Friday 23 November 2012

தமிழ் நாட்டில் ஆங்கில இலக்கியத்தின் நிலை..!

ஆங்கில இலக்கியம் பற்றியும் ஆங்கில இலக்கியம் படிபவர்கள் மீதும் அழிக்கமுடியாத    சில பொதுவான கருத்துகள் உண்டு.. ஆங்கில இலக்கியம் படிபவர்கள் தமிழ் தாய் மொழி யாக கொண்டவர்கள் அல்ல, அவர்கள் மேல்நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றுவர்கள் என்று.. ஆங்கில இலக்கியம் படிபவர்கள் ஆங்கிலத்தில் என வார்த்தை கேட்டாலும் google  போல அர்த்தத்தை தர வேண்டும் என்ற எதிபார்ப்பும் உண்டு.. நான் படிப்பது ஆங்கில இலக்கியம்.. ஆங்கில மொழி அல்ல என்று சொன்னால் ஏதோ நான் உளர்வதுபோல்  பார்பர்.. எப்படி உளவியல், சமூகவியல், பொருளாதாரம் எல்லாம் ஆங்கிலம் வழியாக படிக்கிறார்களோ அதே மாதிரி தான் நாங்கள் இலக்கியத்தை ஆங்கில வழியில் படிக்கிறோம்.. மற்ற துறை விட அதிகமான் சொற்கள் எங்களுக்கு அறிமுகம் ஆகும் என்பது உண்மை அதற்காக ஏதோ pulp  fiction யில் வரும் வார்த்தை சொல்லி அதற்கு அர்த்தம்  தெரியவில்லை என்ற உடன் ஆங்கிலம் இலக்கியம் படிக்கும் உங்களுக்கு  தெரியவில்லையா என்று கேட்கும் புத்திசாலிகளை  என்ன செய்வது? இதை கூட சகித்து கொள்ளலாம் ஆங்கில இலக்கியம் ஆ நீங்கள் chetan  Bhagat நாவல்கள் எல்லாம் படித்து இருகிறீர்களா என்று கேட்பர் சிலர். அதை கேட்கும் போது எல்லாம் இதயம் வெடிக்காத குறை தான். pulp  fiction யை எல்லாம் இலக்கியம் என்று முத்திரை குத்துவது எத்தனை வேதனை குரிய விஷயம். எது இலக்கியம் எது வெறும் எழுத்துகளின் கோர்வை என்று புரிந்து கொள்வது பெரிய விஷயம் அல்ல. ரயில் பயணத்தின் போது அவசரத்தில் ஏதோ சில புத்தகத்தை வாங்கி கொண்டு போவது உண்டு. படித்துகொண்டே பயணம் செய்வது போல் ஒரு அழகிய நிமிடங்கள் எதுவும் இல்லை. இறங்கும் இடம் வந்ததும் அந்த புத்தகத்தில் படித்து ஏதோ ஒன்று நம் மனதில் சலனத்தை ஏற்படுத்தினால், யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றினாலோ, யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத சில உணர்வுகளுக்கு உயிர் தந்தால், வாழ்கையில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தை மீண்டும் நினைவு படுத்தி கண்ணீரை வர வைத்தால் இல்லை ஒரு தனி மனிதரின்  உணர்வுகளையும் உணர்சிகளையும் பதிவு செய்தால், ஒரு சமூகத்தின் குரல் ஆக அது ஒலித்தால், நம்முள் ஒருவிதமான மாற்றத்தை கொண்டு வந்தால்  அது நிச்சயம் இலக்கியம் தான்.. அது ஒரு வரியாக கூட இருக்கலாம்..! Robert  Frost  யின் Miles to go before  I sleep   ,வள்ளலாரின் வாடிய பயிரை கண்ட போது எல்லாம் வாடினேன் ,  கீட்ஸ் யின் Beauty is truth, truth beautyஎன்ற ஒற்றை வரிகளுக்கு  பின் இருக்கும் இலக்கியமும் தத்துவமும் இன்றும் ரசிக்க கூடியவை. எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் ரயிலில் யே வைத்துவிட்டும் வரும் புத்தங்கள் இலக்கியம் ஆகாது. நம்முடைய  ரகசியங்கள் போல் பாதுகாத்து வைத்து இருப்பது தான் இலக்கிய புத்தகங்கள். எனக்கு இலக்கியத்தின் சுவையை ஊட்டிய ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் Mam அவர்கள் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் போது அவர் சொன்னார் 'Im an Indian teacher not an English teacher ' . கொஞ்சம் சிந்தித்தால் இதனின் உள் இருக்கும் அர்த்தம் புரியும். ஆங்கில இலக்கியம் என்றாலே நாம் மேல் நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்கிறோம். இளங்கலை ஆங்கில இலக்கியத்தில் எல்லா பல்கலைகலகத்துகும் பொதுவான  பாடம் 'Social History of England '. நம்முடைய வரலாறே தெரியாத பட்சத்தில் என்ன தேவைக்கு இங்கிலாந்த் யின் வரலாறை அறிமுக படுத்துகிறார்கள்? இலக்கியம் படிக்கும் போது அந்த எழுத்தாளர்  வாழ்ந்த காலம் அவர் இருந்த சமூகம் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். ஆங்கில இலக்கியம் syllabus யில் அதிகமாக படிப்பது அவர்களின் படைப்புகளே அதனால் அவர்களின் வரலாறு தெரிந்து இருப்பது அவசியமே. பின் வந்த வருடங்களில் American Literature , Canadian Literature , Common  Wealth Literature  என்ற பாடங்கள் அறிமுக செயப்பட்டது. சமீப வருடத்தில் அறிமுகம் செய்தது தான் Indian Writing in  English . இதில் ர.கே .நாராயணன்  ,வி எஸ் .நைபால், தாகூர் அவர்களின் படைப்புகள் அடங்கும். கனடா, பிரெஞ்சு போன்ற நாடுகளின் இலக்கியத்தின் ஆங்கில மொழி பெயர்ப்புகள் பாட திட்டத்தில் உள்ளது ஆனால் தமிழ் இலக்கியதின் மொழி பெயர்ப்பு எதுவும் பாடத்திட்டத்தில் இல்லை. சில பல்கலைகழகத்தில் மட்டும் Dalit Studies என்ற பாடம் உள்ளது. அதில் பாமாவின் சிறுகதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பு  உண்டு. தமிழ் எழுதார்களின் படைப்புக்களை தெரிந்து கொள்வதற்கு இது ஒரு சிறிய வழி யே. orientalism (மேற்கு நாட்டினர் நம்முடைய  கலாச்சாரத்தை பற்றி எழுதுவது) பற்றி நிறைய கட்டுரைகள் உண்டு. நம்  நாட்டில் இருப்பவர் நம் ஊரு மாரியம்மன் கோவில் பற்றியும் அதில் நடக்கும் சடங்குகள் பற்றியும் ஆராய்ச்சி பண்ண வேண்டும் என்றால் கூட அவர்கள்  நாம் கலச்சாரத்தை பற்றி எழுதியதை யே அடிப்படையாக  கொண்டு ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டிய நிலைமை. தமிழ் யில் ஆராய்ச்சிகள் குறைவோ அல்லது மொழி பெயர்ப்பு குறைவோ என்று எல்லாம் சொல்லி விட முடியாது. எல்லாம் உண்டு ஆனால் நாம் பாட திட்டத்தில் இல்லை. அதை கொண்டு வதற்கான முயற்சிகளும் இல்லை. ஆங்கில இலக்கியம் என்றால் மேற்கில் இருந்து இறக்குமதி செய்ததை மட்டும் தான் படிக்கச் வேண்டுமா? கர்நாடக வில் படிக்கும் எந்த ஒரு ஆங்கில இலக்கியம் மாணவர்களுக்கும் Girish Karnad வை பற்றி தெரியாமல் இருபதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் நாம் ஊரில் இருக்கும் மாணவர்களுக்கோ புதுமை பித்தன் பெயரே புதுமையாக தான் உள்ளது. எதை நோக்கி நாம் செல்கிறோம்? யாரை மனதில் வைத்து syllabus யை தயார் செய்கிறார்கள்?  பிரிட்டிஷ் காரர்கள் கூட படிக்காத இலக்கியத்தை நாம் இங்கு தூக்கி பிடித்து கொண்டு இருக்கிறோம். அவர்களுக்கு நம்மால் நம்முடைய திருக்குறளை கூட சொல்லி தர முடியாது. மற்ற நாடு இலக்கியத்தை படிப்பது  எந்த தவறும் இல்லை..  உலகின் மிக சிறந்த படைப்புக்களை தந்த ரஷ்ய இலக்கியம் பாட திட்டத்தில் இல்லை. மார்க்சியம் படித்து தவறி போய்  ஞானம் பிறந்து விட்டால்? அதனால் தான் ஒதுக்கி வைத்து உள்ளார்கள் போல். இதை எல்லாம் விட கொடுமை soft skills  என்ற course  யை பாட திட்டதில்  இணைத்து உள்ளது தான். இது பெரும் பாலும் ஆங்கில இலக்கியம் படிபவர்களுக்கு மட்டுமே  ஒன்றை போல் தான் காட்சி அளித்தது. இப்போது தான் எல்லா துறை மாணவர்களுக்கும் அறிமுகம் செயப்பட்டுள்ளது. இதில் MNC  யில் வேலை கிடைபதற்காக மாணவர்களை தயார் செய்கின்றனர். மற்றவரிடம் எப்படி கை குலுக்க வேண்டும், எப்படி நாற்காலியில் உட்கார வேண்டும், எப்படி ஸ்பூனையும் fork யையும் கொண்டு  சாப்பிட வேண்டும் என்று பயிற்சி தருகின்றனர். என்ன தேவைக்கு இது எல்லாம் நாம் கற்று கொள்ள வேண்டும்? அவர்கள் குளூர் பகுதில் வாழ்பவர்கள். கையில் gloves  போட  வேண்டிய கட்டாயம் குடிப்பதை தவிர வேற எதற்கும் தண்ணீரை பயன் படுத்த முடியாதவர்கள். நமக்கு என்ன கேடு? கை எப்படி குலுக்க வேண்டும் என்பதற்கு ஒரு பாடமா? வணக்கம் என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தானே. எப்படி நாக்கை சுழற்றினாலும் அவர்களை போல் நாம் ஆங்கிலம் பேச முடியாது அதற்கான அவசியமும் இல்லை. மற்றவர்களுக்கு நாம் கருத்தை பகிர்ந்து கொள்வதற்கே  பேசுகிறோம் யாருக்கும் புரியாத விதத்தில் பேசி என பயன்? ஒருவரின் மன நிலை எப்படி உள்ளது என்பதை அறியவும் எப்படி நாம் மற்றவிடம் பேச வேண்டும், பழக வேண்டும் என்று சொல்லி தருகிறார்கள் .இலக்கியம் படித்து வராத புரிதலும் தெளிவும் இவர்கள் சொல்வதில் வந்து விட போகிறதா? ஏன் இந்த அயல் நாட்டு மோகம் இப்படி தலை விரித்து ஆடுகிறது? வேற்று மொழிகளை படிபதற்கான  தேவைகள் நம்மிடம் உண்டு. தமிழ் மற்றும் அறிந்து இருபவர்களுக்கு ஆன வேலை வாய்புகள் தமிழ் நாட்டிலே கம்மி  தான். மொழி பற்று, மொழி அரசியல் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து பார்த்தால் மற்ற மொழிகளை கற்று கொள்ள  வேண்டியதின் அவசியம் புரியும். அவசியம் என்று சொல்வதை விட அது ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும். மொழிபெயர்ப்பு செய்த புத்தகத்தை படிக்கும்போதே இப்படி சிலிர்த்து போகிறேனே ரஷ்ய மொழியை நேரடியாக படித்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு ஏக்கம் இன்னும் உண்டு. ஆனால்  மற்ற நாட்டின் கலாச்சாரதை  வலு கட்டாயமாக நாம் பின்பற்றவேண்டும் என்பது  சமுதாயத்தின் மிக பெரிய அவலம். ‘ இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று’ என்பதை விட ஒரு soft skills உண்டா? தமிழ் இலக்கியங்கள் பாட திட்டத்தில் இல்லையே என்று வருதபடுவதற்கு தமிழ் இலக்கியம் எடுத்து இருக்கலாமே என்று கேட்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் தமிழ் இலக்கிய மொழி பெயர்ப்பு மட்டும் தான் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. கனடா,common  wealth  , ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளின் இலக்கியத்தை தேடி பிடித்து நம் நாட்டு மக்களுக்கு தருபவர்கள் ஏன் நம் நாட்டு இலக்கியத்தை கண்டு கொள்ள மறுக்கின்றனர்? எல்லா நாட்டு இலக்கியத்தையும் கரைத்து குடித்து வெளி நாட்டிற்கு சென்று நம் சொந்த நாடுடைய இலக்கியம், சமூகம், அரசியல் வரலாறு தெரியாமல் இருப்பது எத்தனை  கொடுமை. மார்க்சிய கொள்களை , அதை சார்ந்து  எந்த ஆராய்ச்சி பண்ண வேண்டும் என்றாலும் ரஷ்ய இலக்கியங்களை தேடி செல்கின்றனர். இயற்கை சார்ந்த அல்லது இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆராய்ச்சி செய்ய அமெரிக்க இலக்கியங்கள் தேடி செல்கின்றனர்( ஜான் ஸ்டீன்பெக் யின் படைப்புகள் எல்லாம் இதை சார்ந்தது தான்) பெண்ணியம் பற்றிய ஆராய்ச்சி செய்வதற்கும் நாம் மேல் நாட்டு இலக்கியத்தை நாடுவதற்கு காரணம் நம்முடைய இலக்கியத்தில் இதைப்பற்றி எல்லாம் குறிப்பிடவில்லை என்று அர்த்தம் இல்லை நம்முடைய இலக்கியத்தை தெரிந்து கொளவ்தற்கான வாய்புகள் கம்மி அதை அறிமுகம் செய்து வைப்பதற்கும் கல்வியாளர்கள் தயாராக இல்லை பாவம் அவர்களை சொல்லி தப்பு இல்லை. தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்று மேடை பேச்சுகளில் சொல்வதற்கே நேரம் இல்லை இதையெல்லாம் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?.  பல்கலைகழகம் , கல்லூரியில்  ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணர்வர்கள் எந்த தலைப்பு ஆக இருந்தாலும் குறைந்தது 50 கும் உட்பட்ட மேல் நாட்டு படைப்புக்களை மேற்கோளாக காட்டுகின்றனர் ஆனால் நம் நாட்டு படைப்புக்களை பற்றிய எந்த தகவல்களும் இல்லை. எப்படி புரட்டி பார்த்தாலும் தெரியாது.பெண்ணியம் என்றால்  உடனே Lucie Irigaray ,Virginia  Woolf , Helene Cioux தான் நினைவுக்கு வருகின்றனர். 'அகலிகை மீண்டும் கல்லானால்' என்று புதுமைப்பித்தனின் சாப விமோஷனத்தை விட என்ன பெண்ணியம் பேசிவிட முடியும்? சங்க இலக்கியங்களில் இல்லாத பொது உடைமையும். பகிர்ந்து கொள்ளுதலும், அழகியலும், காதலும் எங்கு உள்ளது. இயற்கை என்றவுடன் ஜான் ஸ்டீன்பெக், ஹெமிங்க்வே நம் நினைவுக்கு வருவது போல் குறிஞ்சி.,முல்லை,மருதம்,நெய்தல், பாலை பாடல்கள் எல்லாம் வருவது இல்லை. கடவுள் நம்பிக்கை சார்ந்த பாடல்கள் என்றால் மில்டன், Christina Rossetti பாடல்களை மேற்கோளாக காட்டுகிறோம் நம்முடைய பக்தி இலக்கியம் எனவாயிற்று? திருவாசகம் மறந்து போனதா? ரஷ்ய மற்றும் ஜெர்மனிய தத்துவங்களை தூக்கி பிடிதிற்கும் அளவுக்கு நம்முடைய நாலடியார், இனியவை நாற்பது, இன்னா நாற்பது, பழமொழி நானூறு இவற்றை எல்லாம் நாம் போற்றுவது இல்லை. இப்போது வளர்ந்து  வரும் அல்ல பிரபலம் அடைந்து வரும் குழந்தைகள் இலக்கியம் பற்றிய ஆராய்ச்சிக்கு Arthur Conan Doyle ,Daniel Defoe , Anne Frank யை முக்கியமான படைப்பாக  கருதுவது போல் ஆத்திசூடி , மூதுரை, நல்வழி எல்லாம் நம் கருதுவது இல்லை. ஹென்றி 8th , ஹென்றி 4 , ரிச்சர்ட் 3 என்று யாருனே தெரியத்வார்களின் வரலாறை எல்லாம் விழுந்து விழுந்து படிக்கச் வேண்டிய கட்டாயம் உண்டு சரி அவர்களின் மொழி யை நாம் படிக்கிறோம்  அதற்காக அவர்களுடைய வரலாறை பாட  திட்டதில் இணைத்து உள்ளனர்  அப்போ நம் நாட்டில் வாழ்வதற்காக ஜெயம்கொண்டார் யின் கலிங்கத்துபரணி யின் மொழிபெயர்ப்பை ஏன் இணைக்க வில்லை? இன்று ஆங்கில இலக்கியம் படிபவர்கள் அனைவர்க்கும் ballad , epic , ode , elegy , sonnett , எல்லாம் எப்படி வந்தது, அதனுடைய இலக்கணம் தெரியும், ஆனால்  ஆங்கில இலக்கியம் படிக்கும் தமிழர்களுக்கு ஆசிரியப்பா, வெண்பாவின் இலக்கணம் கேட்டால் தெரியாது. ஆங்கிலத்தில் இருக்கும் 19 figures of  speech யையும் விரல் நுனியில் வைத்திற்கும் மாணவர்கள் எதுகை மோனை என்றால் கொஞ்சம் யோசிப்பது வேதனையாக தான் உள்ளது. ஒரு மொழியை ஒழித்து விட்டு நம் மொழியை வளர்ப்பது எத்தனை முட்டாள்தனமோ அதனை விட அபத்தமானது    ஆங்கிலம் படிக்கிறோம் என்ற ஒற்றை காரணத்துக்காக நம் இலக்கியத்தை ஒதுக்கி வைப்பதற்கு. அயல் நாட்டு மீது உள்ள மோகமா இல்லை தமிழ் தானே என்ற அலட்சியமா? இல்லை தமிழ் இலக்கியம் படித்து என்ன செய்கிறோம் என்ற அறியாமை யா? தமிழர்கள் மீதே இல்லாத அக்கரை அரசு  இலக்கியம் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பது நம்முடைய பேராசை யா ?? வெளி நாட்டு வாழ்கை மீது மோகம் கொண்டு, அவர்களை சார்ந்த எல்லா விஷயங்களையும் கற்று கொள்வது பார்க்கும் போது மீண்டும் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் mam சொன்ன வரி தான் நியாபகம் வருகிறது ‘to live abroad is a social status but a personal tragedy’…
ஆங்கிலத்தில் தமிழ் இலக்கியம்:
The Smile of Murugan : History of Tamil Literature of South India by Kamil V Zvelebil
Tamil Literature by Kamil V Zvelebil
The Poets of Ancient Tamil : Their milieu and their Sanskrit Literature By George L Hart
Tamil Heroic Poetry by Kailasapathy
The eight anthologies : a study in early Tamil literature by John Ralston Marr
Literary conventions of Akam poetry by Kamil Zvelebil
Landscape and Poetry – A study of nature in Classical Poetry by Xavier Thani Nayagam(A detailed study of treatment of nature in Sangam poems)
Tamil Love poetry and poetics – Takanobu Takahashi
Home Life among Tamils in the Sangam Age by K.Gnanambal
The Interior Landscape: Love Poems from a Classical Tamil Anthology- AK Ramanujan
Ambai,
Mother has committed a murder;
tr. by Venkat Swaminathan
Janakiraman, T.,
Perfumed night,
tr  by Kamala Ramji
Janakiraman, T.,
Wooden cow,
tr. by Lakshmi Kannan
Jayakandan,
A kind of death,
tr by Avvai Sambandan
Jayakanthan.
Agni pravesham,
tr by Avvai Sambandan
Kasyapan,
Snake;
tr. by Nakulan
Nammalvar,
Tiruviruttam: the drama of the Love Divine,
tr. by Prema Nandakumar
 Neela Padmanabhan,,
Reputation,
tr. by M.S. Ramaswami
Neela Padmanabhan, ,
The pimp,
tr. by M.S. Ramaswami
Indira Parthasarathy,
The river of blood,
tr. by Ka Naa Subramanyam
Indira Parthasarathy,
Through the veils,
tr. by Lakshmi Kannan

No comments:

Post a Comment