இலக்கியம் மனித குலத்யின் தாய் மொழி. மனிதன் முதன் முதலில் அவனை தரிசித்து கொண்டது இலக்கியம் மூலம் தான். சமூகத்தை மாற்றுவதற்கான, மக்களை துயரங்களில் இருந்து விடுவிப்பதற்கான, விடுதலையின் அவசியத்தை உணர்த்துவதற்காக, துணிச்சலை தருவதற்காக, மக்களுடன் நெஞ்சங்களில் மகத்தான உணர்வுகளை விழி தெள, மற்ற உயிர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள நாம் என்றும் நாவல்களையும் இதிகாசங்களையும் தேடி போக வேண்டியது இல்லை. இது எல்லாம் கவிதைகளும் தன்னுள் வைத்து உள்ளது.
எது இலக்கியம் எது வெறும் எழுத்து வியாபாரம் என்பதே சர்ச்சைக்கு உரியதாக இருக்கிறது. இருந்த போதிலும் பாரதியார், கம்பன், வால்ட் விட்மன், ஷெல்லி, கீட்ஸ், நெருடா, பிரமிள், நகுலன் இவர்களின் படைப்புக்களை எல்லாம் படித்தவர்களுக்கு எது இலக்கியம் என்று தெரிந்து கொள்வது கடினம் இல்லை.
இபோதெல்லாம் எல்லாரும் எல்லாவற்றை பற்றியும் கவிதை எழுதுகிறார்கள் , கவிதை வெறும் கற்பனை தான் என்று நினைபோர்களுக்கு கவிதை மனிதனிடம் கொண்டு உள்ள உறவு பற்றி அதனின் வரலாறு பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.
தொடக்க காலத்யில் மனிதன் சிறு சிறு குழு ஆக இருந்து உழைத்த போது அந்த குழுக்களை ஒன்று சேர்பதர்ககாவும், அறிவை தூண்டு வதற்கும், உழைப்பின் சோர்வை போக்குவதற்காக கவிதை கருவியாக இருந்தது. சமீபத்தில் சிவகிரி என்பவருடைய 'மனிதகுல வரலாற்றில் கவிதையின் பாத்திரம்' என்ற ஒரு கட்டுரை வாசிக்க கிடைத்தது. அதில் அவர் காடு வாழ் மக்களின் கவிதையை ஒன்று குறிபிட்டு இருந்தார்.
சிவன் எப்போது பிறந்தார் என்று நீங்கள் கூற முடியுமா?
இயேசு எப்போது பிறந்தார் என்று கூற முடியுமா?
அவர்களுக்கு முன்னால் நாங்கள் இங்கே இருந்தோம்
நீண்ட காலத்திற்கு பிறகு அவர்கள் இங்கே பிறந்தார்கள்
அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருந்து பிறந்து வந்தார்கள்
நாங்கள் கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்.
இது மறுக்க முடியாத உண்மை மற்றும் கவிதை மனித குல வரலாற்றின் தொடக்கதில் இருந்தே இருக்கிறது என்பதற்கு சான்றாகும். கவிதை யானது ஆதி சமூகத்தின் உணர்வை பிரதிபலிப்தாகவே இருந்தது. உழைப்பு பற்றியும் உழைப்பு சமந்தமாக இருக்கும் பிரச்னைகளை பற்றியும் பல கவிதைகள் உண்டு. காலத்திற்கேற்ப கவிதைகளின் மைய கருத்துகள் மாறி கொண்டே இருந்த போதிலும் அதனின் நோக்கம் ஒரு போதும் மாற வில்லை. அந்த காலதில் தனி மனிதன் என்ற சிந்தனை என்றே ஒன்று இல்லை. ஒரு தனி மனிதனின் பிரச்சனை தனி ஒருவனின் உணர்வுகள் என்றும் எதுவும் பெரிதாக பேச பட வில்லை. குழுகள் பிரிந்து தனியாக வந்த போது பிரச்சனைகளும் அவனுடன் சேர்ந்தே வந்தது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையில் பிரச்சனைகளை எதிர் கொண்டனர். ஒவ்வொருவருக்கும் புதிய அனுபவங்கள். அவர் அவர்களின் அனுபவங்களையும் வலியையும் கவிதை யாக சொன்னர். ஆனால் எல்லா வற்றிலும் மனிதம் இருந்தது. தனுடைய அனுபவங்கள் வர இருக்கும் தலை முறைக்கு பாடமாக இருக்கும் என்று எழுதினார்கள். இன்னும் சிலர் அவர்கள் வாழ்ந்த வாழ்கையை பதிவு செய்வதற்காக எழுதினர்.
ஷெல்லி யின் கவிதை இதோ
இங்கிலாந்த் மக்களே
உங்களை தாழ்த்தி ஒடுக்கி போட்டிருக்கும் பிரபுகளுக்கு ஆக
நீங்கள் ஏன் உலுகிறீர்கள்?
உங்கள் கொடுங் கோலர்கள் அணியும் விலை உயர்ந்த ஆடைகளை
கருத்தோடும், உழைபோடும் ஏன் நெய்கிறீர்கள்?
உங்களுடைய வியர்வையை வற்றவடிக்கும்- இல்லை
உங்கள் ரத்தத்தை பருகும் இந்த நன்றி கேட்ட சோம்பரி தேனீகளுக்கு
தொட்டிலில் இருந்து சுடுகாடு வரை எதற்காக உணவும் உடையும் அளித்து காப்பாற்று கிறீர்கள் ?
அதிகாரத்துக்கு எதிர் ஆக மனிதனுடன் சேர்ந்து போராடியது கவிதை தான். பாரதி யின்,
மேலோர்கள் வெஞ்சிறையில்
வீழுந்து கிடபதுவும்
நூலோர்கள் செகடியில்
நோவதுவும் காண்கிலையோ
என்று அவர்களின் நிலையை மக்களிடம் விண்ணப்பித்தார். சிறை யில் இருந்தோரின் கண்ணீர் ஆங்கிள்ள வல்லரசின் ஆதிக்கத்தை அறுத்தது. நமக்கு விடுதலை கிடைத்தது.
இன்றைய கவிதைகள் தனி மனிதனின் உணர்வுகளை பிரதிபலி தாலும் அது நம் உணர்வுகளின் நிழல் லாகவும் நடனம் புரிவது மறுக்க முடியாது. எல்லாவற்றையும் விட்டு விட்டு, எல்லா போரட்டங்களையும் தவிர்த்து விட்டு ஒரு நாளாவது வாழ வேண்டும் என்று தினம் தினம் போராடுபவர்களுக்கு தோன்று வது இயல்பு தான். அந்த எண்ணத்தை மறைபதற்கு இன்னொரு போராட்டம் செய்கிறோம்.
இதை பிரமிள் நான்கே வரிகளில் வெளிப்படுத்தி உள்ளார்.
வேலைக்கேற்ற ஊதியம்
கேட்கும் கோஷம் உன் கோஷம்
அதுவும் வேண்டாம் ஆளைவிடு
என்ற கூச்சல் என் கூச்சல்.
நம் ஒருவர் மீது வைத்து இருக்கும் அன்பை என்றைக்கும் அவர் அருகே இருக்கும் போது உணர்வதை விட இல்லை அவர் அருகில் இருக்கும் போது வெளி படுத்துவதை விட அவர்கள் இல்லாத நேரத்தில் தான் அதிகம் தென்படுகிறது. எத்தனை பெரிய இலக்கியத்தை கரைத்து குடித்தாலும் அன்பை ஒருவருக்கு வெளிபடுத்துவதில் தடுமாற்றம் ஏற்பட தான் செய்கிறது. தடுமாற்றம் சில நேரங்களில் கோவம், உரிமை, கட்டுபடுத்துதல் என்று பல உருவங்களை எடுத்து கொள்கிறது. எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இருக்க வேண்டிய அன்பு ஏனோ நாமே அதற்கு ஒரு உருவத்தை தந்து விடுகிறோம். அன்பை வெளிபடுத்த முடியாத நிலையோ அல்ல நம் கையை விட்டு போய் விடுமோ என்ற பயமோ நமக்குள் கூடு கட்டி வாழ்ந்து கொண்டு இருக்கும் அன்பு ஒருவரிடம் அதே மாதிரி தான் செல்கிறதா எனபது கேள்விகுறி தான். நமை அறியாமல் அது வேறு சிறகுகளை அமைத்து கொள்கிறது. மனுஷ்ய புத்திரனின் வரிகள் இதை அழகாக வெளி படுத்து கிறது
நான் உன்னை நேசிக்கிறேன்
நான் உன்னை ஏற்று கொள்கிறேன்
நான் உன்னை புரிந்து கொள்கிறேன்
நான் உன்னை சுதந்திர முள்ள வளாகுகிறேன்
நீ இல்லாத போது மட்டும்
பல சமயங்களில் நம்முடைய அன்பு நம் அன்பானவர்கள் இல்லாத நேரத்திலே சாத்தியம் ஆகுகிறது. நவீன உலகதில் அன்பை வெளிபடுத்துவது கூட சிக்கல் ஆக தான் உள்ளது!
ஒருவரின் துக்கம் எல்லாருக்கும் துக்கமாக தான் இருக்கும் எனபது அவசியம் இல்லை. எல்லா வருக்கும் முன்பு 'நான்' என்கிற உருவம் தலை விரித்து ஆடி கொண்டே தான் இருக்கிறது. நல்லது கெட்டது என்றைக்கும் எப்போதும் எல்லாருக்கும் ஒன்று போல் இருப்பது இல்லை.
அஞ்சல் காரர்
ஒரு அஞ்சல் அட்டையை
வேகமாக வீசிவிட்டு போனார்
என்ன அவசரமோ?
என்ன கோவமோ?
யார் மீதோ?
குனிந்து எடுத்தேன்
நான்கு மூலையில்
கருப்பு தடவி இருந்தது
யாருடைய 'உத்தரகிரியை?'
திரும்பி பார்த்தேன்
'வருகிறேன்
தயாராக இருக்கவும்'
என்று இருந்தது!
அட இழவே! எனக்கான அழைப்பு!
கருமாதி பத்திரிகையை
கிழித்து போட்டு விட வேண்டும்
எனபது வீட்டு மரபு.
அவசரமாய் கிழித்தேன்.
திரும்பி பார்த்தல் மனைவி!
அவளுக்கு கூர்மையான காது.
'யார் செத்தி தாங்க ? என்றாள்
'உனக்கு தெரியாது' என்றேன்
'போகணுமா'? என்றாள்
'போக மாட்டேன்' என்றேன்
'நல்லதா போச்சு என்றாள்'
ஒருவரின் மரணம் கூட நம்மை பாதிக்காத அளவுக்குமாறி விட்டோம். யாருக்காவும் கண்ணீரை சிந்த மறுக்கிறோம். மரணம் விபத்து.பிரிவு எல்லாம் பழக்க பர ஒன்றாக மாறிவிட்டது. எதையும் முழுவதாக அனுபவிக்காமல் ஏதோ ஒரு அடிமை வாழ்கையை வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறோம்.
கவிதைகள் சொல்லும் உண்மைகளும் வலிகளும் ஏராளம். ஒரு சில கிறுக்கல்களை மட்டும் கருதி கவிதைகள் முழுவதையும் குறைத்து மதிப்பிடு செய்வது இலக்கியத்தை அவமதிப்பது போன்று தான். மனிதனை முழுவதாக தர்சிபதற்கு கவிதை கருவியாக இருபதனால் தான் சரித்திரத்தில் புனிதமான சம்பவமாக போற்றபடுவது ஒரு கவிஞனின் பிறப்பு தான் என்றார் எமெர்சன்.
No comments:
Post a Comment