Friday 23 November 2012

யார் அந்த நாலு பேர்???

விடிந்த பிறகும் இப்படி  தூங்கினா வீடு எப்படி விளங்கும் ஏழு  மணிக்கு பொம்பள பிள்ள இப்படி படுத்து தூங்கினா ஊரு என்ன பேசும் எந்திரி. விடிந்த பிறகும் தூங்கறதுனால தான் சனி நம்மை பிடித்து ஆடுது. கனவுகளையும் போர்வையையும் உதறி விட்டு  காலை அர்ச்சனைகளை கேட்டு கொண்டே எழுந்தாள்.  இரவு கழட்டி வைத்த clip யை தேடி பார்த்தாள் கிடைக்க வில்லை. தலை விரி கோலமாக எழுந்து நடந்தாள்.இப்படி முடியை விரித்து போட்டு இருந்தால் வீடு விளங்குமா காதில் விழாதது போல் தண்ணீர் பாட்டில் யை எடுக்க கை நீட்டினாள். குளிக்காமல் தொடாதே என்ன பெண்ணோ நாளைக்கு வேற வீட்டுக்கு போன எங்கள தான் எல்லாரும் சொலுவாங்க. போய் குளித்து விட்டு வா. இவர்களிடம் பேசி ஒரு பயனும் இல்லை என்று தெரியும். டிரஸ் யை எடுத்து கொண்டு தன் குளியல் அறையை எட்டி பார்த்தாள். ஹீட்டர் off யில் இருந்தது. அண்ணனின் அறைக்கு நகர்ந்தாள். எத்தனை  முறை சொலி இருகிறேன் இந்த அரைகுறை டிரஸ் யை எல்லாம் hostel லே விட்டு  வா என்று. ஹாலில் அப்பாவும் மாமாவும் உள்ளார் வயதுக்கு வந்த பெண் இப்படி டிரஸ் யை போட்டு இருந்தால் நாலு பேறு என்ன சொலுவாங்க. இங்கயே குளி. வெயில் காலத்தில் எப்படி தான் அப்றோம் டிரஸ் போடுறது. இவர்கள் சொன்ன மாதிரி போட்டால் வேர்த்தே சாக வேண்டியது தான். இவர்களுக்கு எங்க புரியபோகிறது என்று நினைத்து கொண்டே குளியல் அறைக்குள் நுழைந்தாள். தனிமை எங்க கிடைத்தால் என்ன மகிழ்ச்சி தான். உலகத்திலே மிக பெரிய பூவும் நீயடி சினஞ்சிறு நதியும் நீயடி என்று பாடல் வரிகளை பாடி கொண்டே குளித்தாள் பல நாட்கள் இல்லை பல வருடம் கழித்து இன்று குடும்பத்துடன் வெளியூர் செல்கிறாள். குடும்பத்துடன் திருனாளர் கோவில்கு சென்று அங்கு இருக்கும் குளத்தில் குளித்தால் பிடித்த சனி போயிருமாம்! வெளியூர் எங்கியாவது சென்று ஓய்வு எடுத்து வாருங்கள் என்று டாக்டர் சொன்னது எல்லாம் காதில் விழவில்லை. எங்கியாவது வெளியே போக கூடாதா என்ற ஏக்கம் கண்ணில் இருந்தது தெரியவில்லை. யாரோ ஒருவன் ஏழரை சனி கோவில் குலத்தில்  குளித்தால் போய்விடும் என்று சொனதால் இந்த திடிர் முடிவு. காரணம் எதுவாக இருந்தா என்ன சனல் ஓர சீட், தொட்டும் தொடாமலும் நம்மை கடந்து செலும் காற்று இசையுடன் கலந்த நீண்ட பயணம் நினைக்கவே சந்தோஷமாக இருந்தது. குளியல் அறையில் இருந்து வெளியே வரும் போது முகத்தில் சந்தோஷம் இல்லை. பதற்றத்துடனும் வலியுடனும் படுகையில் உட்காந்தாள். உயிர் போகிற மாதிரி வலி. மாத மாதம் வருகிற வலி என்றாலும் வலி வலி தான். தாங்கிகொள முடிய வில்லை. சொல்வதா வேண்டாமா என்று யோசித்து கொண்டே இருந்தாள் உடம்பு வலியை கூட பொறுத்து கொள்ளலாம் இவர்கள் கொடுக்கும் மன வேதனை தாங்க முடியாது,.
                                                     .ம்ம்ம் வலியும் பயமும் தான் முகத்தில் எழுதி ஒட்டி இருக்கே எப்படி மறைப்பது. ஏன் இப்படி உட்காந்து இருக்கே? அம்மா.............. உடனே சத்தம்.. ஐயோ.. அவர் சொன்ன மாதிரியே தடங்கல் வந்து விட்டது. இப்படி ஆகிவிட்டதே.. கடவுளே உனக்கு ஒரு முறை சொன்னா புரியாதா? தூரம் ஆனா படுக்கையை தொடாத. போய் பெட் ஷீட் யை துவை. அது தீட்டு. வலிக்குது மா.. இதுக்கு தான் ஒழுங்கா சாப்டனும் எல்ல வேலையும் செயனும். வீடு முழுவதும் தீட்டு ஆகாதே. தம்பி ஓடி வந்தான் .. ஏய்.. வெளியே போ அக்கா க்கு உடம்பு சரி இல்லை. புரிந்தும் புரியாமலும் வருத்ததுடன் வெளியே சென்றான். அவமானமாக இருந்தது. அப்பாவையும் தம்பியையும் தான் முக்கியமாக குளத்தில் குளிக்க சொலி இருக்கிறார். கார் யில் என் பக்கத்தில் உட்காந்து கொள். அவர்களை தொடதே. ஏற்கனமே நமக்கு நேரம் சரி இல்லை. தீட்டு வேற எதையும் தொடாதே பாவம் வந்து சேரும். தொட்டால் பாவமா?? கோவமும் வேதனையும் ஒன்றை ஒன்று மோதி கொண்டு வந்தது . அத்தை மாமவின் காதில் ஏதோ சொன்னார். ஒரு பார்வை பார்த்தார். சங்கடம் கோவம் அழுகை எதையும் காமிக்க முடியவில்லை.
                                     பயணத்தை ரசிபதற்கு முடிய வில்லை. கோவில் வந்தது. தீட்டு என்றால் அவர்கள் சாமிக்கு காது கேட்காது போல். கோவில் க்கு போக கூடாது. அப்படியே குதித்து ஓடிவிடலாம் போல் இருந்தது அவளுக்கு.
                                      அப்பாவும் தம்பியும் குளித்து விட்டு வந்தனர். அவளின் அந்த தனிமை சந்தோஷத்தை கொடுக்க வில்லை. அவமானமும் ஏன் தான் பெண்ணாக பிறந்தோமோ என்ற வருத்தத்தை மட்டுமே தந்தது. அம்மா பெரு மூச்சு விட்டார் நம்மை பிடித்த சனி எல்லாம் இன்றோடு போயாச்சு. சனி போச்சாம். குளித்து விட்டு துணியை அங்கயே போடு விட்டு வரணுமாம் இல்லை என்றல் சனி நம்முடனே வந்து விடுமாம்.
                                         வீடு வந்தது. அவளுக்கு தனி தட்டில் சாப்பாடு. தீட்டு என்பதால் மற்றவருடைய தட்டை தொட கூடாது. அம்மா வின் குரல் மீண்டும் சனியை விட்டு விட்டு வந்து விட்டோம்.
                           எந்த சனியை?? ஜாதகத்தில் இருக்கும் சனியை. இவர்களின் மனதில் இருக்கும் சனியை எங்கே விட போகிறார்கள்?? கேட்க தோன்றியது.. வலி தாங்க முடியவில்லை. . அவளுக்கு என்றே காத்து கொண்டு இருந்தது இருட்டு அறை.
                         தீட்டு. வீட்டுக்கு தூரம், விட்டு விலங்கு, மாத விலக்கு.. பெண் உடலில் இயற்கையாக நிகழும் உதிரபோக்கு க்கு எத்தனை பெயர்...
                  தாழ்வு மனப்பான்மை, பதற்றம், கவலை , அசதி, கோவம், எரிச்சல், தூக்க மின்மை, தனிமை விரும்புதல், இது எல்லாம் இயற்கையாக வருவது இல்லை. இதில் பெரிய பங்கு மூட நம்பிகைகள் கொடுப்பது. மாத மாதம் இதனை ஒரு பெண் அனுபவித்தால் அவளின் மன நிலை எப்படி இருக்கும்.
                 ஒன்று புரியவில்லை ஏன் எல்லா மூட நம்பிக்கைகளும் பெண்களை சார்ந்து யே உள்ளது? பெண் தலை விரித்து இருந்தாள் ஆகாது சத்தமாக சிரித்தால் ஊரு பேசும். பொட்டு  வைக்கா விட்டால் நல்லது இல்லை.. தனக்கு விருப்பமான டிரஸ் யை போடுவதற்கு
கூட சுதந்திரம் இல்லை.. நாலு பேர் நாலு விதமா பேசுவாங்கலாம். இந்த நாலு பேருக்குஆக எத்தனை compromise இனி வரைக்கும் அந்த நாலு பேரு யார் என்று தெரிய வில்லை. யாராவது தெரிந்தால் சொலுங்கள்.
அந்த நாலு பேரை நான் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
                         நாம் பின்பற்றி வரும் பல நம்பிக்கைகள்! அந்த நாள் பேரு ஆக தான். கணவன் இறந்த பிறகு வெள்ளை புடவை கட்டி கொள்வது நாம் மற்றவர்க்கு கணவன் இறந்த பிறகும் தூய்மையாக இருகிறேன் என்று சொல்வதர்காம். நாம் தூய்மையாக இருக்கிறோம் என்று நமக்கு தெரிந்தால் போதாதா? ஏன் அந்த நாலு பேருக்கு தெரிய வேண்டும்? குங்குமம் வைப்பது மற்றவர்க்கு நம்முடைய இரத்தம் சுத்தமாக உள்ளது என்று தெரிவிபதற்கு ஆம். குங்குமம் வைப்பது ஒன்றும் கஷ்டம் இல்லை. பிடித்து இருந்தால் மட்டும் வைத்து கொளலாமே எதற்கு மற்றவர்க்கு ஆக வைக்க வேண்டும்? காலில் மெட்டி போடுவதற்கான காரணம் கேட்டால் சிரிபதா அழுவதா தெரிய வில்லை. மெட்டி யை போட்டு பெண் நடந்தால் அவள் எதிர் யில் வரும் ஆண் அவளின்    மெட்டி யை பார்த்து அவள் இன்னொரு ஆணுக்கு  உடையவள்?! என்று தெரிந்து கொள்வதற் ஆம்.
                                            இப்படி பல அந்த முகம் தெரியாத நாலு பேருக்கு தான் செய்து கொண்டு இருக்கிறோம். பெரியவர்கள் எல்லாம் காரணத்தோட தான் சொலி இருப்பார்கள் என்று மட்டுமே தெரியும் என்ன காரணம் என்று கேட்டால் தெரியாது. அப்படியே ஒன்று இரண்டு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தை படித்து உளறி னாலும் மனது ஏற்று கொள்ள மறுகிறது. எதற்கு ஏற்று கொள்ள வேண்டும்? நமக்கு பிடிகாத ஒரு செயலை ஏன் செய வேண்டும்? ஆறு மணிக்கு மேல் நகம் வெட்ட கூடாது  என்று சொல்கிறார்கள். அந்த காலத்தில் கரண்ட் இல்லை ஆறு மணிக்கு மேல் இருட்டு ஆக இருக்கும் நகம் வெட்டும் போது சப்பாடுக்குள் விழுந்து விட்டால் அதனால் சொலி இருக்கலாம்  இப்ப என்ன கேடு நகம் வெட்டு வதால் என்ன ஆக போது? எளவு வீட்டுக்கு போய் வந்தால் தீட்டு ஆமா. என்ன எளவோ. பின் பக்கமாக வந்து குளித்து விட்டு தான்  வீட்டுக்குள் வர வேண்டுமாம். அந்த காலத்து எளவு வீடு பழைய படத்தில் பார்த்து இருப்போம். இறந்த உடம்பை கட்டி பிடித்து நெஞ்சில் அடித்து கொண்டு மைக்  செட் வச்சு ஒப்பாரி பாட்டு பாடி இருக்கும். நோய் வந்து இறந்த உடம்பை கட்டி பிடித்தால் கிருமிகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு அதனால் குளித்து விட்டு வர வேண்டும் என்று சொன்னார்கள். இபோ நிலைமை அப்படியா இருக்கு.. தொட வேண்டும் என்று நினைத்தால் கூட தொட முடியாது. உடம்பு நிம்மதியாக ஐஸ் பாக்ஸ் யில் இருக்கும். அழுவது கூட நாகரிகம் இல்லை என்று யோசிக்கும் கேடு கெட்ட காலத்தில்  வாழ்கிறோம். இருந்தாலும் தீட்டு தீட்டு தான்  குளித்து விட்டால் தீட்டு போயிரும் என்று நம்புகிறார்கள்.
                                            பத்து பொருத்தமும் சரி ஆக இருந்தால் கல்யாணம் பணிக்கலாமாம். என்ன கொடுமை.. அந்த பத்து பொருத்தம் பார்த்து சொல்வது பொன்னையும் பையனையும் பற்றி எதுவும் தெரியாத ஒரு ஜோசியக்காரர்! நம்மையும் நம் உணர்வுகளையும் மதிக்கும் ஒருவனை மணந்தால் தப்பு.. ஏனோ அந்த ஒருவனும் ஒருத்தியும் ஒரே ஜாதி ஆக இருப்பது இல்லை.. கலப்பு திருமணம் செய்தால் நாலு பேரு எதாவது சொல்வார்கள்! கலப்பு என்றால் என்ன. இரண்டு முற்றிலும் வேறுபட்ட ஒன்று சேர்வது. அப்படி என்றால் மழை வர வேண்டும் என்று மனிதனுக்கு கழுதை யை திருமணம் செய்து வைகிறார்கள்! அல்லவா அது தான் கலப்பு திருமணம், வேறு ஒரு ஜாதி பெண்ணும் வேறு ஒரு ஜாதி பையனும் கல்யாணம் செய்வது கலப்பு திருமணம் அல்ல.
                             விடிந்த பிறகு தூங்கினால் வீடு விளங்காதாம். நைட் ஷிபிட் போவர்கள் வீட்டில் எல்லாம் நல்லதே நடந்தது இல்லையா? கோவில் க்கு வெளியே பிச்சை எடுபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க மனம் இல்லை கார் யில் வந்து இறங்குபவர்களை கூபிட்டு பிரசாதம் என்று கொடுத்து அனதானம் செய்துவிட்டோம் என்று பெருமை கொள்கிறோம்.
                                ஒரே ஒரு வாழ்கை தான் உள்ளது அதற்கு  எதுக்கு இத்தனை வரையறைகள். பெண்களை எப்படி தான் நினைக்க வேண்டும் என்று கேட்டால்  தாகூர் உடைய வரிகள் தான் பதில் I am Chitra.  No goddess to be worshipped, nor yet the
object of common pity to be brushed aside like a moth with
indifference.
              அந்த நாலு பேருக்கு ஆக வாழ்ந்தது போதும்! இனி எனக்கான வாழ்கை வாழ ஆசை. சின்ன சின்ன ஆசை என்று  கவித்துவமாக  பொய் எல்லாம் இல்லை. எல்லாம் பெரிய ஆசை தான். எனக்கு பிடித்த உடை அணித்து கொள்ள வேண்டும், எனக்கு தோன்றும் போது மட்டும் பொட்டு வளையல் செயின் எல்லாம் போட்டு  கொள்ள வேண்டும். என் தலையன்னை உடன் உரையாடல் முடிந்த பிறகே எந்திரிக்க வேண்டும். செயகூடாது என்று பட்டியல் இட்டு சொல்வது எல்லாத்தையும் செய்து பார்க்க வேண்டும். கடந்த   கால நினைவுகளையும் கனவுகளையும் மனதில் சுமந்து கொண்டிருக்கும் போது யாரவது பார்த்து திட்டுவார்கள என்று பயம் இல்லாமல் தனிமையில்  சிரிக்க வேண்டும். அழுக வேண்டும் என்று நினைக்கும் போது அழுக வேண்டும் . பெண்கள் இரவு நேரத்தில் நடப்பது நல்லது இல்லையாம், இருக்காலம். எத்தனை வருடமாக என் சனல் வழியாக ரசித்து கொண்டே இருப்பது. பார்வைகள் மட்டுமே பரிமாற்றி கொள்கிறோம். முகத்தை பார்க்க வேண்டும் என்று ஆசை.. முழு நிலவில்.. அமைதியான இரவில் கொட்டும் மழை யில் நடக்க ஆசை...... எல்லோரும் முன் அப்பாவை கட்டி அணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசை.. யாரிடமும் சொல்லாமல் இசையும் புத்தகமும் மட்டும் துணை யாக கொண்டு பயணம் செல வேண்டும்.. படிப்பை விட்டு விட்டு சிற்ப கலை கற்று கொள்ள ஆசை.. இன்னும்... இன்னும்...இன்னும்..
                         ஆனால் அந்த நாலு பேருக்கு யார் பதில் சொல்வது????

No comments:

Post a Comment