Friday 23 November 2012

பெண்...!

பெண் வயது 23 ஆண் வயது 28 10 பொருத்தமும் சரி ஆக இருந்தது. ஆகஸ்ட் 22 கல்யாணம். இருவரும் IT கம்பெனி யில் வேலை செய்கிறார்கள். காலை 9  மணிக்கு ஆபீஸ் யில் இருந்து ஆக வேண்டும். இரவு    எத்தனை    மணி ஆகும் என்று குறிபிட்டு சொல்ல முடியாது. இருவரது ரசனையும் ஆர்வமும் ஒரே மாதிரி ஆக தான் இருந்தது இருந்தபோதிலும் அவர்களின் வித்தியாசங்களை இருவரும் ரசித்து மதிப்பு அளித்தது உறவை இன்னும் அழகாக ஆகியது. கூட்டு குடும்பத்தில் இருந்து வந்ததால் புதிய உறவுகளை சமாளிப்பது தாரா வுக்கு பெரியதாக இல்லை. அவளின் கல கல என்ற பேச்சும் புன்னகையை எப்போதும் இதழில் பூசி கொண்டிருக்கும் முகத்தையும் அனைவர்க்கும் பிடித்து இருந்தது.
                                          ஆபீஸ் யில் இருக்கும் போது அக்காவிடம் இருந்து போன் வந்தது. மீட்டிங் postpone ஆயிர்ச்சு. 10 மணி ஆகிவிடும். நல்ல நாளிலே அவர் சிக்கிரம் வர மாட்டார் இன்னைக்கு வேற சனி கிழமை சொல்லவே வேண்டாம். நீ போய் கிருஷ்ணா வை கூபிட்டு வந்துரு. சரி அக்கா என்று போன் யை வைத்தவள் வேலையை சீக்கிரமாக முடித்து விட்டு கிளம்பினாள். ஸ்கூட்டி டே கேர் சென்டர் க்கு போனது . உள்ளே இருந்து ஆயம்மா வந்தார். யார் வேண்டும்? கிருஷ்ணா என்று சொன்னாள். உங்களை நான் இதற்கு முன்னாடி பார்த்தது இல்லையே என்று ஆயம்மா குழப்பத்துடன் கேட்டார். என் கணவனின் அண்ணன் பையன் தான் கிருஷ்ணா என்றாள். ஒ அப்படியா கிருஷ்ணா குறும்பு ஜாஸ்தி. எல்லா குழந்தைகளையும் கடித்து  வைக்கிறான். மற்ற குழந்தைகள் கொண்டுவரும் சாப்பாடு தான் சாப்டுகிறான். அவனுக்கு முட்டை ரொம்ப பிடிக்கிறது. நாளையில் இருந்து முட்டை டிபன்யில் வைத்து கொடுங்கள். காதில் ஏதோ புண் போல சொரிஞ்சுகிட்டே இருக்கான். டாக்டர் கிட்டே காமிங்கள் என்று ஆயம்மா சொன்னார். தாரா எதுவும் பேசவில்லை. கிருஷ்ணா வாட்சமன் அண்ணா க்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு தன்னுடன் இருக்கும் எல்லாருக்கும் bye சொலிவிட்டு கிளம்பினான். கிருஷ்ணா வை hospital க்கு கூட்டி சென்றாள்.தயக்கத்துடன் உள்ளே சென்றாள். காதில் புன் என்று நினைகிறேன் என்றாள். காதை check செய்து விட்டு எத்தனை நாளாக உள்ளது என்று கேட்டார். தாரா முழித்தாள். எதுக்கு தான் உங்களுக்கு எல்லாம் குழந்தை யோ என்று இன்னும் என்னமோ முனுமுனுத்து கொண்டே மாத்திரை எழுதி கொடுத்தார். கை படாமல் பார்த்து கொள்ளுங்கள் எல்லா இடத்துக்கும் பரவ ஆரமித்திடும். இந்த ointment யை தடவி விடுங்கள் சரி ஆக போயிரும் என்று டாக்டர் சொன்னார். தாரா கிருஷ்ணாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாள்.
                             இரவு எல்லாம் தூக்கமே இல்லை. எதை யோ யோசித்து கொண்டே இருந்தாள். புரண்டு புரண்டு படுத்தாள். ஆயம்மா சொன்னதை நினைத்து பார்த்தாள். கிருஷ்ணா குட்டி க்கு முட்டை பிடிக்கும் என்று அவளுக்கு இன்று வரை தெரியாது. ஆயம்மா எத்தனை தெரிந்து வைத்து உள்ளார். கிருஷ்ணா தூங்கி தான் தாரா பல நாட்கள் பார்த்து இருக்கிறாள். சண்டே மட்டும் தான் விடுமுறை. அன்றைக்கு ஒரு நாள் தான் நிம்மதியாக தூங்க முடியும். வீட்டில் எல்லாரும் அன்றைக்கு late ஆக தான் எழுவார்கள். வீட்டை சுத்தம் செய்து மற்ற வேலைகள் எல்லாம் சரி ஆக இருக்கும். என்றைகாவது வெளியே போவது உண்டு. தன் கடந்த கால வாழ்கையை நினைவு படுத்தி பார்த்தாள். இரவு எப்போதும் ஒன்றாக தான் உட்காந்து சாப்பிடுவார்கள். அண்ணனிடம் சண்டை போட்டது விட்டு கொடுத்தது. அவளுக்கு அப்படியே அப்பா வின் குணம் என்று சொலுவார்கள். அவளின் mannerisms அம்மா வை போல் இருக்கும். டே கேர்  சென்டர் என்று ஒன்னு அவள் கேள்வி பட்டது இல்லை. டாக்டர் சொன்ன வார்த்தைகள் முகத்தில் பளார் என்று  அறைந்தது  போல இருந்தது. இபோ இருக்கும் சூழ்நிலையில் வேலையை விட முடியாது. இன்னும் இரண்டு வருடம் சம்பாரிச்சு சேமிக்க வேண்டும்.ஏதோ தெளிவு பெற்றது போல எழுந்தாள். தனக்குள்ளே  சொல்லி கொண்டாள். இன்னும் இரண்டு வருடம் பிறகு தான் குழந்தை என்று. அரவிந்த் என்றைக்கும் தாரா வின் சிந்தனையிலும் செயல்களிலும் நம்பிக்கை உள்ளவன்.  அவனுக்கும் தாரா சொல்வது சரி என்றே பட்டது. தன்குழந்தை எதுவும்  இழக்க கூடாது. மற்றவரிடம் ஒப்படைத்துவிட்டு எங்கையோ வேலை செய்வது அவனுக்கும் இஷ்டம் இல்லை.
 இரண்டு வருடம் பிறகு...
                           அரவிந்த்... சும்மா சும்மா சொல்கிறேன் என்று கோவபடாதே. நல்லது கெட்டது என்று எங்க சென்றாலும் எல்லாரும்  கேட்கிறார்கள். ஏன் இன்னும்......?? நாலு பேரு நாலு  விதமாக பேசுகிறார்கள். சாந்தி அத்தை போன் பன்னார்கள் அவர்களுக்கு தெரிந்த டாக்டர் இருக்கிறார். நாம் தாரா வை கூபிட்டு போலாம்.. தடார் என்று அரவிந்த் எந்திரித்தான். கோவத்தில் முகம் சிவப்பானது. அவன் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவது அவனுக்கு பிடிக்காது. சாந்தி அத்தை ஆக இருந்தாலும் சரி அம்மாவாக இருந்தாலும் சரி. எனக்கு எல்லாம் தெரியும் உங்கள் வேலை யை பாருங்கள் என்று வாசலை நோக்கி சென்றான். சமையலறையை கடந்து செலும் போது வேலைகாரி சமையல் காரனிடம் பேசி கொண்டு இருந்தது அவன் காதில் விழுந்தது. என்ன படித்து என்ன பிரயோஜனம் முதலாளி அம்மா எவ்வளவு ஆசை ஆக இருந்தார் அரவிந்த் ஐயா ஒரு பேர குழந்தையை கொடுப்பார் என்று இப்படி வெளியே தலை காட்ட முடியாமல் செய்துவிட்டாளே. ஏதோ IT கம்பெனி ஆம். பிள்ளை பெற்று கொண்டா அழகு கெட்டு விடும் என்று பயம் போல. தாலியை கூட வெளியே தெரியாதுபோல் தான் போட்டு இருக்கிறாள். முதலாளி அம்மா க்கு வேற வயசு ஆயிர்சு இவளுக்கு எதாவது அக்கறை இருக்கிறதா.. என்ன பொன்னோ.. பெண் புத்தி பின் புத்தி என்று சரி ஆக தான் இருக்கிறது.
                      ஐயோ! எவ்வளவு சுலபமாக பழமொழிகள் நமக்கு வாயில் வருகிறது. அதிலும் பெண்ணை பற்றி என்றால் சொல்லவே வேண்டாம் சரளமாக சொல்லி  கொண்டே போவோம். பழமொழியை சொன்னவர் என்ன நினைத்து சொன்னார் என்று யாருக்கும் தெரியாது ஆனால் நாம் அதற்கு கொடுக்கும் interpretations அட அட டா எல்லாம் நம் வசதிக்கு ஏற்பதை போல் மாற்றி கொள்கிறோம். பெண் புத்தி பின் புத்தி என்று அடிகடி சொல்லி நான் கேட்டு உள்ளேன். ஒரு தப்பான என்னத்தை வர வைக்கும் இந்த பழமொழிக்கு இப்படியும் அர்த்தம் உள்ளது. பின் என்றால் பின்னாடி என்ற வார்த்தையின் சுருக்கம் அதன் படி பார்த்தால் பின்னாடி நடக்க கூடிய விஷயத்தை முன்பே அறிந்து அதன்படி  செயல்படுவதன் காரணத்தால் பெண் புத்தி பின் புத்தி என்று சொல்வர்.
                       பெண்களை இழிவுபடுத்தும் பழமொழிகளுக்கும் விளம்பரங்களுக்கும் குறைச்சலே இல்லை. பெண்கள் கூந்தல் தான் நீளம் மூளை குட்டை என்று அறிஞர் காலமிக் சொல்லி இருக்கிறார் என்று நண்பர் ஒருவர் கூறினார். அளவு என்னவாக இருந்தால் என்ன இருப்பதை உபயோகம்படுதினா போதாதா. அறிவான பெண்களை பட்டியல் இடுவது ஒன்றும் கஷ்டம் யே இல்லை. என்ன பட்டியல் தான் நீண்டு கொண்டே போகும்.
                                  இன்னொரு பழமொழி உண்டு. ஆத்திரம் எனபது பெண்களுக்கு எல்லாம் அடுப்பறை வரைதானே. ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே. எனக்கும் இதில் சந்தேகம் இருந்தது உண்மையாக இருக்குமோ என்று குழந்தை போராளி என்ற புத்தகத்தை படிக்கும் வரையில் தான் என் சந்தேகம்.
                           ஒரு பெண் வாழ இன்னொரு பெண் பொறுக்கமாட்டாள். எத்தனை வருடங்களாக நாம் இதையே சொல்லி கொண்டு இருப்போம்.  சோமாலி  மாம் என்ற பெண்ணை பற்றி படியுங்கள் இந்த பழமொழி எவ்வளவு அபத்தமாக உள்ளது என்று தெரியும். தனக்கு நேர்ந்த கொடுமைகள் எந்த பெண்ணுக்கும் வர கூடாது என்று பல தடைகளை தாண்டி இன்றும் போராடி கொண்டு  இருக்கிறார்.
பெண் தீமை செய்வதில் ஆண்களை விட அறிவாளி. ஆண்கள் தரும் பாலியல் தீமையை விட என்ன தீமை செய்தார்கள் என்று தெரியவில்லை. கோவம் என்று சொல்வதில் விருப்பம் இல்லை. ரௌத்திரம் என்பதே சரி. ரௌத்திரத்தில் தீமையை கண்டு குரலை உயர்த்தி எதாவது சொன்னால் பெண் க்கு கிடைக்கும் பெயர் திமிர் பிடித்தவள் மரியாதை தெரியாதவள். இன்றும் ஆணின் அறிவு அதிகாரம் பெண்ணின் அறிவு அகங்காரம் என்று தான் நம்புகிறோம்.
                அட்டதனை உண்டி உதவாதாள் இல்வாழ்பேய் என்று நாலடியார் பாடல் வரி உண்டு. கணவனுக்கு சாதம் பரிமாராதவள் பேய் ஆம். ஏன் கணவனுக்கு கை இல்லையா போட்டு சப்பட வேண்டியது தானே.. சாதம் பரிமாரதவள் பேய் என்றால் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவன் என்னவாம்? ஈன்று புறந்தருதல் என் தலை கடனே சான்றோன் ஆகுதல் தந்தை கடனே என்று எப்போதோ படித்த நியாபகம். ஒரு உயிரை படைப்பது அற்புதமான ஒன்று. சொலுவதற்கு வார்த்தைகள் இல்லை.. பெருமையாகவே நினைகிறேன்.. ஆனால் அதை கடமை என்று சொல்ல  வேண்டாம்.. குழந்தை இல்லாத பெண்ணுக்கும் தாய்மை உணர்வு இருக்கிறது. அடுத்த வரி ஆண் ஆதிக்கத்தின் உச்சகட்டம். குழந்தையை சான்றோரு ஆக்குவது தந்தையின் கடமை மட்டும் தான் னா? தாயின் பங்களிப்பு அவசியம். பெட்டை கோழி கூவி பொழுது  விடியாது. அதாவது பெண் ஒருத்தி யாள் குடும்பம் ஓடாது. அப்பாவின் உழைப்பால் தான் குடும்பம் ஓடுகிறது  என்பது உண்மை ஆனால் நான் இன்று எனக்கு தேவையான எல்லா வற்றையும் வாங்கி கொள்வதற்கு அம்மாவின் சேமிப்பு என்பதும் உண்மை.
                                             நான் கேள்விப்பட்ட  சில வரிகள். பெண்கள் இரண்டு வகை ஒன்று அழகானவர்கள் இன்னொன்று அழகு என்று நம்பி கொண்டிருபவர்கள். எந்த கண்ணாடியும் பெண்களை அழகு இல்லை என்று சொன்னது இல்லை. கண்ணாடிக்கு தெரிந்தது கூட மனிதனுக்கு தெரியவில்லையே. .. உருபுகளை பார்த்து பெண்ணிடம் பேசுவதும் அதை மட்டுமே பெண் என்று நினைக்கும் கொடூரமான சிந்தனை தான் அருவருப்பை தரும் அசிங்கம்.. பெண்ணுக்கு உரிய உணர்வுகள் தான் பெண்ணை அழகுபடுத்து கிறது.. அவளின் ஆழமான கனவுகளும் கற்பனைகளும் வலிகளும் உணர்வுகளும் பெண்ணுக்கு என்றும் அழகு தான்..  நான் ஆண்களின் blog  சில படித்துள்ளேன் ..அதில் அவர்களின் படைப்புகளில் தனிமையில் என்ன செய்வார்கள் என்று குறிபிட்டு உள்ளார்கள்.. அவர்களின் தனிமை பாதி காமம் தான் நிரப்புகிறது. . இல்லை என்று சொல்லலாம் இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது..  தனிமையில் இலக்கியமும் ஓவியமும் படைக்கும் ஆண்களும் இருகிறார்கள்..  ஒரு பெண்ணின் தனிமை உலகத்தில் உள்ள அத்தனைஅழகுகளையும்  மறைத்து வைத்து உள்ளது.. இசை ஓவியம் இலக்கியம் சிற்பம் எல்லாம் ஒன்று கூடினால் எப்படி இருக்கும் அப்படி தான் அவளின் தனிமையும். பல நாட்கள் கண்ணீர் தான் நிரப்பும் இருந்தும் அது அழகு தான்.. தனிமையில் அவள் சிந்தும் கண்ணீரை பாதுகாத்தால் உலகு க்கு இன்னொரு கடல் கிடைக்கும் .ஒரு நொடியில் எத்தனை சிந்தனைகள் எத்தனை கனவுகள் எத்தனை பயணங்கள்.. எல்லாம் பெண்ணுக்கு தனிமையில் சாத்தியமே.. அவள் அவளை யே ரசிப்பதும் அவளையே கோவித்துகொள்வதும் பைத்தியகார தனம் இல்லை பெண்மைக்கு உரிய சில குணங்கள்.. அவள் சொல்ல விரும்பும் வார்த்தைகளும் கேட்க விரும்பும் வார்த்தைகளும் அவள் மிகவும் விரும்பிய நாட்களையும் மீண்டும் மீண்டும் நினைத்து எல்லா உணர்வுகளுக்கும் உயிர் கொடுக்கும் அற்புதமான ஒன்று பெண் தனிமையில் சாத்தியமே.. கிழிந்து போன கடிதங்கள் எல்லாம் அவளின் விரல்கள் பட்டு பட்டு உயிர் பெறுகிறது.. வெறுமையான சுவரும் அவளின் கிறுக்கல் களால் இலக்கியம் ஆகிறது.. பெண்கள் கண்ணாடி முன் நின்றாள் அவளுக்கு நேரம் மறந்து விடும் ஆண் கிளம்புவதற்கு 5 நிமிடம் போதுமாம்.. .ம்ம்ம் உங்களை நீங்களே ரசித்து பாருங்கள்.. கண்ணாடியும் காதல் கொள்ளும் என்று எதையாவது கற்பனை செய்து கொள்ளுங்கள் ஒன்றும் தவறு இல்லை..  வாழ்கையை அழகுபடுத்து வது அழகான பொய்கள்தான்.. அவளின் மௌனத்துக்கு 1000  பக்கங்கள் உரை எழுதலாம்.. நான் இன்றும் பெரிதாக ரசிப்பதும் வியப்பதும் பெண்ணின் உணர்வுகள்தான்.. It is wonderful to be a woman….. Dostoevosky எப்படி அத்தனை உணர்வுகளையும் ஒரே புத்தகத்தில் அடைத்து உள்ளாரோ அப்படி தான் பெண்களின் மனதும் .. ஆழம் அதிகம்.. Dostoevosky யை படித்து விட்டு மனநிலை எப்படி இருக்கும் என்று ஒவ்வரு வரியும் படித்தவர்களுக்கு தெரியும்.. கொஞ்சம் பைதியம் பிடித்தது போல் இருக்கும் .. அதே உணர்வு தான் அந்த ஆழத்தை தொடும் போதும் .இத்தனை உள்ளவர்கள் எப்படி அழகாக இல்லாமல் இருக்க முடியும்? இந்த உணர்வுகள் எதுவும் இல்லை என்றால் அழகு இல்லை என்று சொலுங்கள் ஒத்து கொள்கிறேன்.. உருபுகளை கடந்து உணர்வுகளை பாருங்கள் எல்லா பெண்களும் அழகாக தான் தெரிவார்கள்.
          ஆட்டோ வில் சில வரிகள் .. சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே.. அப்படியே ஆட்டோ வை ஒரு முறை ஆவது உதைத்து விட்டு போகணும் போல இருக்கும். இன்னொரு வரி ஆட்டோ வில் அடுப்பு ஊதும் பெண்ணுக்கு எதுக்கு கல்வி  என்று cigarette  ஊதும் ஆணுக்கு எதுக்கு கல்வி யோ அதே வெங்காயத்திற்கு தான் கிழே எழுத வேண்டும்.
                          பெண் ஒரு புதுமை தேவை இன்றி திறந்தால் தன்னை மட்டும் இன்றி உலகத்தையே அழித்து விடுவார்கள்.  நான் இலக்கியத்தில் மிகவும் ரசிக்கும் நபர் ஜெயந்தஸ்ரீ mam ரசிக்கும் எழுத்துகள் குட்டி ரேவதி லீனா மணிமேகலை. இவர்கள் எல்லாம் இன்று புதுமை படைத்தது கொண்டு இருகிறார்கள்.. அதனால் இனி மாற்றி கொள்வோம் புதுமை யை திறந்தால் அழிவு இல்லை அது படைப்பு..
கடைசியாக ஒன்று ஆவதும் பெண்ணாள் அழிவதும் பெண்ணாள் என்று சொல்வர்.. உண்மை ஆவதும் பெண்ணாள் கெட்டது அழிவதும் பெண்ணாள்...!

No comments:

Post a Comment