Friday 23 November 2012

கவிதைக்குள் இருக்கும் உண்மைகள்..

அழகிய பொய்களால் கோத்த வார்த்தைகள் தான் கவிதைகள் என்று சொல்கின்றனர். எப்போதும் கற்பனை உலகத்திற்கு நம்மை சுமந்து கொண்டு எதார்த்தத்தை  கையில் இருந்து பிடுங்கி கொள்ளும் கவிதையை படித்து ஏன் இப்படி பைத்தியமாக அலைகிறாய் என்று சிலர் கோவித்து கொண்டது உண்டு.கவிதைகள் படித்து என்ன பயன் என்று கேட்போருக்கு ஆக எதையும் எழுத போவதில்லை. என்  உலகில் அலைந்து கொண்டு இருக்கும் உங்களுக்கு ஆக என்னுடைய சில கவிதை அனுபவங்கள். நான் வாசித்து  கவிதைகளில் அப்பட்டமான உண்மைகள் மட்டுமே உள்ளது. கற்பனை உலகத்துக்கு கொண்டு சென்றதை விட என் முக முடியை கழற்றி விட செய்து உலகத்தின் உண்மையான பக்கத்திற்கு யே என்னை தூக்கி கொண்டு சென்று உள்ளது.
                               வால்ட் விட்மன் யின் 'திறந்த சாலையின் பாடல்' இன்னும் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது.  ஏழை பணக்காரன் குடிகாரன், ஊதாரி, வாழ்கையை தேடி செல்பவன், வாழ்க்கையை தொலைத்து விட்டு நடப்பவன், உழைப்பாளி என்று  எல்லா விதமான மக்களும் நடக்கும்சாலையில் நம்மையும் நடக்க அழைக்கிறார். நம் மேசை மீது இருக்கும் காகிதங்களையும், அலமாரியில் உள்ள புத்தகங்களையும் அப்படியே  விட்டு விட்டு அவருடன் அந்த சாலையில் நடக்க அழைகிறார். வாழ்கையின் மிக சிறந்த பாடம்  சக மனிதர்களிடம் இருந்து கற்றுகொள்வதே ஆகும் அதனால் மனிதர்களுடன் அந்த சாலையில்  நடக்க அழைக்கிறார். எல்லா உயிரினங்களும் ஏங்குவது சுதந்திரத்துக்கு ஆக தான். எனக்கு தெரிந்து பல அர்த்தங்கள் உள்ள ஒரே வார்த்தை சுதந்திரம். ஒரு சிலருக்கு தனிமையல் கிடைப்பது சில பேருக்கு யாரிடமாவது பேசுவது. விட்மன் சாலையில் மனிதர்களுடன் பேசி கொண்டே செல்வது தான் சுதந்திரமாக கருதுகிறார். நம் வீட்டில்  உள்ளவர்களிடமே நாம் பேசுவதும் பகிர்ந்து கொள்வதும்  குறைந்து விட்டது. சாலையில் நடந்து செல்லும் சக மனிதர்களிடம் பேசுவதும் அவர்கள் வாழ்கையை  கேட்பதும் என்பது  நமக்கு சாத்தியமாகாத விஷயம். யாரையும் எளிதில் நம்ப கூடிய உலகில் நாம் வாழ வில்லை. இருந்த போதிலும் எந்த உறவும் இல்லாத ஒருவரிடம் எதையோ ஒன்றை மனதின் ஆழத்தில் இருந்து பகிர்ந்து கொண்டு எந்த தயக்கமும்  பயமும் இல்லாமல் பாரத்தை இறக்கி வைத்த  களைப்புடன் விடை பெற்று செல்வது போல் ஒரு இனம்  புரியாத மகிழ்ச்சியும் சுதந்திரமும் எதுவும் இல்லை. இதை நாம் இழந்து கொண்டே வருகிறோம்.
.
தாகூர் யின் கருணை என்ற கவிதை வரிகள் வாழ்கையின் மகத்தான உண்மையை புதைத்து வைத்து உள்ளது. ஒரு குழந்தை தன் அம்மாவிடம் கேட்கும் கேள்விகள் ஆக அமைந்து உள்ளது. குழந்தை , நான் ஒரு நாய் குட்டி ஆக இருந்திருந்தால் என்னை உன் தட்டியில் இருந்து சாப்பிட அனுமதி தந்து இருப்பாயா, நான் ஒரு கிளியாக இருந்திருந்தால் என்னை கூண்டியில் தானே அடைதீர்பாய் என்று கேட்கிறது. அப்படி என்றால் இனி என்னை தூக்க நான் விட மாட்டேன் என்று சொல்கிறது. படிப்பதற்கு எளிதாக இருந்தாலும் இதில் உள்ள அர்த்தம் ஆழ மானது. நாம் ஒருவர் மீது அன்பு செலுத்துவதற்கு ஏதோ ஒரு காரணம் உண்டு. காரணம் இல்லை என்றாலும் ஏதோ ஒன்றை உருவாக்கி கொள்கிறோம். அன்பு செலுத்தும் ஒவ்வொரு மனிதர் இடமிருந்து நாம் எதையோ எதிர்பார்க்கிறோம். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது நம் அன்பு குறைகிறது. உலகத்தின் மிக ஆழமான அன்பு நாம் எதையும் எதிர்பார்க்காமல் ஒருவர் மீது செலுத்தும் அன்பு தான். ஒவ்வொரு மனிதரும் ஆசை படுவது தாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தம்மை ஏற்று கொள்வதற்கு இன்னொரு மனிதன். எந்த எதிர்ப்பார்ப்பும் ஒருவர் மீது திணிக்காமல் எத்தனை பேரை நாம் முழுமையாக நேசிக்கிறோம். இன்று நாம் அன்பு செலுத்த கூடியவர்கள் நாளை மாறி போனால் நம்முடைய அன்பும் மாறி போகும் தானே. unconditional  love  என்பது எத்தனை எட்டா தூரத்தில் உள்ளது!
                        மேரி அங்கலூ வின் 'எனக்கு தெரியும் ஏன் கூண்டில் உள்ள பறவை பாடுகிறது' என்ற கவிதை இன்று நாம் எதற்காக ஏங்கி கொண்டு இருகிறோமோ அதனின் துயரத்தை சொல்கிறது. கூண்டில் அகப்பட்ட கிளி, கனவுகளின் கல்லறையில் இருக்கும் கிளி எதற்காக பாடும், தன்னுடைய  சுதந்திரத்துக்கு ஆக தானே பாடும். நம்மில் எத்தனை பேருக்கு அதனின் பாடல் புரிகிறது. அதன் குரலில் உள்ள இனிமையை புரிந்து கொள்ள முடிந்த நமக்கு அதனின் வலியை புரிந்து கொள்ள முடியவில்லை. மனதின் ஆழத்தில் இருந்து அழும் மனிதனின் குரல் நம் காதுக்கு கேட்பது இல்லை. நம்மை சுற்றி நம்மை புரிந்து கொள்ளாத மனிதர்களும், நாம் புரிந்து கொள்ள முடியாத மனிதர்களும் தான் இருகிறார்கள். பறவைகளையும் , விலங்குகளையும் நாம் நம்முடன் வாழ விடுவது இல்லை அப்படியே இருந்தாலும் அது கூண்டில் தான் வைத்து உள்ளோம். அவற்றை விரட்டு வதற்கு பல வார்த்தைகளை நாம் கற்று வைத்து உள்ளோம் ஆனால் அது நம் அருகில் வருவதற்கு எந்த வார்த்தையும் கற்று வைக்க வில்லை. கூண்டில் இருந்து கொண்டு சுதந்திர பாடலை பாடி தோற்று போவது கிளி மட்டும் அல்ல மனிதர்களும் தான்.
                           சமீபத்தில் படித்த மனுஷ்ய புத்திரனின் எதார்தமான வரிகள் நான் எத்தனை சுயநலமாக இருந்து இருக்கிறேன் என்று உணர வைத்தது.
                 ஸ்டேஷனிலிருந்து
வீட்டிற்கு
நடக்கிர தூரமா
என்று கேட்டார்
வழி கேட்டவர்

நடக்கிற தூரம்தான்
என்றேன்

எவ்வளவு தூரம்
அவரால் நடக்க முடியும்
என்பதை கேட்க மறந்துவிட்டேன்
               ஒரு நாளில் எத்தனை பேர் வழி கேட்கிறார்கள். ஒவ்வொரு முறையும் யாரவது வழி கேட்கும்போது எல்லாம் ஏதோ ஒரு சூழ்நிலையில் நாம் தெரியாத ஒருவரை சார்ந்து இருக்க வேண்டும் என்பதும் அவர் காட்டும் வழியை நம்ப வேண்டும் என்று தான் நினைத்து  கொள்வேன். இயலாமை யாகவும் இருக்கலாம் இல்லை காலத்தின் கட்டாயமாகவும் இருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் அவர்களை நாம் நம்பி தான் ஆக வேண்டும். இப்போது இரண்டு கிலோமீட்டர் வரை நடக்கும் தூரம் தான் என்ற நிலைக்கு என்னை சென்னை தள்ளி விட்டுள்ளது. ஆனால் அவரால் எத்தனை தூரம் நடக்க முடியும் என்பதை ஒரு நாளும் சிந்தித்ததுஇல்லை. என்றைக்கும் எதிர் இருப்போரின் சூழ்நிலையையும் வலியையும் , வலிமையையும் நாம் புரிந்து கொள்வதே இல்லை. எல்லா பிரச்சனைகளையும் நாம் நம்முடைய இடத்தில் இருந்து கொண்டே தான் தீர்வு காண்கிறோம். மற்றவரின் மன நிலையில் இருந்து யோசிபதற்கு ஏனோ இன்னும் நம் மனம் இன்னும் பழக வில்லை.
        
                            கல்யாண்ஜியின் கவிதைகள் சமூகத்தை பிரதிபலிக்க கூடியது. நம்முடைய மனசாட்சியை தட்டி எழுப்பும் வலிமை கொண்டது.
           சைக்களில் வந்த
     தக்காளி கூடை சரிந்து
     முக்கால் சிவப்பில் உருண்டது
     அணைத்து திசைகளிலும் பழங்கள்
     தலைக்கு மேலே
     வேலை இருப்பதாய்
     கடந்தும் நடந்தும்
     அனைவரும் போயினர்
    பழங்களை விடவும் 
     நசுங்கி போனது
    அடுத்த மனிதர்கள்
   மீதான அக்கறை
 எத்தனை உண்மை! நமக்கு சரிந்த தக்காளி மீதும் அக்கறை இல்லை, அவனின் ஒரு நாள் வியாபாரம் கெட்டு போனதை பற்றியும் கவலை இல்லை , அவனை நம்பி இருக்கும் அவனின் குழந்தைகள் பற்றி நமக்கு கவலை இல்லை. அவனே விழுந்து இருந்தாலும் நமக்கு கவலை இல்லை என்னென்றால் நமக்கு தலை க்கு மேல் வேலை உண்டு.  நம்முடைய  அவல நிலையையும் சுயநலமான வாழ்க்கையையும் இதை விட எளிதாக எப்படி சொல்லிவிட முடியும்.
                              பாரதியார் , அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்துதணிந்தது காடு –தழல்
வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”
                          என்று கேட்டு அவர் வைத்த நெருப்பு எத்தனை பேரின் இதயத்திலும் சிந்தனை யிலும் எரிந்து கொண்டு இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியுமா? சரிதரங்களை விட கவிதைகளிலே உண்மைகள் அதிகம் உண்டு என்று அரிஸ்டாட்டில் சொன்னது எத்தனை உண்மை..

No comments:

Post a Comment