்தன்மையுடன் இருந்தாள் என்பதன் அடையாளமும் கூட. இஸ்லாம் மதத்தின் கட்டமைப்புக்கு எதிரான எல்லாவற்றுக்கும் போராடுகிறாள். ஒவ்வொரு முறையும் உடல் அடிமை ஆகுவதும் ஆத்மா எதிர்த்து போராடுவதுமாக நாட்கள் நகர்கின்றது. அவளின் கணவர் பீர்செயின் இஸ்லாம் மதத்தின் முக்கிய ஆளாக கருதபடுபவன். மதத்தை ஆயுதமாக கொண்டு பெண்களை அடிமையாகும் ஆண்களுக்கு சிறந்த சான்று அவனின் பாத்திரம்.அவள் வீட்டில்  வேலை செய்யும் சிறிய  பெண்ணை அவன் காமத்தில் இருந்து தப்பவைக்க முயன்று முடியாமல் போக அவள் உடைந்து போகும்நிமிடங்கள், அவளின் குழந்தைகளை கூட அவளுக்கு எதிராக திரும்பிய நிமிடங்களை விட மிகவும் துயரமானது அவள் அவன் காதலனை சந்தித்தசூழ்நிலை. அவனுக்கு மட்டும் அடிமையாகி கொண்டதை அவனுக்கு திருப்தி அளிக்க வில்லை போல். அவளை வலுகட்டாயமாக விபசாரத்யில்ஈடுபடுத்து கிறான். காதலும் பெண்மையும் நிரம்பிய உடம்பை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசை பட்டாளோ அவன் அவள் அறையில்நுழைகிறான். உடல் மறுத்து போய் வெறும் பொருளாக மட்டும் இருக்கும் போது வருகிறான். அவனின் சாவு வரைக்கும் அவளின் அடிமை தனம்,வலி, துயரங்கள், அவமானம் தொடகிர்கிறது. அவனின் சாவுக்கு பிறகு வாழ்வதற்கான காரணங்களும் ஆசைகளும் மறுத்து போகிறது.
                              மீண்டும் ஒரு முறை அந்த வரிகள் நினைவுக்கு வருகிறது 'even in Russia Women are still Women ' இந்த அடிமைத்தனமும் மத கட்டுப்பாடும் இஸ்லாம் பெண்களுக்கு மட்டும் நிகழ்பவை அல்ல,எனக்கும், உங்கள் அம்மாவுக்கும் மனைவிக்கும், மகளுக்கும் உங்களால் விதிக்கப்படுகிற கட்டுப்பாடுகளும் இப்படியாகவே இருக்கிறது. தீட்டு, வீட்டுக்கு தூரம்,மாத விலக்கு.. பெண் உடலில் இயற்கையாக நிகழும் உதிரபோக்குக்கு எத்தனை பெயர். இதை இன்னும் தீட்டு என்றும் நம்பவைக்கும் மதம் தான் பெண் அடிமை தனத்துக்கு முக்கிய காரணம். இதையெல்லாம் உடைத்தெரிய முயல்பவர்கள் இன்னொரு கடவளின் அவதாரம்! மதம் அதன் பங்குக்கு கடவுள், சாதி எனும் பெயரில் அப்பாவி மக்களையும், சில முட்டளையும்  இன்னும் முட்டாளாகிகொண்டு இருக்கிறது. ஒரு பெண்ணுக்கான சுதந்திரத்தை முடிவு செய்வது பெரும்பாலும் ஆண்களாகத்தான் இருகிறார்கள். நான் எந்த உடை அணியவேண்டும் என்பதை என் கல்லூரியும், அரசும் முடிவு செய்து நோட்டீஸ் ஒட்டும் நாட்டில், பெண்களின் திருமண வயது 19  என்று எல்லா  இடத்திலும் கிறுக்கி வைக்கும் நாட்டிலிருந்துக்கொண்டு நான் தனி பட்ட மனிதர்களை பற்றி பேசுவது பொருத்தமாக இருக்காது என்று தெரியும். விருப்பம்இல்லாமல் புணர்வது, பெண்களை வெறும் போதை பொருளாக மட்டும் சித்தரிப்பது கூட வன்புனர்வுதான். வன்புனர்வுஎன்ற வார்த்தையை பயன்படுத்துவதிலும் மாற்று கருத்துகள் உண்டு. அவளை மீறி நடக்கும் ஒரு விடையத்துக்கு ஏன் அவள் பொறுப்பு ஏற்று கொள்ள வேண்டும். இன்னும் எத்தனைநாட்கள் தான் மலடி , வேசி, வாழா வெட்டி என்ற முத்திரைகளை பெண்களின் மீது சூட்ட ஆசைபடுகின்டிர்கள். பெண்மை என்ற அழகான ஒன்றை கற்பு என்ற பொய்யான ஒன்றுடன் ஒப்பிட்டு அதற்கு புனிதம் பூசி மனதில் வைக்காமல் ஏன்  கால்களின் நடுவில்வைத்து உள்ளார்கள் என்று புரியவில்லை.
                                            பெண் இன்னும் துன்ப படுகிறாள் என்று சொன்னால்  சில அறிவு ஜீவிகள் ஆண்களும் தான் துன்பப்படுகிறார்கள் என்று பதில்அளிக்கின்றனர். மனிதனாக பிறப்பு எடுத்த, உணர்வுகள் கொண்ட எல்லா  உயிரினத்துக்கும் வலி இருக்கிறது ஆனால்  பெண் அனுபவிக்கும் வலி இயற்கை தந்தது மட்டும் அல்ல ஆண் ஆதிக்கம் , மத கொள்கைகள் நிரம்பிய சமூதாயம் தந்தது. உதிரபோக்கு இயற்கை தந்தது. தாழ்வு மனப்பான்மை,பதற்றம், கவலை , அசதி, கோபம், எரிச்சல், தனிமை  இவை மதமும் ஆணாதிக்கமும் தந்தது. இவற்றை உடைத்து ஒரு பெண் வந்தால் அவளுக்கு நியாயம் கிடைப்பது இல்லை. அவள் மீதான விமர்சனங்கள் மட்டுமே வருகிறது. போராடும் குணம் உடைய பெண்ணுடன் குடும்பம் நடத்துவது கஷ்டம் என்று சமூதாயம் நம்புகிறது, அவளுக்கும் மனம் உள்ளது அதில் மென்மையான உணர்வுகள் இருக்கிறதுஎன்பதை ஏற்க மறுக்கிறது. பெண்கள் புகை பிடிப்பதாலும், மது அருந்துவதாலும்  கலாச்சாரம் சீர் அழிந்து விட்டது என்று கூச்சலிடும் ஆண்களுக்கு,பெண்களை மோசமாக சித்தரித்து பாடல்கள் எழுதுவதும், விளம்பரபடுத்துவது எல்லாம் ஏனோ கண்ணனுக்கு தெரிய வில்லை? உங்கள் perfume ,குளிர் பானம், சோப்பு எல்லாம் விற்கவேண்டும் என்பதற்காக பெண்களை அறை நிர்வாணமாகவும், ஆண்களிடம் மயங்கும் அற்ப பொருளாக சித்தரிக்கும்போது மட்டும் உங்கள் கலாச்சாரம் சீர் அழிய வில்லையா? தினம் தினம் வாழ்வதே போராட்டமாக இருக்கும் பட்சதில் சமூக பிரச்சனைக்காக, சமூகநலனுக்காக போராடும் ஒரு பெண் எத்தனை விமர்சனங்களை, அவமானகளை சந்திக்க நேரிடுகிறது. உணர்வுகளை மதிக்காமல் உருப்புகளைமட்டும் பெண்ணாக கருதும் சமுதாயத்தில் ஒரு பெண் போராளியாக மாறுவது அவள் தனிபட்ட துயரத்துக்கு மறுத்து போய் மக்களின் வலிகளுக்கு,துயரங்களுக்கு உயிரை கொடுக்க முன்வரும்போதே சாத்தியமாகும். கட்டமைப்புகளை உடைக்க போராடும் ஒவ்வொரு பெண்ணும் போராளிகள்தான். ஆதலினால் 'ஆண்களே' உங்கள் விமர்சனங்களை, எதிர்பார்புகளை குப்பையில் போடுங்கள். அவளுக்கும் சுயம் உள்ளது!  Men are made to regret for their weakness and woman for their strength!

கவிதை தரிசனங்கள்...


இலக்கியம் மனித குலத்யின் தாய் மொழி. மனிதன் முதன் முதலில் அவனை தரிசித்து கொண்டது இலக்கியம் மூலம் தான். சமூகத்தை மாற்றுவதற்கான, மக்களை துயரங்களில் இருந்து விடுவிப்பதற்கான, விடுதலையின் அவசியத்தை உணர்த்துவதற்காக, துணிச்சலை தருவதற்காக, மக்களுடன் நெஞ்சங்களில் மகத்தான உணர்வுகளை விழி தெள, மற்ற உயிர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள நாம் என்றும் நாவல்களையும் இதிகாசங்களையும் தேடி போக வேண்டியது இல்லை. இது எல்லாம் கவிதைகளும் தன்னுள் வைத்து உள்ளது.
                                     எது இலக்கியம் எது வெறும் எழுத்து வியாபாரம் என்பதே சர்ச்சைக்கு உரியதாக இருக்கிறது. இருந்த போதிலும் பாரதியார், கம்பன், வால்ட் விட்மன், ஷெல்லி, கீட்ஸ், நெருடா, பிரமிள், நகுலன் இவர்களின் படைப்புக்களை எல்லாம் படித்தவர்களுக்கு எது இலக்கியம் என்று தெரிந்து கொள்வது கடினம் இல்லை.
                                      இபோதெல்லாம் எல்லாரும் எல்லாவற்றை பற்றியும் கவிதை எழுதுகிறார்கள் , கவிதை வெறும் கற்பனை தான் என்று நினைபோர்களுக்கு கவிதை மனிதனிடம் கொண்டு உள்ள உறவு பற்றி அதனின் வரலாறு பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.
                                        தொடக்க காலத்யில் மனிதன் சிறு சிறு குழு ஆக இருந்து உழைத்த போது அந்த குழுக்களை ஒன்று சேர்பதர்ககாவும், அறிவை தூண்டு வதற்கும், உழைப்பின் சோர்வை போக்குவதற்காக கவிதை கருவியாக இருந்தது. சமீபத்தில் சிவகிரி என்பவருடைய  'மனிதகுல வரலாற்றில் கவிதையின் பாத்திரம்' என்ற ஒரு கட்டுரை வாசிக்க கிடைத்தது. அதில் அவர் காடு வாழ் மக்களின் கவிதையை ஒன்று குறிபிட்டு இருந்தார்.
                                சிவன் எப்போது பிறந்தார் என்று நீங்கள் கூற முடியுமா?
                         இயேசு எப்போது பிறந்தார் என்று கூற முடியுமா?
             அவர்களுக்கு முன்னால் நாங்கள் இங்கே இருந்தோம்
 நீண்ட காலத்திற்கு பிறகு அவர்கள்  இங்கே பிறந்தார்கள்
      அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருந்து பிறந்து வந்தார்கள்
           நாங்கள் கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்.
            இது மறுக்க முடியாத உண்மை மற்றும் கவிதை மனித குல வரலாற்றின் தொடக்கதில் இருந்தே இருக்கிறது என்பதற்கு சான்றாகும். கவிதை யானது ஆதி சமூகத்தின் உணர்வை பிரதிபலிப்தாகவே இருந்தது. உழைப்பு பற்றியும் உழைப்பு சமந்தமாக இருக்கும் பிரச்னைகளை பற்றியும் பல கவிதைகள் உண்டு. காலத்திற்கேற்ப கவிதைகளின் மைய கருத்துகள் மாறி கொண்டே இருந்த போதிலும் அதனின் நோக்கம் ஒரு போதும் மாற வில்லை. அந்த காலதில் தனி மனிதன் என்ற சிந்தனை என்றே ஒன்று இல்லை. ஒரு தனி மனிதனின் பிரச்சனை தனி  ஒருவனின் உணர்வுகள் என்றும் எதுவும் பெரிதாக பேச பட வில்லை. குழுகள் பிரிந்து தனியாக வந்த போது பிரச்சனைகளும் அவனுடன் சேர்ந்தே வந்தது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையில் பிரச்சனைகளை எதிர் கொண்டனர். ஒவ்வொருவருக்கும் புதிய அனுபவங்கள். அவர் அவர்களின் அனுபவங்களையும் வலியையும் கவிதை யாக சொன்னர். ஆனால் எல்லா வற்றிலும் மனிதம் இருந்தது. தனுடைய அனுபவங்கள் வர இருக்கும் தலை முறைக்கு பாடமாக இருக்கும் என்று எழுதினார்கள். இன்னும் சிலர் அவர்கள் வாழ்ந்த வாழ்கையை பதிவு செய்வதற்காக எழுதினர்.
                   ஷெல்லி யின் கவிதை இதோ
                இங்கிலாந்த் மக்களே
              உங்களை தாழ்த்தி ஒடுக்கி போட்டிருக்கும் பிரபுகளுக்கு ஆக
                நீங்கள் ஏன் உலுகிறீர்கள்?
              உங்கள் கொடுங் கோலர்கள் அணியும் விலை உயர்ந்த ஆடைகளை
                 கருத்தோடும், உழைபோடும் ஏன் நெய்கிறீர்கள்?
      உங்களுடைய வியர்வையை வற்றவடிக்கும்- இல்லை
     உங்கள் ரத்தத்தை பருகும் இந்த நன்றி கேட்ட சோம்பரி தேனீகளுக்கு
     தொட்டிலில் இருந்து சுடுகாடு வரை எதற்காக உணவும் உடையும் அளித்து காப்பாற்று கிறீர்கள் ?
                  அதிகாரத்துக்கு எதிர் ஆக மனிதனுடன் சேர்ந்து போராடியது கவிதை தான். பாரதி யின்,
                     மேலோர்கள் வெஞ்சிறையில்
                                வீழுந்து கிடபதுவும்
                   நூலோர்கள் செகடியில்
                                 நோவதுவும் காண்கிலையோ
           என்று அவர்களின் நிலையை மக்களிடம் விண்ணப்பித்தார். சிறை யில் இருந்தோரின் கண்ணீர் ஆங்கிள்ள வல்லரசின் ஆதிக்கத்தை அறுத்தது. நமக்கு விடுதலை கிடைத்தது.
                           இன்றைய கவிதைகள் தனி மனிதனின் உணர்வுகளை பிரதிபலி தாலும் அது நம் உணர்வுகளின் நிழல் லாகவும் நடனம் புரிவது மறுக்க முடியாது. எல்லாவற்றையும் விட்டு விட்டு, எல்லா போரட்டங்களையும் தவிர்த்து விட்டு ஒரு நாளாவது வாழ வேண்டும் என்று தினம் தினம் போராடுபவர்களுக்கு தோன்று வது இயல்பு தான். அந்த எண்ணத்தை மறைபதற்கு இன்னொரு போராட்டம் செய்கிறோம்.
              இதை பிரமிள் நான்கே வரிகளில் வெளிப்படுத்தி உள்ளார்.
                    வேலைக்கேற்ற ஊதியம்
          கேட்கும் கோஷம் உன் கோஷம்
            அதுவும் வேண்டாம் ஆளைவிடு
                 என்ற கூச்சல் என் கூச்சல்.

            நம் ஒருவர்  மீது வைத்து இருக்கும் அன்பை என்றைக்கும் அவர் அருகே இருக்கும் போது உணர்வதை விட இல்லை அவர் அருகில் இருக்கும் போது வெளி படுத்துவதை விட அவர்கள் இல்லாத நேரத்தில் தான் அதிகம் தென்படுகிறது.  எத்தனை பெரிய இலக்கியத்தை கரைத்து குடித்தாலும் அன்பை ஒருவருக்கு வெளிபடுத்துவதில் தடுமாற்றம் ஏற்பட தான் செய்கிறது. தடுமாற்றம் சில நேரங்களில் கோவம், உரிமை, கட்டுபடுத்துதல் என்று பல உருவங்களை எடுத்து கொள்கிறது. எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்  இருக்க வேண்டிய அன்பு ஏனோ நாமே அதற்கு ஒரு உருவத்தை தந்து விடுகிறோம். அன்பை வெளிபடுத்த முடியாத நிலையோ அல்ல நம் கையை விட்டு போய் விடுமோ என்ற பயமோ நமக்குள் கூடு கட்டி வாழ்ந்து கொண்டு இருக்கும் அன்பு ஒருவரிடம் அதே மாதிரி தான் செல்கிறதா எனபது கேள்விகுறி தான். நமை அறியாமல் அது வேறு சிறகுகளை அமைத்து கொள்கிறது. மனுஷ்ய புத்திரனின் வரிகள் இதை அழகாக வெளி படுத்து கிறது
                                       நான் உன்னை நேசிக்கிறேன்
                                       நான்  உன்னை ஏற்று கொள்கிறேன்
                                       நான் உன்னை புரிந்து கொள்கிறேன்
                                       நான் உன்னை சுதந்திர முள்ள வளாகுகிறேன்
                                    நீ இல்லாத போது மட்டும்
                     பல சமயங்களில் நம்முடைய அன்பு நம் அன்பானவர்கள் இல்லாத நேரத்திலே சாத்தியம் ஆகுகிறது. நவீன உலகதில் அன்பை வெளிபடுத்துவது கூட சிக்கல் ஆக தான் உள்ளது!
                              ஒருவரின் துக்கம் எல்லாருக்கும் துக்கமாக தான் இருக்கும் எனபது அவசியம் இல்லை. எல்லா வருக்கும் முன்பு 'நான்' என்கிற உருவம் தலை விரித்து ஆடி கொண்டே தான் இருக்கிறது. நல்லது கெட்டது என்றைக்கும் எப்போதும் எல்லாருக்கும் ஒன்று போல் இருப்பது இல்லை.
                       அஞ்சல் காரர்
                    ஒரு அஞ்சல் அட்டையை
                  வேகமாக வீசிவிட்டு போனார்
              என்ன அவசரமோ?
            என்ன கோவமோ?
            யார் மீதோ?
                குனிந்து எடுத்தேன்
                   நான்கு மூலையில்
                  கருப்பு தடவி இருந்தது
                யாருடைய 'உத்தரகிரியை?'
              திரும்பி பார்த்தேன்
              'வருகிறேன்
            தயாராக இருக்கவும்'
             என்று இருந்தது!
          அட இழவே! எனக்கான அழைப்பு!
           கருமாதி பத்திரிகையை
         கிழித்து போட்டு விட வேண்டும்
              எனபது வீட்டு மரபு.
         அவசரமாய் கிழித்தேன்.
         திரும்பி பார்த்தல் மனைவி!
         அவளுக்கு கூர்மையான காது.
            'யார் செத்தி தாங்க ? என்றாள்
      'உனக்கு தெரியாது' என்றேன்
            'போகணுமா'? என்றாள்
         'போக மாட்டேன்' என்றேன்
      'நல்லதா போச்சு என்றாள்'

               ஒருவரின் மரணம் கூட நம்மை  பாதிக்காத அளவுக்குமாறி விட்டோம். யாருக்காவும் கண்ணீரை சிந்த மறுக்கிறோம். மரணம் விபத்து.பிரிவு எல்லாம் பழக்க பர ஒன்றாக மாறிவிட்டது. எதையும் முழுவதாக அனுபவிக்காமல் ஏதோ ஒரு அடிமை வாழ்கையை வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறோம்.
           கவிதைகள் சொல்லும் உண்மைகளும் வலிகளும் ஏராளம். ஒரு சில கிறுக்கல்களை மட்டும் கருதி கவிதைகள் முழுவதையும் குறைத்து மதிப்பிடு செய்வது இலக்கியத்தை அவமதிப்பது போன்று தான்.       மனிதனை முழுவதாக  தர்சிபதற்கு கவிதை கருவியாக இருபதனால் தான் சரித்திரத்தில் புனிதமான சம்பவமாக போற்றபடுவது ஒரு கவிஞனின் பிறப்பு தான் என்றார் எமெர்சன்.

மக்களின் மனிதன்...!

மக்களின் மனிதன் நாவல் அல்ல  நடக்கும் இடமும், இடம்பெறும் பெயர்களும் கற்பனைகள் என்ற போதிலும் இது கதை இல்லை. இதில் எந்த அழகியலும் கற்பனைகளும் இல்லை . இந்த புத்தகத்தை பற்றி நாம் இங்க பேசுவதற்கு இரண்டு முக்கிய காரணம் உண்டு ஒன்று அறிவு பூர்வமானது மற்ற நாட்டின் அரசியலையும் அவர்களின் இலக்கியத்தை தெரிந்து கொள்வதன் அவசியம். மற்றொன்று இந்த  புத்தகம் 100 % நம் நாட்டு அரசியலுடன், அவர்களின் தலைவர்களை நம் தலைவருடனும், அந்த  மக்களின் மனநிலையை நம் நாட்டு மக்களுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். இந்த கதையை நான்கு வரிகளில் சொல்லிவிடலாம். இந்த கதை ஆசிரியராக  பணிபுரியும் ஓடிலி என்பவரால் சொல்ல படுகிறது. தனக்கு ஆசிரியராக இருந்த நங்கா  என்பவர் இப்போது கலாச்சார முதல்வர் ஆக இருக்கிறார். ஓடிலி க்கு வெளி நாட்டிற்கு போய் பட்டம் பெற்று இங்கு வர வேண்டும் என்று ஆசை அதை பூர்த்தி செய்வதற்காக நங்கா  வுடன் செல்கிறார். நங்கா வின் பணமும் பலமும் ஓடிலியின் காதலியை மயக்குகிறது. ஓடிலியை ஏமாற்றி நங்கா வுடன் செல்கிறாள். நங்காவை வெறுக்க தொடங்கிய ஓடிலி நங்கா வுக்கு எதிராக எதிர் கட்சி ஆன மாக்ஸ் என்பவரிடம் இணைந்து கொள்கிறார்.  முதல் தேர்தலில் வெற்றி பெறமாட்டார்கள் என்ற எதார்த்தத்தை புரிந்து கொள்கிறார்கள். இருந்த போதிலும் அவர்களின் கட்சி அமைப்பு நங்கா வுக்கு பயத்தை அளிக்கிறது. மாக்ஸ் கொல்ல படுகிறார்.   பிறகு தங்களுக்குள் நடக்கும் அற்ப சண்டைகளை ராணுவம் தனக்கு சாதகமாக மாற்றி கொண்டு நாட்டை கைப்பற்றுகிறது.    இந்த புத்தகத்தை பற்றி  ஒரே பொதுவான கருது சீநு ஆச்சுபோ ஒரு சிறந்த அரசியல் விஞ்ஞானி என்று. அவர்  சொன்னதை போல் நைஜீரியா ராணுவத்தால் கைப்பற்ற பட்டது இந்த புத்தகத்தின் வலிமை கதை யில் அல்ல. இந்த கதை யின் ஆழத்தை நமக்கு புரிய வைப்பது கதை சொல்ல அவர் தேர்ந்தெடுத்த உத்தி. satire  என்ற சொல்லப்படும் '    'நையாண்டி தாக்குதல் ' அழகாக சீநு ஆச்சுபோ கையாண்டு உள்ளார். நங்கா என்ற கலாச்சார முதல்வர் ஓடிலி பணிபுரியும் பள்ளி க்கு வருகை தருவது யில் இருந்து தான் கதை தொடங்கு கிறது. அவரை வரவேற்க மாணவர்களும் ஆசியர்களும் வரிசையில் நிற்க சொல்லி பள்ளி முதல்வரால் கட்டாய படுத்த படுகின்றனர். அவர்களின் மரியாதையை தெரிவிக்கும் வகையில் அறிவற்ற அப்பாவி மக்கள் தங்களை முடமாகும் வரை நடனமாடி கொண்டும் துப்பாக்கி மருந்துகளை வெடி பதற்கும் காத்து இருப்பார்கள். இது தானே நம் ஊரிலும் நடக்கிறது. நம்முடைய நலனுக்காக தான்  போராட வருகிறோம் என்று சொல்லி கொண்டு நம்முடன் நின்று ஒரு நிமிடம் கூட பேச நேரம் இல்லாத தலைவர்களை வரவேற்க நாம் என்ன எல்லாம் செய்கிறோம். அடுத்த நேரம் சாப்பிடுவதற்கு வழி இல்லை என்ற நிலைமையில்  கூட, துப்பாக்கி  மருந்து யின் விலை  கூட உயர்ந்து இருக்கும் நிலைமையிலும் அவர்கள் தலைவர்களை வரவேற்பது அவசியம் என்று கருதுகின்றனர். நம் அடிப்படை வசதியை கூட இப்போ குறைத்து கொள்ள வேணும் என்ற நிலையில் கூட நாம் இன்றும் எதற்கும் உபயோக படாத banner களையும் போஸ்டர் களையும் அடித்து கொண்டே தானே இருக்கிறோம்.
நங்கா தான் இதில் ' மக்களின் மனிதன்'  என்று அழைக்க படுகிறார். அவரை எளிதில் சந்தித்து விடலாம் என்பதால் மக்களின் மனிதன் என்று அழைக்க படுகிறார். அன்றைக்கு  அவரின் பேச்சும் அவாரே அமைகிறது. அரசியல்வாதி எப்படி  இருக்க வேண்டும் என்ன செய வேண்டும் என்ன செய கூடாது என்பதை சொல்கிறார். இப்படி ஒரு அரசியல்வாதி யா என்று நாம் முழுவதாக வியப்பதற்கு முன்பே அவர் யின் சுயம் தெரிய வருகிறது. தன் சமூகத்தை வளர்பதற்காக  ஒதுக்கப்பட்ட  பணத்தில் நான்கு மாடி கட்டடம் காட்டி அதை வாடகைக்கு விடுகிறார். இங்கயும் அது தானே நடக்கிறது நம் வாழ்வை முற்றிலும் மாற்ற போவது போல் வறுமையை முற்றிலும் ஒழித்துவிடுவது போல், கல்வி  நிலையை  மேலும் உயர்த்து வது போல் பேசிவிட்டு  கடைசியில் இருப்பதையும் குறைத்து தானே விடுகிறார்கள் . மக்கள் நலனுக்காக ஒதுக்கபடுவது எல்லாம் அவர்கள் நலனுக்கு தானே உபயோக படுகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான எல்லா வழியையும் நங்கா கற்றுகொள்கிறார். அவரின் மிக பெரிய  ஆயுதம்  மக்களின் நம்பிக்கை தான். எதை பேசினால் மக்களுக்கு பிடிக்கும் எதை அவர்கள் தவிர்கிறார்கள்  என்பதை புரிந்து கொண்டு அதை மட்டுமே  மக்களிடம் பேசுகிறார்.இப்படியான ஒரு உணர்ச்சி அரசியல் தானே நம்மிடமும் உள்ளது
         புரட்சி பொதுமக்களால் ஏற்படாது அறிவு ஜீவி ஒருவரால் தான்  நடக்கும் என்று சொல்கிறார். கார்ல் மார்க்ஸ் பொது மனிதனோ ரஷ்யன் ஒ அல்ல.அந்த ஒருவர் தான் மக்களின் மனிதன். அப்படிப்பட்ட ஒருவர் நம் சமூகத்தில் இருக்கிறாரா என்பது தான் கேள்வி. அறிவிஜீவிகள் என்று யாரும்  இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் உணர்வுகள் இல்லாத அறிவு என்றைக்கும் ஆபத்தானது தான். ஒரு பக்கம்  தொழில் நுட்பத்தையும் விஞ்ஞானத்தையும் முன்னிலை படுத்தி மக்கள் பிரச்னையை அலட்சிய படுத்தும் அறிவு ஜீவிகள் இன்னொரு பக்கம் வெறும் உணர்ச்சி அரசியல் பேசும் தலைவர்கள். என்ன ஒரு அவலம்!
                   தலைவர்களின் சுயநலம் மட்டும் ஒரு நாட்டின் வீழ்ச்சிக்கு காரணம் ஆக முடியாது. மக்களுக்கு தெளிவான சிந்தனை யும் ஒற்றுமையும் இல்லாத பட்சத்தில் நிச்சயம் நல்ல நாடாக இயங்க இயலாது. ஒரு எழுத்து தாளராக  தன் கடமையை சீநு ஆச்சுபோ செய்து இருகிறார். தன் கடமையை எழுத்துடன் மட்டும் நிறுத்தவில்லை  அவர்  மக்களுடன் வாழ்ந்தார். அவர்களுக்காக போராடினார்.
         ஒருமுறை நெல்சன் மண்டேலா விடம் ஒருவர் கேட்டார் 'இன்னும் உங்கள் நாட்டில்  இத்தனை அடிமைகள் இருக்கிறார் களே அவர்களுக்கு  நீங்கள் என்ன செய்ய  போகிறிர்கள் என்று அதற்கு அவர் சொன்னார், தான் அடிமை என்று யார் உணர்ந்து இருகிறார்களோ அவர்களை தான் என்னால் காப்பாற்ற முடியும். அடிமை என்றே உணராதாவனை என்னால் எதுவும் செய முடியாது என்று. நாம் வாழ்ந்து கொண்டு இருப்பது அடிமை வாழ்கை என்பதையும், நம் அரசியல் நிலையையும் , நம் கனவுகளையும் வாழ்க்கையையும் தலைவர்களிடம் ஒப்படைத்து விட்டு நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்பது இழிவை நோக்கி தான் செல்லும் என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த புத்தகம் அவசியமே. இதனின் அவசியத்தை முழுவதாக உணர்ந்ததால் தான்  எஸ் போ அவர்கள் இதை தமிழ் யில் மொழி பெயர்த்து உள்ளார். தமிழ் யில் இப்படி வெளிப்படையான அரசியல் விமர்சனகளும் அதனின் விளைவுகளையும் வெளிபடுடும் புத்தகம் உள்ளதா என்பது சந்தேகம் தான். நம்முடைய சமூகத்தில் மக்களின் மனிதன் யார் என்பது இன்னுகேள்வி குறியாக இருப்பது வருத்தத்துக்கு உரிய விஷயமே. ஆப்ரிக்கா வில் எல்லாருக்கும் இந்த புரிதலும் தெளிவும் இருந்ததா என்றால் நிச்சயம் இல்லை தான். எல்லா எழுத்தாளர்களும் இத்தனை வெளிபடையாக மக்களின் பிரச்னையை முன்வைத்தார்களா என்றால் அதுவும் இல்லை தான். ஆனால் சீநு ஆச்சுபோ செய்தார். ஒரு புத்தகத்தால் புரிதலும் மாற்றமும் ஏற்படுமா என்றால் நிச்சயம் ஏற்படும் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பெரியார், ஒரு மார்க்ஸ், ஒரு மதர் தெரேசா தான் இருந்தார்கள். ஒலிம்பிக்ஸ் யில் கூட ஒருவர் கையில் தான் தீ பந்தம் இருக்கிறது. ஆனால் அந்த தீ யின் வெளிச்சம் எல்லாருக்கும் தரபடுகிறது. சீநு ஆச்சுபோ  என்ற ஒருவர் எழுத்து  புரட்சி செய்து மாற்றத்தை ஏற்படுத்தியது போல் நம் மொழியிலும் இப்படி ஒரு புரட்சி ஏற்படும், நமக்கும் ஒரு மக்களின் மனிதன் கிடைப்பார் என்ற நம்பிக்கையில் புத்தகத்தை மூடுகிறேன்.