Friday, 23 November 2012

இசைக்குள் இருக்கும் இலக்கியம்..

வார்த்தைகளின் முடிவில் இசை தொடங்குகிறது.  உணர்சிகளை.  வெளிபடுத்துவதில் சிறந்த கருவி நம் கண்களே. எவன் ஒருவன் மனிதன் கண்களில் இருக்கும் உணர்சிகளை படிகிறானோ அவனே சிறந்த கலைஞன் ஆவான். கண்களில் பிரதிபலிக்கும் மனிதனின் ஆழமான உணர்சிகளை உணர்வுகளை உள்வாங்கி வெளிபடுத்துவதில் இலக்கியத்திற்கும் இசைக்கும் நிகராக எதுவும் இல்லை. அதிலும் உணர்சிகளை இசையில் வெளிபடுத்துவது போன்று கடினமானதும் அதே சமயம் இன்ப மானதும் எதுவும் இல்லை. இசை யில் தெறித்த உணர்வுகள் பல இலக்கியம் உருவாகுவதற்கு காரணமாக அமைந்திற்கு.
                     பீத்தோவனின் வயலின் பியானோ சொனாட்டா (sonata ) வின் பெயரான தி க்ருத்சர் சொனாட்டா (The Kreutzer Sonata ) என்ற பெயரையே டால்ஸ்டாய் தன்னுடைய நாவலுக்கும் வைக்கிறார். பீத்தோவனின் இசையில் வெளியாகும் அதே உணர்வுகளை நாவலின்  மைய கருத்தாக டால்ஸ்டாய்  சித்தரித்து உள்ளார். இசை யில் நம் உணரும் உண்மையை நம்மகுள்ளே வைத்து கொள்கிறோம். ஏனோ  இலக்கியத்தில் இருக்கும் உண்மைகள் மட்டும் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகுகிறது.நம் முக மூடியை ஒருத்தர் இப்படி கிழித்துவிட்டார்  என்ற கோவமா இல்லை நமக்கு மட்டுமே தெரிந்த உண்மையை எல்லாருக்கும் சொல்லிவிட்டாரே என்ற கோவமா என்று தெரியவில்லை. மனிதனின் வீழ்ச்சிக்கு காமம் பொறமை இவை இரண்டு தான் காரணம் என்று சொல்கிறார். கதையில்  வரும் பெண் தன்  கணவன் அருகில் இருந்தும் புதியதாக ஒருவன் மீது ஏற்படும் காம உணர்வை அவனை பார்த்து இசைக்கும் இசை மூலம் தெரிவிக்கிறார். இந்த காம உணர்வு ஒரு மனிதனை குற்ற உணர்சிக்கு உட்படுத்தி நம்மை  வீழ்த்தி விடுகிறது என்பதையும் பின்னால் அவள் இசைக்கும் இசை மூலமே தெரிவிக்கிறார். அவள் இசைக்கு இது தான் அர்த்தம் என்று நாம் புரிந்துகொள்ள  முடிவதே அவருடைய வெற்றி. இந்த இசையை அடிப்படையாக கொண்டே உருவான கதை டால்ஸ்டாய் படைப்புகளில் முக்கியமான ஒன்றாகும்.
                        இசையின் மகதான சக்தியை வெளிபடுத்தும் இலக்கியம் தி சாங் ஒப் திரயும்ப்டன்ட் லவ் (The Song Of Triumphant Love ). வேலரியா என்ற பெண்ணிடம் ஒரு ஓவியனும் இசை கலைஞனும் அவளை காதலிப்பதாக தெரிவிகிறார்கள். அவள் இவர்களில் ஒருவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும். அவள் ஓவியனை தேர்வு செய்கிறாள். ஐந்து வருடம் பிறகு இசை கலைஞன் மீண்டும் வருகிறான்ஒரு விசித்தரமான இசையை இசைத்து கொண்டே இருக்கிறான். அந்த இசை அவளை  கலங்க படுத்துகிறது. கனவுகளின் மாய வலைக்குள் சிக்குகிறாள். தனக்குள் உருவாகும் கரு அவனின் இசையால் உருவானது என்று நம்புகிறாள். மனித உணர்வுகளை விட இசை சக்தி வாய்ந்தது என்பது தான் இந்த கதையின் கரு.
         விக்ரம் சேத் யின் அன் ஈகோல் லவ் ( An Equal  Love ) ஒரு இசை கலைஞனின்  வாழ்கையை காவியமாக சொல்கிறது. அவனின் காதலியை தொலைத்த பிறகும் எல்லா வலிகளையும் கடந்த பிறகும்அவனுக்கு  துணையாக இருப்பது தன்னுடைய இசை. தன் காதலிக்கு நிகரானது இசை இந்த இசையே  தன் வாழ்கையின் மிக பெரிய வரம் என்றும் அதுவே அவனுக்கு போதுமானது என்று சொல்வதோடு கதை முடிகிறது.
         இலக்கியத்துக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை கண்டு வியந்தது உண்டு இந்த புத்தகத்தை படித்த பிறகு இசைக்கும் பெண்ணுக்கும்  உள்ள பிணைப்பை பற்றி வியந்தேன்.  தன் காதலியும் இசையும் ஒன்று என்று சொல்வது எத்தனை கவித்துவமாக உள்ளது. இசை என்றைக்கும் மகிழ்ச்சியை மட்டும் தராது. சில இசை துயரத்தின் உச்சகட்டதிர்கே நம்மை அழைத்து சென்று விடும். சில இசை மாறாக மகிழ்ச்சயின் நுனியில் நம்மை ஊஞ்சல் ஆட செய்யும். துயரத்தின் காரணம் எதுவாக இருக்கோ அதுவே நமக்கு மருந்தாகவும் அமைகிறது. பெண்ணும் அப்படிதானே.. இசை இல்லாத உலகம் எப்படி கற்பனை செய்து பார்க்க இயலாதோ அது போல் தான் பெண் இல்லாத உலகமும். நீங்கள் விட வேண்டும் என்று நினைத்தாலும் முடியாது.. உலகம் முழுவதும் இசை யால் சூழ்ந்து உள்ளது. கடல் அலைகளின் இசை, தென்றல் வீசி செல்லும்  இசை. உங்களுக்கு தெரியுமா பெண்ணின் இதய துடிப்பை விட சிறந்த இசை உலகில் எதுவும் இல்லை. பாப் மார்லி பீதோவன் இவர்கள் எல்லாம் தந்த அத்தனை உணர்வுகளின் கலவையும் ஒரே நொடியில்  தர கூடியவை தான் பெண்ணின் இதய துடிப்பு.. அவளின் உடலை மறந்து உணர்வுக்கு செவி சாய்த்து, அவள் மௌனமாக இசைத்து கொண்டிருக்கும் இசையை கேளுங்கள்.. அன்பு, காதல், நம்பிக்கை, பிரிவு, துயரம், மகிழ்ச்சி, வெறுமை, , பொறுமை, நட்பு, பரிசம், கருணை, தாய்மை, கண்ணீர், புன்னகை, வெற்றி, தோல்வி, பிறப்பு, இறப்பு, வெளிச்சம், இருள், கனவு, உண்மை, பொய், ரௌத்திரம், காமம்  இவை எல்லாம் பெண்மை என்ற மொழின் சொற்களை கொண்டு இசைத்தால் வரும் இசை தான் பெண்ணின் இதய துடிப்பு. பெண்ணை வெறும் உடலாக  மட்டும் பார்பவர்கள் உலகின் மிக சிறந்த இசையை கேட்காதவர்கள். தி ஸ்டோரி ஒப் அன் வீபிங் கேமல் (The Story of an  Weeping Camel ) என்ற படத்தில் வரும் ஒட்டகம் தன் குழந்தை ஒட்டகத்திற்கு பால் கொடுக்க மறுக்கும். பின்பு தாய்மை யை வெளிபடுத்தும் ஒரு இசையை கேட்டு அது உருகி தன் குழந்தை ஒட்டகத்தின் பக்கதில் போய் பால் தரும் காட்சி மிகவும் உருக்கமாக இருக்கும். இசைக்கு இருக்கும் அதே சக்தி தான் பெண்ணுக்கும் ஒருமுறை அவளின்  இசையை கேட்டுபாருங்கள் உங்கள் பாரம் குறையும் கல் மனது உருகும்.
                             இசையும்  பெண்ணும் ஒன்று என்பதால் எனவோ இவை அதிகமாக ஆண்கள் மூலமே  பேச படுகின்றது. அவர்களாகவே  அதிகம் நேசிக்கவும் படுகின்றது. இசை உலகத்தின் உயிர் ஆக இருப்பது பெரும் பாலும் ஆண்களே. நான் நேசிக்கும் பாப் மார்லி யில் இருந்து ரசிக்கின்ற ரஹ்மான் வரை எல்லாம் ஆண்களே. பீதோவன், அமதேஎஸ் மொசார்ட் , பீட்டர் ஈளிச், அந்தோனியோ விவல்டி, ஒர்லாண்டோ கிப்போன்ஸ். இவர்கள் மறைந்தாலும் இவர்கள் படைத்த  இசை நம்முடன் பயணம் செய்து கொண்டே தான் உள்ளது. மிக சிறந்த இசையை படைத்தது ஆணாக இருந்தாலும் அதற்கு மூல  காரணம் பெண்ணே.உலகின் மிக சிறந்த கவிதைகளை தந்த ஷேக்ஸ்பியர் , நெருடா, பிரௌனிங் இவர்களின் எழுத்துக்குள் பெண் புதைந்து உள்ளது போல் இசை கலைஞர்களின் படைப்புக்கு காரணமாக பெண் ஒருவள் இருந்து இருக்கிறாள். இவர்களின் வாழ்கை வரலாறை படித்து பாருங்கள் இவர்களது படைப்பை போலவே அழகா இருக்கும். சக்தி இல்லை என்னில் சிவன் இல்லை என்று அன்று இலக்கியத்தில் சொன்னது எத்தனை உண்மை. சக்தி என்பதன் பொருள் பெண். பெண் இல்லை என்றால் உலகம்  இல்லை. இதுதானே இசையும் சொல்கிறது. இசையோடு இணைந்தவர்கள் மட்டுமே பெண்மையை போற்ற முடியும் இலக்கியத்திற்குள் விழுந்தவர்கள் மட்டுமே பெண் மனதின் ஆழத்தை அறிய முடியும்.
                                                                            

No comments:

Post a Comment