Friday 23 November 2012

மறைந்து போனதா?? அழிக்க பட்டதா??

உலகமெங்கும் இருக்கும் மக்களுக்கு 9 /11  அன்று நியூயார்க் யில் நடந்த தீவரவாதிகளின் தாக்குதல்  இன்னும் நினைவில் இருக்கிறது ஆனால் இதே  நாளில்  1973  யில் chile மக்களுக்கு நடந்த துயரமான சம்பவம் நினைவில் இல்லை. அமெரிக்க நிகழ்த்திய போர் யில் ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் யில் இறந்த லட்ச கணக்கான மக்கள் ஏனோ உலக மக்களின் நினைவில் இல்லை. ஆங்காங்கே மௌன அஞ்சலிகள் மட்டுமே உள்ளது. மக்கள் எதை நினைவில் வைத்து இருகிறார்கள் ,எதை மறக்கின்றனர் என்பதை பொறுத்தே அந்த சம்பவத்தின் வலிமை உள்ளது. மும்பையில் 26 /11 நடந்த சம்பவம் நம் நினைவில் இருப்பது போல், அதற்கு கொடுக்கும் முக்கியதுவத்தை 1947 யில் காஷ்மீரில் நேஷனல் பில்டிங் ப்ராஜெக்ட் யில் இறந்த 50000  மக்களுக்கு கொடுப்பது இல்லை ,மக்களின் நினைவில் இருந்து அழிந்து போனது .சில விஷயங்களை நினைவில் வைதிர்பதும் பல சம்பவங்களை மறந்துபோவதும் ஒற்றி இருக்கும் அரசியல் சூட்சமாகவே உள்ளது. இந்திரா காந்தியை அவருக்கு பாதுகாப்பாக இருந்த சீக்கியர்கள் கொன்றனர். இந்திரா காந்தியின் கொலை வழக்கில் ஐந்தே வருடத்திற்குள் சத்வந்த் சிங்க் க்கு மரண தண்டனை வழங்க பட்டது. அதற்கு எதிர் மறையாக சீக்கியர்களை தாக்கி நடந்த தாக்குதலின் வழக்கில் இன்னும் தண்டனை தர பெறாமலே இருக்கிறது. அதில் நிறைய பேர் காங்கிரஸ் கட்சி யை சார்ந்தவர்கள். பாபர்  மஸ்ஜித் சம்பவம், மும்பை 1992 - 1993  குண்டு வெடிப்பு சம்பவம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களும் சட்டம் தண்டிக்க வில்லை இந்த சம்பவங்களில் உயிர் இழந்தவர்களும் உலக மக்கள் நினைவில் இல்லை. மக்கள் நினைவில் இருந்து அகற்றும் ஆற்றல் உள்ளதால் தான் நரேந்திர மோடி இந்திய மக்கள் குஜராத் கலவரத்தில்  தன்னுடைய பங்களிப்பை மறந்து விடுவர் என்று நம்புகிறார் போல்.
நம் நினைவில் இருக்கும் சம்பவங்கள்:
             இந்திரா காந்தி கொலை. பின்ட்( Beant ) யை சுட்டு கொன்றனர். சத்வந்த் சிங்க் க்கும் கேஹர் சிங்க் க்கும் மரண தண்டனை விதிக்க பட்டது.
      அதை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக நடந்த தாக்குதலில் 3000 பேர் இறந்தனர் 20000  மக்கள் டெல்லி சென்றனர். 700 வழக்குகள் பதிவு செயப்பட்டது ஆனால் பல வழக்கள் தள்ளுபடி ஆனது. 30  பேர் மட்டுமே கைது ஆனார் கைது ஆன எல்லாரும் எந்த செல்வாக்கும் இல்லாத சிறிய! காங்கிரஸ் ஆட்கள். யாருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படவில்லை. எந்த ஒரு சீனியர் காங்கிரஸ் தலைவரும் கைது செய்ய படவில்லை.
 பாபர் மஸ்ஜித் இடிப்பு (1992 )
    பல முக்கிய தலைவர்கள் இதில் 'அறிவுபூர்வமாக' ஈடுபட்டு உள்ளனர். ஆனால் இந்த தலைவர்கள் மீது இருந்த வழக்கள் எல்லாம் தள்ளுபடி செயப்பட்டது. இந்த முக்கிய தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி, ஜோஷி மற்றும் பலர். செப்டம்பர் 2010 allahabad உயர் நீதி மன்றம் 2 . 77 ஏக்கர் சமமாக ராம் லல்லா, waqf போர்டு,நிர்மொஹி அக்ஹர்கா க்கு பிரிக்கப்பட்டது.
 நம் நினைவில் இருந்து அழிந்தது:
                      மும்பை கலவரம் தொடர் குண்டு வெடிப்பு (1992 - 1993 )பாபர் மஸ்ஜித் இடிப்பை தொடர்ந்து மும்பை யில்  நடந்த கலவரத்தில் 900 பேர் உயிர் இழந்தனர். 575 முஸ்லிம், 275 ஹிந்து.  இதில் 30 போலீசார்கள் ஆயுதங்கள் எதுவும் இல்லாத முஸ்லிம் மீது தாக்குதல் நடத்தி சுட்டு கொன்றனர் ஆனால் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
 கோத்ரா ரயில் எரிப்பு, குஜராத் கலவரம்( 2002 )
              பிப்ரவரி 2002 இரண்டு சபர்மதி ரயில் பெட்டி எரிக்க பட்டது. இதில் அயோதயவில் இருந்து வந்து கொண்டு இருந்த 56 கற் செவாக்ஸ் (kar sevaks ) உயிர் இழந்தனர். பிப்ரவரி 28  மார்ச் 3  நடந்த குஜராத் கலவரத்தில் 1000 பேர் இறந்தனர். 790 முஸ்லிம் 254  ஹிந்து. 223 பேர் காணவில்லை. ஏழு வருடம் கழித்து அவர்கள் இறந்தனர் என்று பதிவு செய்தனர்.
           ரயில் எரிப்பு வழக்கில்  100 பேர் கைது செய்ய பட்டனர் அதில் 11 பேருக்கு மரணதண்டனை , 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டது. பிப்ரவரி 2011 யில் மீதி 63 பெயரை விடுதலை செய்தனர். குஜராத் கலவரம் வழக்கில் 5070 பேரை கைது செய்தனர் இதில் பாதிக்கு மேல் ஒரே வருடத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர்.
 காஷ்மீர்  போராட்டம்:
          1989 யின் கணக்குப்படி 43460 மக்கள் இறந்தனர். 13226 பேர் மிலிட்டரி சுட்டது 21323 பாதுகாப்பு படையினரால் சுடப்பட்டனர்.
1992 -2002 க்குள் 12000 பேர் கொலைசெய பட்டனர். 2005 கணக்கு படி 1828  சிவிலியன்ஸ், 360 பாதுகாப்பு துறையினர் இறந்தனர். இரண்டு லட்ச மக்களுக்கு மேல் உள்நாட்டில் புலம் பெயர்ந்தனர் . மற்ற அரசு நடத்தும் ' சமுதாய கொலையை ' யை (genocide) பற்றி பேசும் இந்திய அரசு ஏனோ தன்னுடைய அரசே காஷ்மீர் யிலும் northeast பகுதியில் நடத்தும் சமுதாய கொலை யை பற்றி பேச மறுக்கிறது?? இந்த சம்பவங்கள் எல்லாம் மக்கள் நினைவில் இருந்து மறைந்து போனதா இல்லை நினைவில் இருந்து அழிக்கபட்டதா??
சில சம்பவங்களை முற்றிலும் மறந்து போவதும் சில வற்றை தொலைவில்  வைத்து பார்பதும் சிலவற்றை மட்டும் எப்போதும் நினைவில் வைத்திருப்பது வெறும் மக்களின் நினைவாற்றலோ மனநிலையோ மட்டும் சார்ந்தது அல்ல இதில் அரசியல் இருக்கிறது.                
            மக்களின் நினைவுகள் கூட அடிமையாக தான் உள்ளதோ??

No comments:

Post a Comment