கங்காவின் முகத்தில் இருக்கும் சோகமும் குழப்பமும் கவிதா விற்கு
நன்றாக தெரிந்தது. காரணமும் தெரியும் இருந்தாலும் கேட்டாள்.. என்ன அக்கா
ஆச்சு? ஏன் முகம் வாடி உள்ளது? வழக்கம் போல் ஆரமித்தாள்.. வருணை நினைத்தால்
கஷ்டமாக உள்ளது.. என்ன தான் பன்றது? 28 வயதாகிறது இன்னும் பொறுப்பு
வரவில்லை.. தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருகிறான்.. என்ன செய்வது
என்றே தெரியவில்லை. கவிதா ஆறுதல் கூறினாள்’கவலை படாதிங்க அக்கா.. கல்யாணம்
செய்துவைத்தால் சரி ஆக போயிரும்..!!’
இப்படி ஒரு அபத்தமான வரி நம் ஊரில் மட்டும் தான் கேட்க முடியும். அது என்ன லாஜிக்? ஏதோ ஒரு பெண்ணை கல்யாணம் செய்தால் குடிகாரன் கொலைகாரன் பொறுக்கி எல்லாம் நல்லவனா மாறிடுவானா? பாவிங்களா.. பெண் தன்னுடைய அன்பு பொறுமை பணிவு இதை எல்லாம் வைத்து எப்பேர்பட்ட கெட்டவனையும் மனிதனாக மாற்றிவிடுவாள்! இது தானே உங்கள் பதில்? சரி அப்படியே இருந்து விட்டு போகட்டும். அந்த பெண்ணின் வாழ்க்கை? அவளின் கனவுகள்? குடிக்கிறான், கேடு கெட்டுஅலைகிறான் என்றால் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போக வேண்டியது தானே? இன்னமும் இருக்கிற நோயை மறைத்து ஏதோ ஒரு அசட்டு தனமான நம்பிக்கையில் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது நம் சமுதாயத்தின் மிக பெரிய அவலம். கல்யாணத்திற்கு பிறகு தெரிந்து இருந்தால் என்ன செய முடியும்? அவனோட தான் வாழ்ந்து ஆக வேண்டும். இது தானே சொல வருகீர்கள்? சரி அப்படியே இருக்கட்டும். என்றோ ஒரு நாள் நோயால் சாக தானே போறான் இப்பவே போகட்டும் என்று தலையில் கல்லை போட்டால் நீங்கள் ஒத்து கொள்விர்களா?? அப்படி என்றால் நோய் உள்ள ஒருவன் திருமணமே செய்து கொள்ள கூடாதா? நான் அப்படியா சொன்னேன்? ஒழுங்கா கேட்டு விட்டு குற்றம் கூறுங்கள். செய்து கொள்ளுங்கள் ஒன்னும் தப்பு இல்லை. ஆனால் தயவுசெய்து பெண்ணிடம் சொலி விட்டு செயுங்கள். நீங்கள் சொல்வது போல் பொறுமை அன்பு பணிவு எல்லாம் இருந்தாலும் கூட அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் இருக்க வேண்டும் அல்லவா? ஆயிரம் பொய் சொலி கல்யாணம் செயலமஎன்று எவனோ ஒருவன் உளறிவிட்டு போனதை தான் நாம் இத்தனை காலமாக பின்பற்றி வருகிறோம்! என்று தானே சொல்றீங்கள்? அட பாவிங்களா.. அந்த காலத்தில் போக்கு வரத்து வசதி இல்லை.. வாழ்கை முழுவதும் ஒன்றாய் இருக்க போகிறார்கள் அதனால் எந்த மறைவும் இருக்க கூடாது என்று அவர்கள் நினைத்ததால் ஆயிரம் முறை 'போய்' சொலி கல்யாணம் செயலாம் என்று சொன்னார்கள். ஆயிரம் முறை போய் பார்த்து பேசி தெளிவு ஆக தெரிந்த பிறகு கல்யாணம் செயலாம் என்று சொன்னதை நம் வசதி க்கு ஏற்ப மாற்றி கொள்கிறோம்.
'தன் காதலனின் விருப்பப்படி சொந்த நாட்டையும், குடும்பங்களையும் பிரிந்து வேலையில்லாத காதலனுடன் ஒருவேளை சாப்பாட்டுக்கும், தங்கி இருந்த மிகச் சிறிய அறையிலும் தன்னுடைய காதலனுடன் வாழ்க்கையை தொடங்குகிறாள். வறுமையின் விளிம்பில் இருந்த போதும் ஒருமுறைக் கூட காதல் கணவனை அவள் குற்றம் சுமத்தவில்லை. அவள் காதலை மட்டும் நேசித்தாள். கார்ல் மார்க்ஸிடம் அளவுக்கு அதிகமாக கிடைத்தது'. இந்த வரிகள் கார்ல் மார்க்ஸ் ஜென்னி அவர்களின் காதல் பற்றி தெரிந்து கொள்வதற்கு புரட்டிய போது படித்தது. ஜென்னி மாதிரி காதல் இருந்தால் தப்பே இல்லை. நல கணவன் குடும்பம் குழந்தைகள் என்று கனவுகளை சுமந்து கொண்டு இருக்கும் ஒரு சராசரியான பெண்ணுக்கு திருமணம் செய்து விட்டு 'அவன்' திருமணம் ஆன உடன் திருந்த வேண்டும் என்று நினைப்பது சரியா?
பெண் என்றால்தியாகம் செய்யவேண்டும் அமைதியாக இருக்க வேண்டும் என்று ஏன் எப்போதும் எதிர்பார்த்து கொண்டே இருக்கிறோம்? சிறு தியாகங்கள், வலிகள், மற்றவற்காக சிந்தும் கண்ணீர் தான் பெண்ணையும் வாழ்கையும் அழகுபடுத்துகிறது. ஆனால் அந்த தியாகம் வலி எல்லாவற்றுக்கும் பொருள் வேண்டாமா? dont you think she deserves a better life ?? யாருனே தெரியாத ஒருவனை திருமணம் என்ற பெயரால் கயிறை கட்டி கொண்டதால் காலம் முழுவதும் அவதி பட வேண்டுமா?
அப்படியே உண்மை தெரிந்து இன்னும் சகித்து கொண்டும் ஏற்று கொண்டும் வாழும் பெண்கள் இருகிறார்கள். ஒரு வேலை நம் நம்புவதை போல் அவன் திருந்தி விட்டால் உங்கள் கடவுளின் புண்ணியத்தால் சரி ஆயிர்சு என்று சொல்வீர்கள் இல்லை என்றால் அந்த பெண்ணின் நிலைமை??? வட்டத்தை விட்டு வெளியே வந்தால் அந்த பெண்ணுக்கு கிடைக்கும் பெயர் வாழா வெட்டி! கணவன் இறந்து விட்டால் விதவை! குழந்தை பிறக்கா விட்டால் மலடி! இதில் எது ஆணுக்கு நடந்தாலும் ஒரே ஒரு பெயர் தான் 'புது மாப்பிள்ளை!'
பெண்கள் எந்த உடை அணிந்து கல்லூரிக்கு வர வேண்டும் என்று அரசு நிர்ணைக்க கூடாது. அரைகுறை ஆக டிரஸ் போட்டு கொண்டு வந்தால் அவளுக்கு தானா பிரச்சனை? பொண்ணுங்க இப்படி வந்தால் பசங்க சும்மா இருப்பார்களா என்று தானே யோசிகீர்கள்? உங்கள் mind voice கேட்குது. I dont understand why do you blame your weakness on the object !of temptation . சமிபத்தில் படித்த மிக பிடித்த கட்டுரை பெரியாரின் 'ஆண் அல்லது பெண்ணின் காதல் காமம் பற்றி முன்றாவது நபர் பேச உரிமை இல்லை' என்ற தலைப்பின் கீழே அவர் கூறியது. அது சரி என்றால் பெண்ணின் ஆடை மற்றும் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவது சரி இல்லை. அப்புறம் எப்படி வேனாலும் வாழலாமா? அப்படியா உங்கள் காதில் விழுந்தது? அதுக்கு நான் பொறுப்பு இல்லை.. Im responsible only for what I say not for the interpretations you make out of it . அவளுக்கு எப்படி தோணுதோ அப்படியே வாழலாமே. ஒருவரின் சிந்தனையோ செயலோ வார்த்தைகளோ சக மனிதனை பாதிக்காத வரைக்கும் அவள் விருப்ப படி யே வாழட்டுமே. ஒரே ஒரு வாழ்க்கை அதுக்கு ஏன் இத்தனை வரையறைகள்??
translation வகுப்பில் நான் கேட்ட கதை ஒன்று நியாபகம் வருகிறது. வீரபனை எப்படி எல்லாரும் வலை வீசி தேடினார்களோ அதே மாதிரி தான் 'அவளையும்' ( பெயர் நியாபகம் இல்லை) தேடினார்கள். அவள் ஒரு பெரிய கூட்டத்தின் தலைவி. போலீஸ் க்கு மிக பெரிய சவாலாக இருந்தாள். போலீஸ் மிலிட்டரி க்கு உத்தரவு விட்டது. அவளை உடனே பிடிக்க வேண்டும். பிடித்து விட்டு என்ன வேனாலும் செயலாம் என்று சொலியது. ஒரு பெண் மாட்டி கொண்டால் என செய்வார்கள்? என வேனாலும் செயலாம் என்றால் என்ன அர்த்தம்? கற்பு கற்பு என்று அதன் அர்த்தம் என என்று தெரியாமலே சொல்கிறோமே அதை பறித்து விட்டதாக பெருமை கொள்வோம் அது தானே? ஆம் அது தான் .. அவள் அவர்களின் கையில் சிக்கினாள். மிலிட்டரி தலைவன் அவளை என வேனாலும் செயலாம் என்ற விஷயத்தை மற்றவரிடம் சொன்னான். அவளை மாறி மாறி கற்பழித்தனர். எலாரும் அவளை சுற்றி நின்று கொண்டனர். ஆடைகள் ஏதும் இல்லாமல் நிர்வானமாய் கீழே இருந்தாள். தலைவன் கொஞ்சம் தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான். கூட்டத்தில் ஒருவன் அவளின் துணியை முகத்தில் எரிந்து 'இந்த உடுத்தி கொண்டு தலைவனிடம் போ' என்று சொலி சிரித்தான். யாரும் இடத்தை விட்டு நகரவில்லை.. சிரித்து கொண்டே இருந்தனர்.
அவள் மெதுவாக எழுந்தாள்.. துணியை கையில் எடுத்தாள்.. ஆனால் அணிந்து கொள்ளவில்லை.. எதையும் மறைத்து கொள்ளவில்லை. அப்படியே தலைவனை நோக்கி நடந்தாள்.. தலைவனின் அருகில் சென்றாள் அவன் மார்பு முட்டும் அளவுக்கு பக்கத்தில் போனாள்.. துணியை தூக்கி அவன் முகத்தில் எரிந்து 'who is man in you for me to wear dress ??? என்று கேட்டாள்
சிரிப்பு சத்தம் அடங்குகிறது.....
பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது போல் ஒரு ஆண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒன்றும் தவறாக தோன்றவில்லை. அநாகரிகமாக நடந்து கொண்டு மனிதேயம் இல்லாமல் வார்த்தைகளாலும் செயலாலும் துன்பபடுத்தி விட்டு பெண்களை குறை சொலதிர்கள்..
இன்னும் நம் சமுதாயத்தில் பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன் கோவையில் முஸ்கின் என்ற 10 வயது ! சிறுமி பாலியல் கொடுமையால் இறந்தாள். அவள் குழந்தை என்றதால் உடனடியாக அந்த மிருகத்தை! பிடித்து ஜெயிலில் போட்டார்கள் பிறகு சுட்டு கொன்றார்கள். மிதித்தே கொன்றுக்க வேண்டும்! இதுவே 20 வயது பெண் என்றால் உடனே நம் கற்பனை குதிரையை ஓட விட்டுருபோம். ஒருவேளை அந்த பெண்ணுக்கு முன்பே அவனோட தொடர்பு இருந்திற்குமோ? யாருக்கு தெரியும் அவள் அரை குறையாக டிரஸ் போட்டு போயிருப்பாள் அதான் இப்படி நடந்திற்கும்.. அவளை யார் இரவு தனியாக போக சொன்னார்? என்று பல கேள்விகள் தோன்றும். எதுவாக இருந்ததால் என்ன அவளை மீறி நடந்த செயலுக்கு அவள் எப்படி பொறுப்பாக முடியும்? சமுதாயத்தை பொறுத்த வரை கற்பு என்பது பெண் உடம்பில் மட்டுமே இருப்பது அது அவள் விருபத்துக்கு மீறி தொலைக்கிற ! போது ஏன் அவளை ஒதுக்கி வைக்கிறோம்? குழந்தை திருமணம், பாலியல் கொடுமை, இவற்றை தடுபதற்கு துப்பு இல்லை ஆனால் எங்கே எல்லாம் இடம் உள்ளதோ அங்க எல்லாம் பெண்ணின் திருமணம் வயது 21 என்று எழுதிவைகிறோம். அரசு க்கு தான் பெண்கள் மீது எத்தனை அக்கறை.. இருவரின் தனிப்பட்ட கருத்து வேறுபாட்டுக்காக குழந்தைகளின் படிப்பை நிறுத்தி வைத்து விட்டு எந்த சலனமும் இல்லாமல் இருக்கும் அரசு இனி இந்த மாதிரி ஊரை ஏமாற்றும் வரிகளை எழுதுவதை நிறுத்திவிட்டு வழக்கம் போல அவர்கள் பொழப்பை பார்க்கட்டும். மரம் வளர்ப்போம் நாட்டை பாதுகாப்போம் என்று எல்லா இடத்திலும் எழுதிவிட்டு செம் மொழி மாநாட்டுக்கு ஆகா கோவையில் அத்தனை மரத்தையும் வெட்டிய அரசின் கையை வெட்டவேண்டும். இன்னும் இரவு ஒரு பெண் ஆண் துணை இல்லாமல் தனியே நிலவை ரசிபதற்கு கூட வெளியே போக முடியாதது அவமானம், கேடு, அவலம். வேறு எதாவது வார்த்தை இருந்தால் சேர்த்து கொள்ளுங்கள்.

No comments:
Post a Comment