Friday, 23 November 2012

சட்டம் யாருக்காக???

நம்முடைய இந்திய கலாச்சாரம் மனித வாழ்க்கை, இறப்பு, வாழ்க்கைக்கு பின் என்று பல தத்துவங்கள் நமக்கு அளித்துள்ளது. அதில் ஆன்மிகம் என்ற ஒன்றை மட்டும் எடுத்து விட்டால் அவை எல்லாம் முழுமையான விஞ்ஞானம்.
                                          ஆனால் இந்த சமூகமும் கலாச்சாரமும் மனித வாழ்கையை பற்றி மனிதர்களை தரமான அடிமட்டத்தில் இருந்து சிந்திக்க விடுவதில்லை. இன்று வரை நிர்ணயிக்கப்பட்ட மரண தண்டனைகளே இதை உறுதி படுத்துகிறது.
                                        இந்திய தத்துவங்கள் தவிர்க்க முடியாமல் ஜாதி போன்ற வேறுபாடுகளை சுமந்து உள்ளது.
                                 ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்த துயரமான பஸ் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சலபதி மற்றும் விஜயவரதன் மற்றும் 37  வயது ராம்க்கு அளிக்கப்பட்ட மரணதண்டனையை ஒற்றி , மரணதண்டனைக்கு எதிரான குரல் உயர்ந்தது.
                                 இந்திரா காந்தி கொலை வழக்கில் கேஹர் சிங் க்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்படும் வழக்குகள் எந்த அளவு நியாயமாக விசாரணை செயப்பட்டது என்பது பல வழக்குகளில் கேள்வி குறியாகவே உள்ளது.
                                    டாக்டர் வி. சுரேஷ் பொது செயலார், PUCL ,TN PONDY அவர்கள் 370 வழக்குகளை(1948 -1998 ) தன் ஆய்வுக்கு எடுத்து கொண்டார்.
                    இதில் 60 வழக்குகளில் தூக்கு தண்டனை உறுதி செயப்பட்டது. இவை அனைத்திலும் மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்ணணி சூட்சுமாகவே உள்ளது. இவர்களில் 80% தாழ்த்தப்பட்ட ஜாதியினரை சார்ந்தவர்கள்.  கீழ்வெண்மணியின்  வழக்கில் தந்த தீர்ப்பை நாம் நினைவுபடுத்தி கொள்ள வேண்டும். குறிபிட்ட வகுப்பினர் குற்றம் புரிய மாட்டார்கள் என்று வழக்கை முடித்தனர்.
             மக்களுக்கு மரண தண்டனைக்கு பின் இருக்கும் அரசியலை தெரிய படுத்த வேண்டும்.  இதுக்கு பின் ஆழமாக வேருன்றி இருக்கும் தவறான ஒரு தரப்பான கொள்கைகளையும் புரிந்து கொள்ள   வேண்டும்  இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது மரண தண்டனைக்கு உட்பட்டவர்கள் அனைவரும் பழங்குடியினர், தலித், முஸ்லிம், சீக்கியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களே ஆவர்.
                             காந்தி கொலை வழக்கில் விநாயக கோட்சே க்கு மட்டுமே மரண தண்டனை வழங்க பட்டது. மற்ற நான்கு நபர்களுக்கும் ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது. அவர்கள் நாவரும் மராத்திய ஐயர்கள். இந்திரா காந்தி கொலை வழக்கில் கேஹர் சிங் சம்பவ இடத்தில இல்லை என்றாலும் மரண தண்டனை வழங்கப்பட்டது.
                            அனைவரும் சமம் என்று சொலும் சட்டம் ஏன் நியாயம் வழங்குவதில் பொருளாதாரத்தையும், ஜாதியையும், செல்வாக்கு உள்ளவர்களையும் கருதுவதை போல தோற்றம் சில வழக்குகளில் ஏற்படுகிறது?
                  எது குற்றம்? யார் குற்றவாளி? என்று எதன் அடிப்படையில் வரையறை செய்கின்றனர்? ஏன் சிலர் செய்த குற்றங்கள் மட்டும் பெரிதாக கருத படுகின்றன?
                       சட்டம் ஜாதி அரசியல் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டுமனிதனை ஒரு மனிதனாக ஏன் அரசு கருத மறுகிறது?
இந்த மூவரையும் தூக்கிலிட்டு சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொல்வதால் போன உயிர்கள் திரும்புமா?
     பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் எத்தனை உயிர்கள் போனது? போனது தலித் உயிர் என்று விட்டுவிட்டார் களா இல்லை கொலை செய்தது அதிகாரத்தில் இருக்கும் காவல் துறையினர் என்று நடவடிக்கை  எடுக்க வில்லையா?  அதிகாரத்தில் இருபவருகும் செல்வாக்கு உள்ளவர்களுக்கும் சட்டம் பொருந்தாதோ?
    சிறையில் அடைபதற்கு  காரணம் திரும்பி வரும் போது அவர் தவறை உணர்ந்து சமூகத்திற்கு ஆபத்தாக இல்லாம மாற வேண்டும் என்பது தான்.  குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை விதித்தால் இதன் பயன் பொய்யாக மாற கூடும் .
        குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு ஈடுபடுத்துகின்ற பலரை ஏனோதானோ என்று பல சமயங்களில் விட்டு விடுவது ஏன்?
            கோவையில் பிரபல தொழில் அதிபரின் மகள் முஸ்கின்( வயது 10 ) யை பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கு எதிர்ப்பு எல்லா சார்பு மக்களிடம் இருந்தும் ஏற்பட்டது. போலிசார், என்கவுன்ட்டர் என்ற பெயரில் அவனை சுட்டு கொன்றனர். மக்கள் அமைதி அடைந்தனர்.
 இரண்டு மாதம் பிறகு அதே கோவையை சார்ந்த கூலி வேலை செய்யும் ஒருவரின் மகள் (வயது 7 ) பாலியல் பலாத்காரம் செய்ய பட்டார். அந்த வழக்கு பெரிதளவில் பேசப்பட வில்லை. சட்டமும் கண்டு கொள்ளவில்லை.
                 சட்டம் யாருக்காக...... ?????

No comments:

Post a Comment