Friday, 23 November 2012

அழிக்கப்படும் நூலகங்களும் வார்த்தையை பின்தொடரும் என் நிழலும் .........


அண்ணா நூற்றாண்டு நூலகம் இடம் மாற்றப்படுவது தமிழ்சமூகத்தின் அறிவார்ந்த பகுதியினரின் நெஞ்சங்களைக் கனலச் செய்துவிட்டது. நான் அந்த நூலகத்தின் சிறப்புகளைப் பற்றி இங்கே பேசப்போவதில்லை. அவை ஏற்கனவே பலமுறை பேசப்பட்ட அழிக்க முடியாத உண்மைகள். ஆனால் இந்த செய்தியைக் கேட்டபோது புத்ததகங்கள் என் அந்தரங்க வாழ்க்கையின் எத்தகைய பாத்திரத்தை வகிக்கின்றன என்பதைத்தான் திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டேன். அவற்றை மீள நினைத்துக் கொள்வதன் வழியாகவே ஒரு மகத்தான நூலகம் சீர்குலைக்கப்படும் துயரத்தை என்னால் முழுமையாக உள்வாங்க முடியும்
12 வருடம் கான்வென்ட் டில் படித்ததால் சாப்பிடுவதற்கு முன்பு, படிப்பதற்கு முன்பு, தூங்குவதற்கு முன்பு என்று தனித்தனியாகப் பிராத்தனைகள்  சொல்லும் பழக்கம் சிறு வயதில் இருந்து உண்டு. நடுவில் பெரியாரும், கொஞ்சம் வாழ்க்கை அனுபவமும் கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கையைப் பறித்துக் கொண்டு போய் விட்டாலும் பிரார்த்தனைகளை முணுமுணுக்கும்  பழக்கம் மட்டும்  போகவில்லை. கையில் சாப்பாட்டை எடுக்கும் முன்பே our father greatest glory of god என்ற வரி மனதில் ஓடிவிடுகிறது. நாத்திகம் பேசினாலும் பிரார்த்தனைகள் மனதில் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. அதில் எந்த நம்பிக்கையும் இல்லை, அர்த்தமும் இல்லை. எல்லாம் பழக்கம் மட்டும்தான். எத்தனையோ முயற்சிகள். எதுவும் கை கூட வில்லை. இப்படி என்னை  மீறி எனக்குளே ஒன்று செயல்பட்டுக் கொண்டு இருப்பது என் குற்ற உணர்ச்சியை அதிகரித்தது .என் இயலாமையின் உச்சகட்டமாக இருந்தது. ஆனால் என்னை ஜார்ஜ் எலியட்டின் Mill on the Floss ல் வரும் மாகியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஏதோ ஒரு ஆறுதல் கிடைக்கும். சிறு வயதில் இருந்தே கலக குணம்  உடையவளாகி , பெண்மைக்கு உரிய எந்த இலக்கணமும் அவளிடம் இல்லை. அப்பா, குடும்பம், வீடு,தோட்டம்  என்று எல்லாம் இருந்த வரைக்கும் அவளின் சுயம் அவளை விட்டுப் போகவில்லை. எல்லாவற்றையும் இழந்து விட்டு முதன் முதலில் சமுகத்தின் சுட்டுஎரிக்கும் பார்வையில் விழும் போது தான் அவள் சுயத்தை இழக்கிறாள். தோற்றம் மாறினாலும்,  விருப்பத்தை எல்லாம் விட்டுக் கொடுத்து பொறுப்பாக மாறினாலும், அப்பாவின் விருப்பத்திற்கு ஏற்பவே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் , உள்ளுக்குள் அவள் விருப் பத்திற்கும் , சமுதாயத்தின் எதிர்பார்புக்கும் இடையில் போர் நடந்து கொண்டே இருந்தாலும் அவளின் கலக குணம்  அவளை விட்டுப் போகவில்லை. அவளை மீறி நடக்கிற ஒரு விஷயம் அது. சிறு வயதில் கற்றுக்கொண்டது. என்னிடம் இருப்பது குறை அல்ல. இயல்பு தான் என்று தெரிந்து கொள்ள ஜார்ஜ் எலியட் 704 பக்கங்கள் எனக்கு த் தேவைப்பட்டது.
அப்பாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் குடும்பத்துடன் ஊரை விட்டுப் போக வேண்டிய சூழ்நிலை. வியாபாரத்தில் அவரை யாரோ ஏமாற்றி விட்டார். ஆனால் பழி, கடன் எல்லாம் இவருக்கு. ஒரே இரவில் எல்லாம் தலைகீழாக  மாறியது. அடுத்து அடுத்து வரும் அவமானமும் கேள்விகளும் கற்பனை செய்தே பாதி உடைந்து போனார். பிரச்சினை தலைக்கு மேல் போனதால் உடனே ஊரை விட்டுப் போக வேண்டியதாயிற்று. தன்னை நம்பி இருப்பவர்களுக்கு தன்னால் முடிந்த வரை செய்து விட்டு அன்று இரவே அவரை ரயில் ஏற்றி விட்டு அடுத்த நாள் எதிர்பார்த்த பிரச்சினைகள், எதிர்பாராத பிரச்சினைகளை சமாளித்து விட்டு இரவு தாமதமாக வந்து இருக்கிறார். அவரை எனக்குத் தெரியும் கம்பீரமான மனிதர் ஒரே நாளில் உடைந்து போனதை நினைத்தால் கண்ணீர் முட்டிக் கொண்டு  வந்தது.. ஏன் ஊரை விட்டு ஓடணும்? அவர் தவறு செயவில்லை என்றால் இங்கே இருக்க வேண்டியது தானே என்று எல்லோரும் கேட்கும் கேள்வி  எனக்கும் தோன்றியது.அப்பா ஒன்றே ஒன்று தான் சொன்னார். 'நல்லா வாழ்ந்தவர்கள் என்றைக்கும் தலை குனியக் கூடாது' என்றார். அப்போது எனக்குப் புரியவில்லை. இப்போது அந்த மனிதரை நினைக்கும்போது எல்லாம் 'வேறு வேறு மனிதர்களில்' வரும்  ஜேக்கப் வாத்தியார் ஐயா தான் நியாபகம் வருவார். மிகவும்  கம்பீரமாக வாழ்ந்தவர்.  எப்போதும் அவரைச் சுற்றி மனிதர்கள் இருந்தனர், அவருக்கும் பாராட்டு விழா எல்லாம் நடத்தினர். ஆனால் அவருடைய சர்வீஸ் ரெஜிஸ்டரில்  ஏற்பட்ட தவறால் அவருக்குக்  கிடைக்க வேண்டிய பணம் வராமல் அவர் மனம் உடைகிறார். பார்ப்பவர்களிடம் எல்லாம் தன்னுடைய சர்வீஸ் ரெஜிஸ்டரைப் பற்றியே  பேசுகிறார். எல்லாரும் ஏளனம் செய்து அவரைத்  தவிர்க்கின்றனர். அவரைப் பாராட்டிப் பரிசு அளித்தவர்கள் எல்லாம் இப்போது அவருக்கு மரியாதை தருவது இல்லை. கடைசியாக மன நல காப்பகத்தில் அவரை வலுக் கட்டாயமாகச்  சேர்த்து விடுவர். தன் மனைவியைக் கூட மறந்து போய் அவரிடமே 'மேடம்,  என் பொண்ணுங்க கல்யாணம், எனக்கு ஒரு ஆபரேஷன். எல்லாம் நடந்தாகணும் மேடம். கொஞ்சம் யார்கிட்டயாச்சும் சொல்லி உதவி பண்ணுங்க மேடம்’ என்று அவர் சொல்வது மனதைப் பிளந்து விடும். சமூகத்தில் நன்றாக வாழ்ந்தவர்கள் சிறிய சரிவு ஏற்பட்டாலும் அதுவும் பாதி வாழ்கையைக் கடந்த வர்களுக்கு அது எத்தனை பாதிப்பு ஏற்படும்.பாராட்டு விழா, மரியாதை, தொழில் எல்லாம் இருக்கும் போது நம்முடன் இருக்கும் மனிதர்கள் இவற்றை எல்லாம் இழந்தால் இருக்க மாட்டார்கள், வளர்ச்சி எப்படி படிப்படியாக இருக்க வேண்டுமோ அப்படியே தான் வீழ்ச்சியும் இருக்க வேண்டும். திடீர் என்று எலாவற்றையும் இழக்கும் ஒருவர் மனம் எப்படி உடைந்து போகும் என்பது கற்று தந்தது ஜேக்கப் வாத்தியார்தான். அவர்கள் உடைந்து போவதற்குக் காரணம் அவர்கள் நம்பும் கடவுள். அவர் தரும்போது ஒவ்வொன்றாகத் தான் தருவார் ஆனால் எடுக்கும் போது எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வார். வரட்டுப் பிடிவாதத்தை விட எதார்த்தம் எத்தனை முக்கியம்! 'நல்லா வாழ்ந்தவர்கள் என்றைக்கும்  தலை குனியக் கூடாது' என்ற வரிகளின் வலிமையைப் புரிந்து கொள்ள பவா செல்லதுரையின் நான்கு பக்க எழுத்துகள் எனக்குத் தேவை.
பரீட்சையில் fail  ஆகும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதைக் கேட்டால் பாவமாக இருக்கும். அப்போது தெரியவில்லை 'பாவப்படுவது' தான் காரணம் என்று. Don 't Call it Suicide ல்  பெயர் இல்லாத ஹீரோதான் நினைவுக்கு வருகிறார். அவரால் தன் தம்பி தங்கையைப் போல் படிப்பிலும் மற்றவற்றிலும் சிறப்பாக இருக்க முடியவில்லை. இருப்பினும் அவருடைய அப்பா அவரை நன்றாகவே பார்த்துக் கொள்கிறார். இருப்பினும் ஏதோ ஒரு விரதத்தில் அவர் தற்கொலை செய்து கொள்கிறார். அப்பாவிற்கு ஒன்றும் புரியவில்லை. நாம் நன்றாகத் தானே பார்த்துக் கொண்டோம்.  பிறகு ஏன் மகன் இப்படி ஒரு முடிவு எடுத்தான் என்று குழம்புகிறார். இறந்து பல வருடம் ஆனாலும் அப்பாவால் மறக்க முடியவில்லை. மகனுக்குத்  தேவையானவை எல்லாம் செய்தேன், ஏன் என் மகன் அப்படி செய்தான் என்று நண்பரிடம் கேட்கிறார். அவர் மூலம் அப்பா தெரிந்து கொள்கிறார். மகனுக்கு அன்று  தேவைப்பட்டது 'டாலரன்ஸ் அல்ல, லவிங் அக்செப்டன்ஸ் என்று.. ! மனிதனை சகித்துக் கொள்வதற்கும் ஏற்று கொள்வதற்கும் எத்தனை வித்தியாசம்! இதைப் புரிந்து கொள்வதற்கு எனக்கு நிசிம் எசகியலின் 48 பக்கங்கள்  எனக்குத் தேவை பட்டது.
கொலை செய்யப்பட்டவன் அனுபவித்த கொடுமை ,வலியை விட கொலை செய்தவனின் மனது அதிகமாக கொடுமையும் வலியும் அனுபவிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள  ரஸ்கோல்நிகோவ்......!தேவைப்பட்டான். எத்தனை பெரிய பாரத்தையும் துயரத்தையும் இறக்கி வைக்கலாம்.  நாம் அனுபவிக்கும் வலியை உணர்ந்துகொள்ள சோனியா போல் ஒருத்தி இருந்தால். குற்றம் புரிந்தவர்களையும் நேசிக்க  தஸ்தாயெவ்ஸ்கி யின் 576 பக்கங்கள் உடைய குற்றமும் தண்டனையும் எனக்குத் தேவைப்பட்டது.
கடந்த கால ஏமாற்றங்கள் எதிர்கால எதிர்பார்ப்புகள் இவற்றை எல்லாம் நடுத்தரக் குடும்பத்தினர் சுமக்க முடியாது , அன்றைய தின வாழ்க்கையைப் பற்றி மட்டுமே  சிந்திக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள புதுமைப்பித்தனின் 'ஒரு நாள் கழிந்தது' தேவைப் பட்டது. தன்னை மீறி நடக்கும் ஒரு விபத்துக்கு   ஒரு போதும் பெண் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ள ஜெயகாந்தனின் அக்னிப் பிரவேசம் தேவை ப்பட்டது. திருநங்கைகள் நம்மை அதட்டிக் காசு வாங்குவதற்கும் , விபசாரத்துக்கு போவதற்கு நாம் தான் காரணம். சமூகம்தான் அவர்களை அதில் தள்ளி விட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு 'பால் சுயம்பு வின் ‘திருநங்கை அதிர்ச்சியும் அதிசயமும்'  தேவை ப்பட்டன  . வீடு, உறவுகள். வாழ்ந்த நாடு எல்லாவற்றையும் வேறு வழி இல்லாமல் விட்டு போனவர்களின் வலியை புரிந்து கொள்ள தமிழ் நதியின் எழுத்துகள் தேவை பட்டது. காதல் தரும் அழகிய உணர்வுகளை அனுபவிக்க தாகூரின்ன் சாருலதா தேவைப்பட்டது. சிறு வயதில் ஏற்படும் காதல், ஊடல், இவற்றை அனுபவிக்க மார்க் ட்வைனின்  தாம் சாயர் தேவைப் பட்டது. எத்தனை திமிராகப் பேசினாலும், ஆணைப் போல் சேலையை மடித்துக் கொண்டு நடந்தாலும் பெண்ணும் அவள் உணர்வுகளும் அழக தான் என்பதைத் தெரிந்து கொள்ள  ஜமீலா தேவைப்பட்டாள். எத்தனை கொடூரமான மனிதனிடமும் ஒரு ஓரத்தில் மனிதம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள 'ஒரு மனிதன் பிறந்தான்' என்ற கதை எனக்குத் தேவைப்பட்டது. காதலைப் போன்று அழகான உணர்வு எதுவும் இல்லை என்பதற்கு ரோமியோ ஜூலியட், ஆர்பியஸ் ஆர்பியஸ்   வெண்ணிற இரவுகள், ப்ரைடு அண்ட் ப்ரெஜுடிஸ், ஜேன் எயர், வுதேரிங் ஹைட்ஸ் தேவைப் பட்டது. தொலைத்த குழந்தைப் பருவத்தை மீண்டும் மீண்டும் அனுபவிப்பதற்கு லிட்டில் வுமன் தேவைப்பட்டது. வட்டார மொழியின் அழகை ரசிக்க நாஞ்சில் நாடன், உண்மையான புரட்சியைப் புரிந்து கொள்ள  சேகுவேரா வின் வாழ்க்கை காவியமும், உண்மையான வறுமையைத்  தெரிந்து கொள்ள புதுமைப் பித்தனின் வாழ்க்கை புத்தகமும் எனக்குத் தேவை ப்பட்டது. என்னை முழுமையாக உணரவைக்க, என்னை மகிழ்விக்க, என்னை மீண்டும் மீண்டும் இந்த உலகத்தில் பிறப்பு எடுக்க, புது ஒரு உலகத்திற்குச் செல்ல, என்னை மறப்பதற்கு, என்னுடன் உரையாடுவதற்கு , எல்லாவற்றுக்கும்  புத்தகங்களைத் தவிர எனக்கு வேறு துணையில்லை.

                                                                                                                     

ஆடு ஜீவிதம்...!

உள்மனதில் பதிந்து உள்ள அத்தனை துயரங்களும் மேலோங்கி வந்தது உண்டு, எனக்கு மட்டுமே சொந்தம் என்று நம்பிக்கொண்டு இருந்த ரகசியங்கள் எல்லாம் வெட்ட வெளிச்சதில் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தது உண்டு, இத்தனை நாட்களாக இப்படி ஒருவருடன்  நான் வாழ்ந்து வந்து இருகிறேன் என்று ஆச்சிரிய பட்டதுண்டு, உலகம் இத்தனை அழகானதா என்று வியந்து வியந்து ரசித்தது உண்டு, வாழ்கையின் கடைசி நிமிடம் போல் உருகி உருகி காதலித்தது உண்டு, என்றுமே நேராத எப்போதோ  நேர்ந்த இழப்புகளை நினைத்து விதியை நொந்து கொண்டது உண்டு, காரணம் இல்லாமல் ஏதோ ஒன்றை மனதுக்குள்  கற்பனை செய்து கொண்டு சிரித்தது உண்டு, கண்ணீர் வற்றும் வரை அழுதது உண்டு, எல்லாவற்றையும்  வெறுத்தது உண்டு, எல்லாவற்றையும்  நேசித்தது உண்டு, பெயர் சூட்ட முடியாத உணர்வுகள் பிறந்தது உண்டு, உலகத்தின் அத்தனை சந்தோஷத்தையும் ஒரே நொடியில் கையில் தூக்கியது உண்டு, வெறுமை மட்டுமே நிரம்பியது உண்டு இப்படி பல அனுபவங்களை தந்து உள்ளது புத்தகங்கள். புத்தகங்கள் மூலம் பல முறை ஜனனம் சந்தித்து இருகிறேன் சில முறை மரணம். ஆனால் இதுவரை உணராத ஒரு அனுபவம், சற்றும் எதிர்பாரா ஒரு மாற்றம்- என் துயரங்கள் எல்லாம் மறைந்து போனது, நான் என்றைக்கும்  அலட்சியமும், வெறுப்பும் காட்டும் கடவுள் மீது ஒரு ஈர்ப்பு வந்து உள்ளது. என் மனம் முழுவதும் நிரம்பி உள்ளது நஜீப்...! ஒரு மனிதன் இத்தனை துயரத்தை சந்திக்க முடியுமா? இத்தனை சந்தித்தும் வாழ வேண்டும் வாழ்ந்து கொண்டுஇருக்கும் நஜீப்  க்கு எத்தனை நம்பிக்கை! எத்தனை பெரிய  கஷ்டங்களும் தீவரமான   வேதனைகளும் கால ஓட்டத்தில் வாழ்க்கையின் அம்சம் ஆகவே மாறிபோகும் என்பது நஜீப்  யின் வாழ்கை அனுபவம். இந்த புரிதல் யாருக்கும் எளிதில் வந்து விடாது. அவரின் இழப்புகள் எல்லாம் ஒன்றுகூடி அவருக்கு கற்று தந்தது இது. நஜீப்  ஏன் வாழ்வதற்கு  ஜெயிலை தேர்ந்து எடுக்கிறார் பசி உடலை வாட்டி எடுத்தாலும் ஏன் ஆட்டு கறியை மட்டும் தொடுவது இல்லை என்ற கேள்வி காண பதில் அவர் இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்கை . 200 பக்கங்களில் பென்யாமின் நஜீப் யின் வாழ்க்கையை சித்திரமாக தந்து உள்ளார். வாழ்கையை பற்றிய அப்பட்டமான உணர்ச்சி குவியல் தான் புத்தகம் முழுவதும் நிரம்பி உள்ளது. மனதில் பல கனவுகளும் எதிர்பார்புகளும் அழகான கற்பனைகளும் சுமந்து கொண்டு கேரளாவில் இருந்து gulf க்கு செலும் நஜீப் யின் வாழ்க்கை பாதை பலர் கடந்து சென்றதாக இருக்க கூடும் ஆனால் எத்தனை நாள் பயணம் செய்தார்கள், எத்தனை பேர் நம்பிக்கையை மட்டும் வைத்து வாழ்ந்தார்கள் எத்தனை பேர் மீண்டும்  வந்தார்கள் என்பது கேள்வி குறிதான். நம்முடைய கனவுகள் பெரும்பாலும் கற்பனைகள் மட்டுமே நிரம்பி உள்ளது நமக்கு தெரியாத ஒரு விஷயத்தையோ இல்ல  பார்காத ஒரு இடத்தையோ தான் அதிகமாக நினைக்கிறோம். நம்முடைய  ஆசைகள், கனவுகள் எல்லாம் ஒரு கற்பனை உலகத்தில் இருந்து தான் உருவாகிறது. சொர்க்கம் போல் உள்ளது, சொர்க்கம் போன்ற அனுபவம் என்று நாம் அடிக்கடி சொலுவது எல்லாம் நாம் யாரும் சொர்கத்தை நேரில் பார்காத காரணத்தில் தான்.. அருகில் இருப்பதை அலட்சிய  படுத்துவதும் தொலைவில் இருபதின் மீது ஈர்ப்பு வருவது மனித இயல்பு தான். நமக்கு தெரியாத விஷயங்களை பற்றியும் எங்கோ நடக்கும்  விஷயங்களை  குறித்தும் விளையாட்டா கூட கனவு கண்டு விடாதிர்கள், என்றோ ஒரு நாள் அது உங்கள் வாழ்வின் யதார்த்தமாகி விட்டால், அப்போது  அதை நேருக்கு நேராக பார்பதற்கு கூட இயலாத விதத்தில் அது அத்தனை  பயங்கரமாக இருக்க கூடும் என்பது தான் நஜீப் நமக்கு தரும் எச்சரிக்கை. நிஜ வாழ்க்கைக்கும் கனவுக்கும் உள்ள வித்தியாசம், கனவு வை அடைந்து  விட்டோம் என்று நம்பும்  தருணத்தில் கனவு  அந்நியமாகி போவது போல் வேதனை எதுவும் இல்லை. சுய வாழ்கையை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தமக்குள்ளே  முடங்கிபோகும் பரிதாப   ஜீவனாய் வருகிறார் ஹமீது. பாதி வழி யிலே முடிந்து போகும் வாழ்கை தான் எத்தனை!
உலகதில் எந்த துயரத்தையும் தாங்கி கொள்ளலாம் அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒருவர் இருந்தால் ஆனால் சில நேரங்களில் நம்மை நன்கு புரிந்தவர்களும் நம்மை நேசிகிரவர்களுக்கு கூட நம் நிலைமை சொல்ல தயங்குவது உண்டு நம்முடைய சந்தோஷமே அவர்களுடைய சந்தோஷம் உலகம் என்று இருபவர்களுக்கு நம்முடைய துயரத்தை மறைத்து நம் நேசிபவரை சந்தோஷ படுத்துவது ஒரு மேலோட்டமான சுகம் ஆனால் மனதை கிழிக்கும் துயரம். நஜீப் அவருடைய சைனு க்கு அனுப்ப முடியாத எழுதிய கடிதங்கள் கூட அப்படி தான். கடிதம் முழுவதும் பொய், எழுதி முடித்து விடு தேம்பி தேம்பி அழுவார் அந்த அழுகை மட்டுமே உண்மை யாரும் படித்து பார்காத உண்மை.
 பாலைவனத்தின் வாழ்க்கை முறைகளும் ஆட்டு உடைய ஆண்மையை வெட்டும் கொடூரமும் பார்த்து அதிர்ச்சி அடைந்தது ஒரு பக்கம். நான் மிகவும் வியந்தது சாப்பிட  ஆகாரமில்லை, தண்ணீரில்லை, துணி இல்லை, படுக்க ஓரிடம் இல்லை, கூலி இல்லை, வாழ்கை இல்லை, கனவுகள் இல்லை, ஆசை இல்லை உயிர் மட்டுமே எஞ்சி இருக்கும் நிலையில் கூட அல்லா மீது இருக்கும் நம்பிக்கை மட்டும் குறைய வில்லை. கடவுள் இருக்கிறார் என்று நம்பிய காலத்தில் கூட தடுக்கி விழுந்தால் கடவுள் மீது கோவபடுவது உண்டு. அல்லா மீது  கோவபடுவதற்கு எல்லா நாயமான காரணங்கள் இருந்தும் அவர் அல்லா மீது நம்பிக்கை வைத்து உள்ளார்.  எல்லாவற்றுக்கும் கடவுள் கடவுள் என்று கூப்பிடுவர் மீது கோவமும் சில சமயம் எரிச்சலும் வரும் ஆனால் நஜீப் ஒவ்வொரு முறையும் அல்லா அல்லா என்று அழைக்கும் போது இல்லாத அல்லா மீது எனக்கு ஒருவிதமான ஈர்ப்பு தான் ஏற்படுகிறது! அல்லா  இத்தனைநேசத்துக்கு உரியவரா! வியப்புக்கு அவரே விடையும் தருகிறார் 'பசுஞ் சோலையில்  மெய் மறந்து வாழும் பாக்கியம் பெற்றவர்களே.. உங்களை பொறுத்தவரை பிராத்தனைகள் வெறும் பிரசங்கள் ஆகவும்  சடங்குகள் ஆகவும் இருக்கலாம் ஆனால் எனக்கோ அது தான் வாழ்கையின் கடைசி அச்சாணி '
            அரைசாண் வயிற்றுக்காக  வீட்டையும் நாட்டையும் பிரிந்து மணல் காட்டுக்கு போய் அகப்பட்டு கொண்ட நஜிப் ஸ்பரிசம் , வாசனை, அன்பு, ஆசை என்ற மனித நிலை முற்றிலுமாக பரி கொடுத்து விட்டு ஆடுகிடையில் ஒரு ஆடுஆகவே  மாறி போன அவலம் தான் நஜீப்.
              அந்த வாழ்கையை  வெறுத்த போதிலும் ஒவ்வொரு நொடியும் தப்பிக்க நினைத்த போதிலும் அதற்கான சந்தர்பம் வரும் போது ஆடுகளை விட்டு பிரிய மனம் இல்லாமல் ஏதோ ஒன்று தடுப்பது அழகிய உணர்ச்சி குவியல்.  சந்தர்பங்களுக்காக காத்து இருப்பது அந்த சந்தர்பம் வந்து கதவை தடும போது பயன்படுத்த விருப்பமின்றி விரகத்தில் மூழ்குவது போன்ற வாழ்க்கையின்  முரண்பாடுகளை நம் மனதை விட்டு போகாத படி பதிவு செய்து உள்ளார் பென்யாமின்.
                                              மனிதனின் இயலாமைகள், விலங்குகளின் புரிதல்,எதிர்பாரா நேரத்தில் வரும் உதவி, ஒரு நாளில் வாழ்கை மாறி போகும் விசித்திரம், வாழ்க்கையின் முரண்பாடுகள் இவற்றை எல்லாம் நஜீப்  மூணு வருஷம், நாலு மாசம், ஒன்பது நாட்களில் கற்று கொண்டார்  நாம் வெறும் 240 பக்கங்களை படித்து தெரிந்து கொண்டோம் இதுவும் வாழ்க்கையின் ஒரு விசித்ரம் தான்.. நஜீப்  வேர் ஒருவர் விசாவில் தான் gulf  யில் வந்து இறங்கினார் அது constuction  கம்பெனி யில் வேலை செய்வதற்கான விசா .ஆனால் பாலைவனத்தில் வசிக்கும் ஒரு அர்பாபு ஆடு மேய்பதற்காக அவரை கூட்டிசென்று விட்டார்.  வேறு ஒருவர் விதியில் தான் தல்லபட்டு இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதுற்கு அவர் அவரின் இயல்பை கூட இழக்க வேண்டிய தாயிற்று.   புத்தகத்தை மூடிய பிறகும் நஜீப் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று கொண்டே இருக்கிறார். என் துயரங்கள் முழுவதும் அழித்துவிட்டு அவருடைய வாழ்க்கை சுவடுகள் மட்டுமே நிரம்பி உள்ளது
                            ஆடு ஜீவிதம்- வித்தியசமான வாசக அனுபவம் மட்டும் அல்ல வாழ்கை பாடம் கூட- மனித உணர்சிகளின் குவியல். உயிர்மை பதிப்பகத்தின்  ஆடு ஜீவிதம் (தமிழ் யில் -எஸ்.ராமன்) தமிழில் சமீபத்தில் வெளி வந்த ஒரு முக்கிய நாவல்.
                                                                                                                                              (உயிரோசை)

தமிழ் நாட்டில் ஆங்கில இலக்கியத்தின் நிலை..!

ஆங்கில இலக்கியம் பற்றியும் ஆங்கில இலக்கியம் படிபவர்கள் மீதும் அழிக்கமுடியாத    சில பொதுவான கருத்துகள் உண்டு.. ஆங்கில இலக்கியம் படிபவர்கள் தமிழ் தாய் மொழி யாக கொண்டவர்கள் அல்ல, அவர்கள் மேல்நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றுவர்கள் என்று.. ஆங்கில இலக்கியம் படிபவர்கள் ஆங்கிலத்தில் என வார்த்தை கேட்டாலும் google  போல அர்த்தத்தை தர வேண்டும் என்ற எதிபார்ப்பும் உண்டு.. நான் படிப்பது ஆங்கில இலக்கியம்.. ஆங்கில மொழி அல்ல என்று சொன்னால் ஏதோ நான் உளர்வதுபோல்  பார்பர்.. எப்படி உளவியல், சமூகவியல், பொருளாதாரம் எல்லாம் ஆங்கிலம் வழியாக படிக்கிறார்களோ அதே மாதிரி தான் நாங்கள் இலக்கியத்தை ஆங்கில வழியில் படிக்கிறோம்.. மற்ற துறை விட அதிகமான் சொற்கள் எங்களுக்கு அறிமுகம் ஆகும் என்பது உண்மை அதற்காக ஏதோ pulp  fiction யில் வரும் வார்த்தை சொல்லி அதற்கு அர்த்தம்  தெரியவில்லை என்ற உடன் ஆங்கிலம் இலக்கியம் படிக்கும் உங்களுக்கு  தெரியவில்லையா என்று கேட்கும் புத்திசாலிகளை  என்ன செய்வது? இதை கூட சகித்து கொள்ளலாம் ஆங்கில இலக்கியம் ஆ நீங்கள் chetan  Bhagat நாவல்கள் எல்லாம் படித்து இருகிறீர்களா என்று கேட்பர் சிலர். அதை கேட்கும் போது எல்லாம் இதயம் வெடிக்காத குறை தான். pulp  fiction யை எல்லாம் இலக்கியம் என்று முத்திரை குத்துவது எத்தனை வேதனை குரிய விஷயம். எது இலக்கியம் எது வெறும் எழுத்துகளின் கோர்வை என்று புரிந்து கொள்வது பெரிய விஷயம் அல்ல. ரயில் பயணத்தின் போது அவசரத்தில் ஏதோ சில புத்தகத்தை வாங்கி கொண்டு போவது உண்டு. படித்துகொண்டே பயணம் செய்வது போல் ஒரு அழகிய நிமிடங்கள் எதுவும் இல்லை. இறங்கும் இடம் வந்ததும் அந்த புத்தகத்தில் படித்து ஏதோ ஒன்று நம் மனதில் சலனத்தை ஏற்படுத்தினால், யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றினாலோ, யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத சில உணர்வுகளுக்கு உயிர் தந்தால், வாழ்கையில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தை மீண்டும் நினைவு படுத்தி கண்ணீரை வர வைத்தால் இல்லை ஒரு தனி மனிதரின்  உணர்வுகளையும் உணர்சிகளையும் பதிவு செய்தால், ஒரு சமூகத்தின் குரல் ஆக அது ஒலித்தால், நம்முள் ஒருவிதமான மாற்றத்தை கொண்டு வந்தால்  அது நிச்சயம் இலக்கியம் தான்.. அது ஒரு வரியாக கூட இருக்கலாம்..! Robert  Frost  யின் Miles to go before  I sleep   ,வள்ளலாரின் வாடிய பயிரை கண்ட போது எல்லாம் வாடினேன் ,  கீட்ஸ் யின் Beauty is truth, truth beautyஎன்ற ஒற்றை வரிகளுக்கு  பின் இருக்கும் இலக்கியமும் தத்துவமும் இன்றும் ரசிக்க கூடியவை. எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் ரயிலில் யே வைத்துவிட்டும் வரும் புத்தங்கள் இலக்கியம் ஆகாது. நம்முடைய  ரகசியங்கள் போல் பாதுகாத்து வைத்து இருப்பது தான் இலக்கிய புத்தகங்கள். எனக்கு இலக்கியத்தின் சுவையை ஊட்டிய ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் Mam அவர்கள் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் போது அவர் சொன்னார் 'Im an Indian teacher not an English teacher ' . கொஞ்சம் சிந்தித்தால் இதனின் உள் இருக்கும் அர்த்தம் புரியும். ஆங்கில இலக்கியம் என்றாலே நாம் மேல் நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்கிறோம். இளங்கலை ஆங்கில இலக்கியத்தில் எல்லா பல்கலைகலகத்துகும் பொதுவான  பாடம் 'Social History of England '. நம்முடைய வரலாறே தெரியாத பட்சத்தில் என்ன தேவைக்கு இங்கிலாந்த் யின் வரலாறை அறிமுக படுத்துகிறார்கள்? இலக்கியம் படிக்கும் போது அந்த எழுத்தாளர்  வாழ்ந்த காலம் அவர் இருந்த சமூகம் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். ஆங்கில இலக்கியம் syllabus யில் அதிகமாக படிப்பது அவர்களின் படைப்புகளே அதனால் அவர்களின் வரலாறு தெரிந்து இருப்பது அவசியமே. பின் வந்த வருடங்களில் American Literature , Canadian Literature , Common  Wealth Literature  என்ற பாடங்கள் அறிமுக செயப்பட்டது. சமீப வருடத்தில் அறிமுகம் செய்தது தான் Indian Writing in  English . இதில் ர.கே .நாராயணன்  ,வி எஸ் .நைபால், தாகூர் அவர்களின் படைப்புகள் அடங்கும். கனடா, பிரெஞ்சு போன்ற நாடுகளின் இலக்கியத்தின் ஆங்கில மொழி பெயர்ப்புகள் பாட திட்டத்தில் உள்ளது ஆனால் தமிழ் இலக்கியதின் மொழி பெயர்ப்பு எதுவும் பாடத்திட்டத்தில் இல்லை. சில பல்கலைகழகத்தில் மட்டும் Dalit Studies என்ற பாடம் உள்ளது. அதில் பாமாவின் சிறுகதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பு  உண்டு. தமிழ் எழுதார்களின் படைப்புக்களை தெரிந்து கொள்வதற்கு இது ஒரு சிறிய வழி யே. orientalism (மேற்கு நாட்டினர் நம்முடைய  கலாச்சாரத்தை பற்றி எழுதுவது) பற்றி நிறைய கட்டுரைகள் உண்டு. நம்  நாட்டில் இருப்பவர் நம் ஊரு மாரியம்மன் கோவில் பற்றியும் அதில் நடக்கும் சடங்குகள் பற்றியும் ஆராய்ச்சி பண்ண வேண்டும் என்றால் கூட அவர்கள்  நாம் கலச்சாரத்தை பற்றி எழுதியதை யே அடிப்படையாக  கொண்டு ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டிய நிலைமை. தமிழ் யில் ஆராய்ச்சிகள் குறைவோ அல்லது மொழி பெயர்ப்பு குறைவோ என்று எல்லாம் சொல்லி விட முடியாது. எல்லாம் உண்டு ஆனால் நாம் பாட திட்டத்தில் இல்லை. அதை கொண்டு வதற்கான முயற்சிகளும் இல்லை. ஆங்கில இலக்கியம் என்றால் மேற்கில் இருந்து இறக்குமதி செய்ததை மட்டும் தான் படிக்கச் வேண்டுமா? கர்நாடக வில் படிக்கும் எந்த ஒரு ஆங்கில இலக்கியம் மாணவர்களுக்கும் Girish Karnad வை பற்றி தெரியாமல் இருபதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் நாம் ஊரில் இருக்கும் மாணவர்களுக்கோ புதுமை பித்தன் பெயரே புதுமையாக தான் உள்ளது. எதை நோக்கி நாம் செல்கிறோம்? யாரை மனதில் வைத்து syllabus யை தயார் செய்கிறார்கள்?  பிரிட்டிஷ் காரர்கள் கூட படிக்காத இலக்கியத்தை நாம் இங்கு தூக்கி பிடித்து கொண்டு இருக்கிறோம். அவர்களுக்கு நம்மால் நம்முடைய திருக்குறளை கூட சொல்லி தர முடியாது. மற்ற நாடு இலக்கியத்தை படிப்பது  எந்த தவறும் இல்லை..  உலகின் மிக சிறந்த படைப்புக்களை தந்த ரஷ்ய இலக்கியம் பாட திட்டத்தில் இல்லை. மார்க்சியம் படித்து தவறி போய்  ஞானம் பிறந்து விட்டால்? அதனால் தான் ஒதுக்கி வைத்து உள்ளார்கள் போல். இதை எல்லாம் விட கொடுமை soft skills  என்ற course  யை பாட திட்டதில்  இணைத்து உள்ளது தான். இது பெரும் பாலும் ஆங்கில இலக்கியம் படிபவர்களுக்கு மட்டுமே  ஒன்றை போல் தான் காட்சி அளித்தது. இப்போது தான் எல்லா துறை மாணவர்களுக்கும் அறிமுகம் செயப்பட்டுள்ளது. இதில் MNC  யில் வேலை கிடைபதற்காக மாணவர்களை தயார் செய்கின்றனர். மற்றவரிடம் எப்படி கை குலுக்க வேண்டும், எப்படி நாற்காலியில் உட்கார வேண்டும், எப்படி ஸ்பூனையும் fork யையும் கொண்டு  சாப்பிட வேண்டும் என்று பயிற்சி தருகின்றனர். என்ன தேவைக்கு இது எல்லாம் நாம் கற்று கொள்ள வேண்டும்? அவர்கள் குளூர் பகுதில் வாழ்பவர்கள். கையில் gloves  போட  வேண்டிய கட்டாயம் குடிப்பதை தவிர வேற எதற்கும் தண்ணீரை பயன் படுத்த முடியாதவர்கள். நமக்கு என்ன கேடு? கை எப்படி குலுக்க வேண்டும் என்பதற்கு ஒரு பாடமா? வணக்கம் என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தானே. எப்படி நாக்கை சுழற்றினாலும் அவர்களை போல் நாம் ஆங்கிலம் பேச முடியாது அதற்கான அவசியமும் இல்லை. மற்றவர்களுக்கு நாம் கருத்தை பகிர்ந்து கொள்வதற்கே  பேசுகிறோம் யாருக்கும் புரியாத விதத்தில் பேசி என பயன்? ஒருவரின் மன நிலை எப்படி உள்ளது என்பதை அறியவும் எப்படி நாம் மற்றவிடம் பேச வேண்டும், பழக வேண்டும் என்று சொல்லி தருகிறார்கள் .இலக்கியம் படித்து வராத புரிதலும் தெளிவும் இவர்கள் சொல்வதில் வந்து விட போகிறதா? ஏன் இந்த அயல் நாட்டு மோகம் இப்படி தலை விரித்து ஆடுகிறது? வேற்று மொழிகளை படிபதற்கான  தேவைகள் நம்மிடம் உண்டு. தமிழ் மற்றும் அறிந்து இருபவர்களுக்கு ஆன வேலை வாய்புகள் தமிழ் நாட்டிலே கம்மி  தான். மொழி பற்று, மொழி அரசியல் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து பார்த்தால் மற்ற மொழிகளை கற்று கொள்ள  வேண்டியதின் அவசியம் புரியும். அவசியம் என்று சொல்வதை விட அது ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும். மொழிபெயர்ப்பு செய்த புத்தகத்தை படிக்கும்போதே இப்படி சிலிர்த்து போகிறேனே ரஷ்ய மொழியை நேரடியாக படித்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு ஏக்கம் இன்னும் உண்டு. ஆனால்  மற்ற நாட்டின் கலாச்சாரதை  வலு கட்டாயமாக நாம் பின்பற்றவேண்டும் என்பது  சமுதாயத்தின் மிக பெரிய அவலம். ‘ இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று’ என்பதை விட ஒரு soft skills உண்டா? தமிழ் இலக்கியங்கள் பாட திட்டத்தில் இல்லையே என்று வருதபடுவதற்கு தமிழ் இலக்கியம் எடுத்து இருக்கலாமே என்று கேட்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் தமிழ் இலக்கிய மொழி பெயர்ப்பு மட்டும் தான் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. கனடா,common  wealth  , ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளின் இலக்கியத்தை தேடி பிடித்து நம் நாட்டு மக்களுக்கு தருபவர்கள் ஏன் நம் நாட்டு இலக்கியத்தை கண்டு கொள்ள மறுக்கின்றனர்? எல்லா நாட்டு இலக்கியத்தையும் கரைத்து குடித்து வெளி நாட்டிற்கு சென்று நம் சொந்த நாடுடைய இலக்கியம், சமூகம், அரசியல் வரலாறு தெரியாமல் இருப்பது எத்தனை  கொடுமை. மார்க்சிய கொள்களை , அதை சார்ந்து  எந்த ஆராய்ச்சி பண்ண வேண்டும் என்றாலும் ரஷ்ய இலக்கியங்களை தேடி செல்கின்றனர். இயற்கை சார்ந்த அல்லது இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆராய்ச்சி செய்ய அமெரிக்க இலக்கியங்கள் தேடி செல்கின்றனர்( ஜான் ஸ்டீன்பெக் யின் படைப்புகள் எல்லாம் இதை சார்ந்தது தான்) பெண்ணியம் பற்றிய ஆராய்ச்சி செய்வதற்கும் நாம் மேல் நாட்டு இலக்கியத்தை நாடுவதற்கு காரணம் நம்முடைய இலக்கியத்தில் இதைப்பற்றி எல்லாம் குறிப்பிடவில்லை என்று அர்த்தம் இல்லை நம்முடைய இலக்கியத்தை தெரிந்து கொளவ்தற்கான வாய்புகள் கம்மி அதை அறிமுகம் செய்து வைப்பதற்கும் கல்வியாளர்கள் தயாராக இல்லை பாவம் அவர்களை சொல்லி தப்பு இல்லை. தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்று மேடை பேச்சுகளில் சொல்வதற்கே நேரம் இல்லை இதையெல்லாம் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?.  பல்கலைகழகம் , கல்லூரியில்  ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணர்வர்கள் எந்த தலைப்பு ஆக இருந்தாலும் குறைந்தது 50 கும் உட்பட்ட மேல் நாட்டு படைப்புக்களை மேற்கோளாக காட்டுகின்றனர் ஆனால் நம் நாட்டு படைப்புக்களை பற்றிய எந்த தகவல்களும் இல்லை. எப்படி புரட்டி பார்த்தாலும் தெரியாது.பெண்ணியம் என்றால்  உடனே Lucie Irigaray ,Virginia  Woolf , Helene Cioux தான் நினைவுக்கு வருகின்றனர். 'அகலிகை மீண்டும் கல்லானால்' என்று புதுமைப்பித்தனின் சாப விமோஷனத்தை விட என்ன பெண்ணியம் பேசிவிட முடியும்? சங்க இலக்கியங்களில் இல்லாத பொது உடைமையும். பகிர்ந்து கொள்ளுதலும், அழகியலும், காதலும் எங்கு உள்ளது. இயற்கை என்றவுடன் ஜான் ஸ்டீன்பெக், ஹெமிங்க்வே நம் நினைவுக்கு வருவது போல் குறிஞ்சி.,முல்லை,மருதம்,நெய்தல், பாலை பாடல்கள் எல்லாம் வருவது இல்லை. கடவுள் நம்பிக்கை சார்ந்த பாடல்கள் என்றால் மில்டன், Christina Rossetti பாடல்களை மேற்கோளாக காட்டுகிறோம் நம்முடைய பக்தி இலக்கியம் எனவாயிற்று? திருவாசகம் மறந்து போனதா? ரஷ்ய மற்றும் ஜெர்மனிய தத்துவங்களை தூக்கி பிடிதிற்கும் அளவுக்கு நம்முடைய நாலடியார், இனியவை நாற்பது, இன்னா நாற்பது, பழமொழி நானூறு இவற்றை எல்லாம் நாம் போற்றுவது இல்லை. இப்போது வளர்ந்து  வரும் அல்ல பிரபலம் அடைந்து வரும் குழந்தைகள் இலக்கியம் பற்றிய ஆராய்ச்சிக்கு Arthur Conan Doyle ,Daniel Defoe , Anne Frank யை முக்கியமான படைப்பாக  கருதுவது போல் ஆத்திசூடி , மூதுரை, நல்வழி எல்லாம் நம் கருதுவது இல்லை. ஹென்றி 8th , ஹென்றி 4 , ரிச்சர்ட் 3 என்று யாருனே தெரியத்வார்களின் வரலாறை எல்லாம் விழுந்து விழுந்து படிக்கச் வேண்டிய கட்டாயம் உண்டு சரி அவர்களின் மொழி யை நாம் படிக்கிறோம்  அதற்காக அவர்களுடைய வரலாறை பாட  திட்டதில் இணைத்து உள்ளனர்  அப்போ நம் நாட்டில் வாழ்வதற்காக ஜெயம்கொண்டார் யின் கலிங்கத்துபரணி யின் மொழிபெயர்ப்பை ஏன் இணைக்க வில்லை? இன்று ஆங்கில இலக்கியம் படிபவர்கள் அனைவர்க்கும் ballad , epic , ode , elegy , sonnett , எல்லாம் எப்படி வந்தது, அதனுடைய இலக்கணம் தெரியும், ஆனால்  ஆங்கில இலக்கியம் படிக்கும் தமிழர்களுக்கு ஆசிரியப்பா, வெண்பாவின் இலக்கணம் கேட்டால் தெரியாது. ஆங்கிலத்தில் இருக்கும் 19 figures of  speech யையும் விரல் நுனியில் வைத்திற்கும் மாணவர்கள் எதுகை மோனை என்றால் கொஞ்சம் யோசிப்பது வேதனையாக தான் உள்ளது. ஒரு மொழியை ஒழித்து விட்டு நம் மொழியை வளர்ப்பது எத்தனை முட்டாள்தனமோ அதனை விட அபத்தமானது    ஆங்கிலம் படிக்கிறோம் என்ற ஒற்றை காரணத்துக்காக நம் இலக்கியத்தை ஒதுக்கி வைப்பதற்கு. அயல் நாட்டு மீது உள்ள மோகமா இல்லை தமிழ் தானே என்ற அலட்சியமா? இல்லை தமிழ் இலக்கியம் படித்து என்ன செய்கிறோம் என்ற அறியாமை யா? தமிழர்கள் மீதே இல்லாத அக்கரை அரசு  இலக்கியம் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பது நம்முடைய பேராசை யா ?? வெளி நாட்டு வாழ்கை மீது மோகம் கொண்டு, அவர்களை சார்ந்த எல்லா விஷயங்களையும் கற்று கொள்வது பார்க்கும் போது மீண்டும் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் mam சொன்ன வரி தான் நியாபகம் வருகிறது ‘to live abroad is a social status but a personal tragedy’…
ஆங்கிலத்தில் தமிழ் இலக்கியம்:
The Smile of Murugan : History of Tamil Literature of South India by Kamil V Zvelebil
Tamil Literature by Kamil V Zvelebil
The Poets of Ancient Tamil : Their milieu and their Sanskrit Literature By George L Hart
Tamil Heroic Poetry by Kailasapathy
The eight anthologies : a study in early Tamil literature by John Ralston Marr
Literary conventions of Akam poetry by Kamil Zvelebil
Landscape and Poetry – A study of nature in Classical Poetry by Xavier Thani Nayagam(A detailed study of treatment of nature in Sangam poems)
Tamil Love poetry and poetics – Takanobu Takahashi
Home Life among Tamils in the Sangam Age by K.Gnanambal
The Interior Landscape: Love Poems from a Classical Tamil Anthology- AK Ramanujan
Ambai,
Mother has committed a murder;
tr. by Venkat Swaminathan
Janakiraman, T.,
Perfumed night,
tr  by Kamala Ramji
Janakiraman, T.,
Wooden cow,
tr. by Lakshmi Kannan
Jayakandan,
A kind of death,
tr by Avvai Sambandan
Jayakanthan.
Agni pravesham,
tr by Avvai Sambandan
Kasyapan,
Snake;
tr. by Nakulan
Nammalvar,
Tiruviruttam: the drama of the Love Divine,
tr. by Prema Nandakumar
 Neela Padmanabhan,,
Reputation,
tr. by M.S. Ramaswami
Neela Padmanabhan, ,
The pimp,
tr. by M.S. Ramaswami
Indira Parthasarathy,
The river of blood,
tr. by Ka Naa Subramanyam
Indira Parthasarathy,
Through the veils,
tr. by Lakshmi Kannan

மறைந்து போனதா?? அழிக்க பட்டதா??

உலகமெங்கும் இருக்கும் மக்களுக்கு 9 /11  அன்று நியூயார்க் யில் நடந்த தீவரவாதிகளின் தாக்குதல்  இன்னும் நினைவில் இருக்கிறது ஆனால் இதே  நாளில்  1973  யில் chile மக்களுக்கு நடந்த துயரமான சம்பவம் நினைவில் இல்லை. அமெரிக்க நிகழ்த்திய போர் யில் ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் யில் இறந்த லட்ச கணக்கான மக்கள் ஏனோ உலக மக்களின் நினைவில் இல்லை. ஆங்காங்கே மௌன அஞ்சலிகள் மட்டுமே உள்ளது. மக்கள் எதை நினைவில் வைத்து இருகிறார்கள் ,எதை மறக்கின்றனர் என்பதை பொறுத்தே அந்த சம்பவத்தின் வலிமை உள்ளது. மும்பையில் 26 /11 நடந்த சம்பவம் நம் நினைவில் இருப்பது போல், அதற்கு கொடுக்கும் முக்கியதுவத்தை 1947 யில் காஷ்மீரில் நேஷனல் பில்டிங் ப்ராஜெக்ட் யில் இறந்த 50000  மக்களுக்கு கொடுப்பது இல்லை ,மக்களின் நினைவில் இருந்து அழிந்து போனது .சில விஷயங்களை நினைவில் வைதிர்பதும் பல சம்பவங்களை மறந்துபோவதும் ஒற்றி இருக்கும் அரசியல் சூட்சமாகவே உள்ளது. இந்திரா காந்தியை அவருக்கு பாதுகாப்பாக இருந்த சீக்கியர்கள் கொன்றனர். இந்திரா காந்தியின் கொலை வழக்கில் ஐந்தே வருடத்திற்குள் சத்வந்த் சிங்க் க்கு மரண தண்டனை வழங்க பட்டது. அதற்கு எதிர் மறையாக சீக்கியர்களை தாக்கி நடந்த தாக்குதலின் வழக்கில் இன்னும் தண்டனை தர பெறாமலே இருக்கிறது. அதில் நிறைய பேர் காங்கிரஸ் கட்சி யை சார்ந்தவர்கள். பாபர்  மஸ்ஜித் சம்பவம், மும்பை 1992 - 1993  குண்டு வெடிப்பு சம்பவம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களும் சட்டம் தண்டிக்க வில்லை இந்த சம்பவங்களில் உயிர் இழந்தவர்களும் உலக மக்கள் நினைவில் இல்லை. மக்கள் நினைவில் இருந்து அகற்றும் ஆற்றல் உள்ளதால் தான் நரேந்திர மோடி இந்திய மக்கள் குஜராத் கலவரத்தில்  தன்னுடைய பங்களிப்பை மறந்து விடுவர் என்று நம்புகிறார் போல்.
நம் நினைவில் இருக்கும் சம்பவங்கள்:
             இந்திரா காந்தி கொலை. பின்ட்( Beant ) யை சுட்டு கொன்றனர். சத்வந்த் சிங்க் க்கும் கேஹர் சிங்க் க்கும் மரண தண்டனை விதிக்க பட்டது.
      அதை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக நடந்த தாக்குதலில் 3000 பேர் இறந்தனர் 20000  மக்கள் டெல்லி சென்றனர். 700 வழக்குகள் பதிவு செயப்பட்டது ஆனால் பல வழக்கள் தள்ளுபடி ஆனது. 30  பேர் மட்டுமே கைது ஆனார் கைது ஆன எல்லாரும் எந்த செல்வாக்கும் இல்லாத சிறிய! காங்கிரஸ் ஆட்கள். யாருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படவில்லை. எந்த ஒரு சீனியர் காங்கிரஸ் தலைவரும் கைது செய்ய படவில்லை.
 பாபர் மஸ்ஜித் இடிப்பு (1992 )
    பல முக்கிய தலைவர்கள் இதில் 'அறிவுபூர்வமாக' ஈடுபட்டு உள்ளனர். ஆனால் இந்த தலைவர்கள் மீது இருந்த வழக்கள் எல்லாம் தள்ளுபடி செயப்பட்டது. இந்த முக்கிய தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி, ஜோஷி மற்றும் பலர். செப்டம்பர் 2010 allahabad உயர் நீதி மன்றம் 2 . 77 ஏக்கர் சமமாக ராம் லல்லா, waqf போர்டு,நிர்மொஹி அக்ஹர்கா க்கு பிரிக்கப்பட்டது.
 நம் நினைவில் இருந்து அழிந்தது:
                      மும்பை கலவரம் தொடர் குண்டு வெடிப்பு (1992 - 1993 )பாபர் மஸ்ஜித் இடிப்பை தொடர்ந்து மும்பை யில்  நடந்த கலவரத்தில் 900 பேர் உயிர் இழந்தனர். 575 முஸ்லிம், 275 ஹிந்து.  இதில் 30 போலீசார்கள் ஆயுதங்கள் எதுவும் இல்லாத முஸ்லிம் மீது தாக்குதல் நடத்தி சுட்டு கொன்றனர் ஆனால் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
 கோத்ரா ரயில் எரிப்பு, குஜராத் கலவரம்( 2002 )
              பிப்ரவரி 2002 இரண்டு சபர்மதி ரயில் பெட்டி எரிக்க பட்டது. இதில் அயோதயவில் இருந்து வந்து கொண்டு இருந்த 56 கற் செவாக்ஸ் (kar sevaks ) உயிர் இழந்தனர். பிப்ரவரி 28  மார்ச் 3  நடந்த குஜராத் கலவரத்தில் 1000 பேர் இறந்தனர். 790 முஸ்லிம் 254  ஹிந்து. 223 பேர் காணவில்லை. ஏழு வருடம் கழித்து அவர்கள் இறந்தனர் என்று பதிவு செய்தனர்.
           ரயில் எரிப்பு வழக்கில்  100 பேர் கைது செய்ய பட்டனர் அதில் 11 பேருக்கு மரணதண்டனை , 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டது. பிப்ரவரி 2011 யில் மீதி 63 பெயரை விடுதலை செய்தனர். குஜராத் கலவரம் வழக்கில் 5070 பேரை கைது செய்தனர் இதில் பாதிக்கு மேல் ஒரே வருடத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர்.
 காஷ்மீர்  போராட்டம்:
          1989 யின் கணக்குப்படி 43460 மக்கள் இறந்தனர். 13226 பேர் மிலிட்டரி சுட்டது 21323 பாதுகாப்பு படையினரால் சுடப்பட்டனர்.
1992 -2002 க்குள் 12000 பேர் கொலைசெய பட்டனர். 2005 கணக்கு படி 1828  சிவிலியன்ஸ், 360 பாதுகாப்பு துறையினர் இறந்தனர். இரண்டு லட்ச மக்களுக்கு மேல் உள்நாட்டில் புலம் பெயர்ந்தனர் . மற்ற அரசு நடத்தும் ' சமுதாய கொலையை ' யை (genocide) பற்றி பேசும் இந்திய அரசு ஏனோ தன்னுடைய அரசே காஷ்மீர் யிலும் northeast பகுதியில் நடத்தும் சமுதாய கொலை யை பற்றி பேச மறுக்கிறது?? இந்த சம்பவங்கள் எல்லாம் மக்கள் நினைவில் இருந்து மறைந்து போனதா இல்லை நினைவில் இருந்து அழிக்கபட்டதா??
சில சம்பவங்களை முற்றிலும் மறந்து போவதும் சில வற்றை தொலைவில்  வைத்து பார்பதும் சிலவற்றை மட்டும் எப்போதும் நினைவில் வைத்திருப்பது வெறும் மக்களின் நினைவாற்றலோ மனநிலையோ மட்டும் சார்ந்தது அல்ல இதில் அரசியல் இருக்கிறது.                
            மக்களின் நினைவுகள் கூட அடிமையாக தான் உள்ளதோ??

சட்டம் யாருக்காக???

நம்முடைய இந்திய கலாச்சாரம் மனித வாழ்க்கை, இறப்பு, வாழ்க்கைக்கு பின் என்று பல தத்துவங்கள் நமக்கு அளித்துள்ளது. அதில் ஆன்மிகம் என்ற ஒன்றை மட்டும் எடுத்து விட்டால் அவை எல்லாம் முழுமையான விஞ்ஞானம்.
                                          ஆனால் இந்த சமூகமும் கலாச்சாரமும் மனித வாழ்கையை பற்றி மனிதர்களை தரமான அடிமட்டத்தில் இருந்து சிந்திக்க விடுவதில்லை. இன்று வரை நிர்ணயிக்கப்பட்ட மரண தண்டனைகளே இதை உறுதி படுத்துகிறது.
                                        இந்திய தத்துவங்கள் தவிர்க்க முடியாமல் ஜாதி போன்ற வேறுபாடுகளை சுமந்து உள்ளது.
                                 ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்த துயரமான பஸ் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சலபதி மற்றும் விஜயவரதன் மற்றும் 37  வயது ராம்க்கு அளிக்கப்பட்ட மரணதண்டனையை ஒற்றி , மரணதண்டனைக்கு எதிரான குரல் உயர்ந்தது.
                                 இந்திரா காந்தி கொலை வழக்கில் கேஹர் சிங் க்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்படும் வழக்குகள் எந்த அளவு நியாயமாக விசாரணை செயப்பட்டது என்பது பல வழக்குகளில் கேள்வி குறியாகவே உள்ளது.
                                    டாக்டர் வி. சுரேஷ் பொது செயலார், PUCL ,TN PONDY அவர்கள் 370 வழக்குகளை(1948 -1998 ) தன் ஆய்வுக்கு எடுத்து கொண்டார்.
                    இதில் 60 வழக்குகளில் தூக்கு தண்டனை உறுதி செயப்பட்டது. இவை அனைத்திலும் மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்ணணி சூட்சுமாகவே உள்ளது. இவர்களில் 80% தாழ்த்தப்பட்ட ஜாதியினரை சார்ந்தவர்கள்.  கீழ்வெண்மணியின்  வழக்கில் தந்த தீர்ப்பை நாம் நினைவுபடுத்தி கொள்ள வேண்டும். குறிபிட்ட வகுப்பினர் குற்றம் புரிய மாட்டார்கள் என்று வழக்கை முடித்தனர்.
             மக்களுக்கு மரண தண்டனைக்கு பின் இருக்கும் அரசியலை தெரிய படுத்த வேண்டும்.  இதுக்கு பின் ஆழமாக வேருன்றி இருக்கும் தவறான ஒரு தரப்பான கொள்கைகளையும் புரிந்து கொள்ள   வேண்டும்  இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது மரண தண்டனைக்கு உட்பட்டவர்கள் அனைவரும் பழங்குடியினர், தலித், முஸ்லிம், சீக்கியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களே ஆவர்.
                             காந்தி கொலை வழக்கில் விநாயக கோட்சே க்கு மட்டுமே மரண தண்டனை வழங்க பட்டது. மற்ற நான்கு நபர்களுக்கும் ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது. அவர்கள் நாவரும் மராத்திய ஐயர்கள். இந்திரா காந்தி கொலை வழக்கில் கேஹர் சிங் சம்பவ இடத்தில இல்லை என்றாலும் மரண தண்டனை வழங்கப்பட்டது.
                            அனைவரும் சமம் என்று சொலும் சட்டம் ஏன் நியாயம் வழங்குவதில் பொருளாதாரத்தையும், ஜாதியையும், செல்வாக்கு உள்ளவர்களையும் கருதுவதை போல தோற்றம் சில வழக்குகளில் ஏற்படுகிறது?
                  எது குற்றம்? யார் குற்றவாளி? என்று எதன் அடிப்படையில் வரையறை செய்கின்றனர்? ஏன் சிலர் செய்த குற்றங்கள் மட்டும் பெரிதாக கருத படுகின்றன?
                       சட்டம் ஜாதி அரசியல் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டுமனிதனை ஒரு மனிதனாக ஏன் அரசு கருத மறுகிறது?
இந்த மூவரையும் தூக்கிலிட்டு சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொல்வதால் போன உயிர்கள் திரும்புமா?
     பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் எத்தனை உயிர்கள் போனது? போனது தலித் உயிர் என்று விட்டுவிட்டார் களா இல்லை கொலை செய்தது அதிகாரத்தில் இருக்கும் காவல் துறையினர் என்று நடவடிக்கை  எடுக்க வில்லையா?  அதிகாரத்தில் இருபவருகும் செல்வாக்கு உள்ளவர்களுக்கும் சட்டம் பொருந்தாதோ?
    சிறையில் அடைபதற்கு  காரணம் திரும்பி வரும் போது அவர் தவறை உணர்ந்து சமூகத்திற்கு ஆபத்தாக இல்லாம மாற வேண்டும் என்பது தான்.  குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை விதித்தால் இதன் பயன் பொய்யாக மாற கூடும் .
        குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு ஈடுபடுத்துகின்ற பலரை ஏனோதானோ என்று பல சமயங்களில் விட்டு விடுவது ஏன்?
            கோவையில் பிரபல தொழில் அதிபரின் மகள் முஸ்கின்( வயது 10 ) யை பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கு எதிர்ப்பு எல்லா சார்பு மக்களிடம் இருந்தும் ஏற்பட்டது. போலிசார், என்கவுன்ட்டர் என்ற பெயரில் அவனை சுட்டு கொன்றனர். மக்கள் அமைதி அடைந்தனர்.
 இரண்டு மாதம் பிறகு அதே கோவையை சார்ந்த கூலி வேலை செய்யும் ஒருவரின் மகள் (வயது 7 ) பாலியல் பலாத்காரம் செய்ய பட்டார். அந்த வழக்கு பெரிதளவில் பேசப்பட வில்லை. சட்டமும் கண்டு கொள்ளவில்லை.
                 சட்டம் யாருக்காக...... ?????

பெண்.. சமுதாயம்.. அரசு..

கங்காவின் முகத்தில் இருக்கும் சோகமும் குழப்பமும் கவிதா விற்கு நன்றாக தெரிந்தது. காரணமும் தெரியும் இருந்தாலும் கேட்டாள்.. என்ன அக்கா ஆச்சு? ஏன் முகம் வாடி உள்ளது? வழக்கம் போல் ஆரமித்தாள்.. வருணை நினைத்தால் கஷ்டமாக உள்ளது.. என்ன தான் பன்றது? 28 வயதாகிறது  இன்னும் பொறுப்பு வரவில்லை.. தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருகிறான்.. என்ன செய்வது என்றே தெரியவில்லை. கவிதா ஆறுதல் கூறினாள்’கவலை படாதிங்க அக்கா.. கல்யாணம் செய்துவைத்தால் சரி ஆக போயிரும்..!!’
                             இப்படி ஒரு அபத்தமான வரி நம் ஊரில் மட்டும் தான் கேட்க முடியும். அது என்ன லாஜிக்? ஏதோ ஒரு பெண்ணை கல்யாணம் செய்தால் குடிகாரன் கொலைகாரன் பொறுக்கி எல்லாம் நல்லவனா மாறிடுவானா? பாவிங்களா..  பெண் தன்னுடைய அன்பு பொறுமை பணிவு இதை எல்லாம் வைத்து எப்பேர்பட்ட கெட்டவனையும் மனிதனாக மாற்றிவிடுவாள்! இது தானே உங்கள் பதில்? சரி அப்படியே இருந்து விட்டு போகட்டும். அந்த பெண்ணின் வாழ்க்கை? அவளின் கனவுகள்? குடிக்கிறான், கேடு கெட்டுஅலைகிறான்  என்றால் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போக வேண்டியது தானே? இன்னமும் இருக்கிற நோயை மறைத்து ஏதோ ஒரு அசட்டு தனமான நம்பிக்கையில் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது நம் சமுதாயத்தின் மிக பெரிய அவலம். கல்யாணத்திற்கு பிறகு தெரிந்து இருந்தால் என்ன செய முடியும்? அவனோட தான் வாழ்ந்து ஆக வேண்டும். இது தானே சொல வருகீர்கள்? சரி அப்படியே இருக்கட்டும். என்றோ ஒரு நாள் நோயால் சாக தானே போறான் இப்பவே போகட்டும் என்று தலையில் கல்லை போட்டால் நீங்கள் ஒத்து கொள்விர்களா?? அப்படி என்றால் நோய் உள்ள ஒருவன் திருமணமே செய்து கொள்ள கூடாதா? நான் அப்படியா சொன்னேன்? ஒழுங்கா கேட்டு விட்டு குற்றம் கூறுங்கள். செய்து கொள்ளுங்கள் ஒன்னும் தப்பு இல்லை. ஆனால் தயவுசெய்து பெண்ணிடம் சொலி விட்டு செயுங்கள். நீங்கள் சொல்வது போல் பொறுமை அன்பு பணிவு எல்லாம் இருந்தாலும் கூட  அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் இருக்க வேண்டும் அல்லவா?  ஆயிரம் பொய் சொலி கல்யாணம் செயலமஎன்று எவனோ ஒருவன் உளறிவிட்டு போனதை தான் நாம் இத்தனை காலமாக பின்பற்றி வருகிறோம்! என்று தானே சொல்றீங்கள்? அட பாவிங்களா.. அந்த காலத்தில் போக்கு வரத்து வசதி இல்லை.. வாழ்கை முழுவதும் ஒன்றாய் இருக்க போகிறார்கள் அதனால் எந்த மறைவும் இருக்க கூடாது என்று   அவர்கள்  நினைத்ததால் ஆயிரம் முறை 'போய்' சொலி கல்யாணம் செயலாம்  என்று சொன்னார்கள். ஆயிரம் முறை போய் பார்த்து பேசி தெளிவு ஆக தெரிந்த   பிறகு கல்யாணம் செயலாம் என்று சொன்னதை நம் வசதி  க்கு ஏற்ப மாற்றி கொள்கிறோம்.
                     'தன் காதலனின் விருப்பப்படி சொந்த நாட்டையும், குடும்பங்களையும் பிரிந்து வேலையில்லாத காதலனுடன் ஒருவேளை சாப்பாட்டுக்கும், தங்கி இருந்த மிகச் சிறிய அறையிலும் தன்னுடைய காதலனுடன் வாழ்க்கையை தொடங்குகிறாள். வறுமையின் விளிம்பில் இருந்த போதும் ஒருமுறைக் கூட காதல் கணவனை அவள் குற்றம் சுமத்தவில்லை. அவள் காதலை மட்டும் நேசித்தாள். கார்ல் மார்க்ஸிடம் அளவுக்கு அதிகமாக கிடைத்தது'. இந்த வரிகள் கார்ல் மார்க்ஸ் ஜென்னி அவர்களின் காதல் பற்றி தெரிந்து கொள்வதற்கு புரட்டிய போது படித்தது. ஜென்னி மாதிரி காதல் இருந்தால் தப்பே இல்லை. நல கணவன் குடும்பம் குழந்தைகள் என்று கனவுகளை சுமந்து கொண்டு இருக்கும் ஒரு சராசரியான பெண்ணுக்கு திருமணம் செய்து விட்டு 'அவன்' திருமணம் ஆன உடன் திருந்த வேண்டும் என்று நினைப்பது சரியா?
                             பெண் என்றால்தியாகம் செய்யவேண்டும் அமைதியாக இருக்க வேண்டும் என்று ஏன்  எப்போதும் எதிர்பார்த்து கொண்டே இருக்கிறோம்? சிறு தியாகங்கள், வலிகள், மற்றவற்காக சிந்தும் கண்ணீர் தான் பெண்ணையும் வாழ்கையும் அழகுபடுத்துகிறது. ஆனால்  அந்த தியாகம் வலி எல்லாவற்றுக்கும் பொருள் வேண்டாமா? dont  you think  she deserves  a better life ?? யாருனே தெரியாத ஒருவனை திருமணம் என்ற பெயரால் கயிறை கட்டி கொண்டதால் காலம் முழுவதும் அவதி பட வேண்டுமா?
                                 அப்படியே உண்மை தெரிந்து இன்னும் சகித்து கொண்டும் ஏற்று கொண்டும் வாழும் பெண்கள் இருகிறார்கள். ஒரு வேலை நம் நம்புவதை போல் அவன் திருந்தி விட்டால் உங்கள் கடவுளின் புண்ணியத்தால் சரி ஆயிர்சு என்று சொல்வீர்கள் இல்லை என்றால் அந்த பெண்ணின் நிலைமை???  வட்டத்தை விட்டு வெளியே வந்தால் அந்த பெண்ணுக்கு கிடைக்கும் பெயர் வாழா வெட்டி! கணவன் இறந்து விட்டால் விதவை! குழந்தை பிறக்கா விட்டால் மலடி! இதில் எது ஆணுக்கு நடந்தாலும் ஒரே ஒரு பெயர் தான் 'புது மாப்பிள்ளை!'
                            பெண்கள் எந்த உடை அணிந்து கல்லூரிக்கு வர வேண்டும் என்று அரசு நிர்ணைக்க கூடாது.  அரைகுறை ஆக டிரஸ் போட்டு கொண்டு வந்தால் அவளுக்கு தானா பிரச்சனை? பொண்ணுங்க இப்படி வந்தால் பசங்க சும்மா இருப்பார்களா என்று தானே யோசிகீர்கள்? உங்கள் mind  voice கேட்குது. I dont  understand why do you blame  your weakness on the object !of temptation . சமிபத்தில் படித்த மிக பிடித்த கட்டுரை பெரியாரின் 'ஆண் அல்லது பெண்ணின் காதல் காமம் பற்றி முன்றாவது நபர் பேச உரிமை இல்லை' என்ற தலைப்பின் கீழே அவர் கூறியது. அது சரி என்றால் பெண்ணின் ஆடை மற்றும் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவது சரி இல்லை. அப்புறம் எப்படி வேனாலும் வாழலாமா? அப்படியா உங்கள் காதில் விழுந்தது? அதுக்கு நான் பொறுப்பு இல்லை.. Im responsible only  for  what I  say  not for the interpretations you make out  of  it  . அவளுக்கு எப்படி தோணுதோ அப்படியே வாழலாமே. ஒருவரின் சிந்தனையோ செயலோ வார்த்தைகளோ சக மனிதனை பாதிக்காத வரைக்கும் அவள் விருப்ப படி யே வாழட்டுமே. ஒரே ஒரு வாழ்க்கை அதுக்கு ஏன் இத்தனை வரையறைகள்??
                                      translation வகுப்பில் நான் கேட்ட கதை ஒன்று நியாபகம் வருகிறது. வீரபனை எப்படி எல்லாரும் வலை வீசி தேடினார்களோ அதே மாதிரி தான் 'அவளையும்' ( பெயர் நியாபகம் இல்லை) தேடினார்கள். அவள் ஒரு பெரிய கூட்டத்தின் தலைவி.  போலீஸ் க்கு மிக பெரிய சவாலாக இருந்தாள். போலீஸ் மிலிட்டரி க்கு உத்தரவு விட்டது. அவளை உடனே பிடிக்க வேண்டும். பிடித்து விட்டு என்ன வேனாலும் செயலாம் என்று சொலியது. ஒரு பெண் மாட்டி கொண்டால் என செய்வார்கள்? என வேனாலும் செயலாம் என்றால் என்ன அர்த்தம்? கற்பு கற்பு என்று அதன் அர்த்தம் என என்று தெரியாமலே சொல்கிறோமே அதை பறித்து விட்டதாக பெருமை கொள்வோம் அது தானே? ஆம் அது தான் .. அவள் அவர்களின் கையில் சிக்கினாள். மிலிட்டரி தலைவன் அவளை என வேனாலும் செயலாம் என்ற விஷயத்தை மற்றவரிடம் சொன்னான். அவளை மாறி மாறி கற்பழித்தனர். எலாரும் அவளை சுற்றி நின்று கொண்டனர். ஆடைகள் ஏதும் இல்லாமல் நிர்வானமாய் கீழே இருந்தாள். தலைவன் கொஞ்சம் தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான். கூட்டத்தில் ஒருவன் அவளின் துணியை முகத்தில் எரிந்து 'இந்த உடுத்தி கொண்டு தலைவனிடம் போ' என்று சொலி சிரித்தான். யாரும் இடத்தை விட்டு நகரவில்லை.. சிரித்து கொண்டே இருந்தனர்.
                                       அவள் மெதுவாக எழுந்தாள்.. துணியை கையில் எடுத்தாள்.. ஆனால் அணிந்து  கொள்ளவில்லை.. எதையும் மறைத்து கொள்ளவில்லை. அப்படியே தலைவனை நோக்கி நடந்தாள்.. தலைவனின் அருகில் சென்றாள் அவன் மார்பு முட்டும் அளவுக்கு பக்கத்தில் போனாள்.. துணியை தூக்கி அவன் முகத்தில் எரிந்து 'who is  man  in  you for me  to  wear dress ??? என்று கேட்டாள்
                             சிரிப்பு சத்தம் அடங்குகிறது.....
                               பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது போல் ஒரு ஆண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒன்றும் தவறாக தோன்றவில்லை. அநாகரிகமாக நடந்து கொண்டு மனிதேயம் இல்லாமல் வார்த்தைகளாலும் செயலாலும் துன்பபடுத்தி விட்டு பெண்களை குறை சொலதிர்கள்..
                                     இன்னும் நம் சமுதாயத்தில் பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டே தான்  இருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன் கோவையில் முஸ்கின் என்ற 10 வயது ! சிறுமி பாலியல் கொடுமையால் இறந்தாள். அவள் குழந்தை என்றதால் உடனடியாக அந்த மிருகத்தை! பிடித்து ஜெயிலில் போட்டார்கள் பிறகு சுட்டு கொன்றார்கள். மிதித்தே கொன்றுக்க வேண்டும்! இதுவே 20  வயது பெண் என்றால் உடனே நம் கற்பனை குதிரையை ஓட விட்டுருபோம். ஒருவேளை அந்த பெண்ணுக்கு முன்பே அவனோட தொடர்பு இருந்திற்குமோ? யாருக்கு தெரியும் அவள் அரை குறையாக டிரஸ் போட்டு போயிருப்பாள் அதான் இப்படி நடந்திற்கும்.. அவளை யார் இரவு தனியாக போக சொன்னார்? என்று பல கேள்விகள் தோன்றும். எதுவாக இருந்ததால் என்ன அவளை மீறி நடந்த செயலுக்கு அவள் எப்படி பொறுப்பாக முடியும்? சமுதாயத்தை பொறுத்த வரை கற்பு என்பது பெண் உடம்பில் மட்டுமே இருப்பது அது அவள் விருபத்துக்கு மீறி தொலைக்கிற ! போது ஏன் அவளை  ஒதுக்கி வைக்கிறோம்? குழந்தை திருமணம், பாலியல் கொடுமை, இவற்றை   தடுபதற்கு   துப்பு இல்லை ஆனால் எங்கே எல்லாம் இடம் உள்ளதோ அங்க எல்லாம் பெண்ணின் திருமணம் வயது 21 என்று எழுதிவைகிறோம். அரசு க்கு தான் பெண்கள் மீது எத்தனை அக்கறை.. இருவரின் தனிப்பட்ட கருத்து வேறுபாட்டுக்காக குழந்தைகளின் படிப்பை நிறுத்தி வைத்து விட்டு எந்த சலனமும் இல்லாமல் இருக்கும் அரசு இனி இந்த மாதிரி ஊரை ஏமாற்றும் வரிகளை எழுதுவதை  நிறுத்திவிட்டு வழக்கம் போல அவர்கள்  பொழப்பை பார்க்கட்டும். மரம் வளர்ப்போம் நாட்டை பாதுகாப்போம் என்று எல்லா இடத்திலும் எழுதிவிட்டு செம் மொழி மாநாட்டுக்கு ஆகா கோவையில் அத்தனை மரத்தையும் வெட்டிய அரசின் கையை வெட்டவேண்டும். இன்னும் இரவு ஒரு பெண் ஆண் துணை இல்லாமல் தனியே நிலவை ரசிபதற்கு கூட வெளியே போக முடியாதது அவமானம், கேடு, அவலம். வேறு எதாவது வார்த்தை இருந்தால் சேர்த்து கொள்ளுங்கள்.

யார் அந்த நாலு பேர்???

விடிந்த பிறகும் இப்படி  தூங்கினா வீடு எப்படி விளங்கும் ஏழு  மணிக்கு பொம்பள பிள்ள இப்படி படுத்து தூங்கினா ஊரு என்ன பேசும் எந்திரி. விடிந்த பிறகும் தூங்கறதுனால தான் சனி நம்மை பிடித்து ஆடுது. கனவுகளையும் போர்வையையும் உதறி விட்டு  காலை அர்ச்சனைகளை கேட்டு கொண்டே எழுந்தாள்.  இரவு கழட்டி வைத்த clip யை தேடி பார்த்தாள் கிடைக்க வில்லை. தலை விரி கோலமாக எழுந்து நடந்தாள்.இப்படி முடியை விரித்து போட்டு இருந்தால் வீடு விளங்குமா காதில் விழாதது போல் தண்ணீர் பாட்டில் யை எடுக்க கை நீட்டினாள். குளிக்காமல் தொடாதே என்ன பெண்ணோ நாளைக்கு வேற வீட்டுக்கு போன எங்கள தான் எல்லாரும் சொலுவாங்க. போய் குளித்து விட்டு வா. இவர்களிடம் பேசி ஒரு பயனும் இல்லை என்று தெரியும். டிரஸ் யை எடுத்து கொண்டு தன் குளியல் அறையை எட்டி பார்த்தாள். ஹீட்டர் off யில் இருந்தது. அண்ணனின் அறைக்கு நகர்ந்தாள். எத்தனை  முறை சொலி இருகிறேன் இந்த அரைகுறை டிரஸ் யை எல்லாம் hostel லே விட்டு  வா என்று. ஹாலில் அப்பாவும் மாமாவும் உள்ளார் வயதுக்கு வந்த பெண் இப்படி டிரஸ் யை போட்டு இருந்தால் நாலு பேறு என்ன சொலுவாங்க. இங்கயே குளி. வெயில் காலத்தில் எப்படி தான் அப்றோம் டிரஸ் போடுறது. இவர்கள் சொன்ன மாதிரி போட்டால் வேர்த்தே சாக வேண்டியது தான். இவர்களுக்கு எங்க புரியபோகிறது என்று நினைத்து கொண்டே குளியல் அறைக்குள் நுழைந்தாள். தனிமை எங்க கிடைத்தால் என்ன மகிழ்ச்சி தான். உலகத்திலே மிக பெரிய பூவும் நீயடி சினஞ்சிறு நதியும் நீயடி என்று பாடல் வரிகளை பாடி கொண்டே குளித்தாள் பல நாட்கள் இல்லை பல வருடம் கழித்து இன்று குடும்பத்துடன் வெளியூர் செல்கிறாள். குடும்பத்துடன் திருனாளர் கோவில்கு சென்று அங்கு இருக்கும் குளத்தில் குளித்தால் பிடித்த சனி போயிருமாம்! வெளியூர் எங்கியாவது சென்று ஓய்வு எடுத்து வாருங்கள் என்று டாக்டர் சொன்னது எல்லாம் காதில் விழவில்லை. எங்கியாவது வெளியே போக கூடாதா என்ற ஏக்கம் கண்ணில் இருந்தது தெரியவில்லை. யாரோ ஒருவன் ஏழரை சனி கோவில் குலத்தில்  குளித்தால் போய்விடும் என்று சொனதால் இந்த திடிர் முடிவு. காரணம் எதுவாக இருந்தா என்ன சனல் ஓர சீட், தொட்டும் தொடாமலும் நம்மை கடந்து செலும் காற்று இசையுடன் கலந்த நீண்ட பயணம் நினைக்கவே சந்தோஷமாக இருந்தது. குளியல் அறையில் இருந்து வெளியே வரும் போது முகத்தில் சந்தோஷம் இல்லை. பதற்றத்துடனும் வலியுடனும் படுகையில் உட்காந்தாள். உயிர் போகிற மாதிரி வலி. மாத மாதம் வருகிற வலி என்றாலும் வலி வலி தான். தாங்கிகொள முடிய வில்லை. சொல்வதா வேண்டாமா என்று யோசித்து கொண்டே இருந்தாள் உடம்பு வலியை கூட பொறுத்து கொள்ளலாம் இவர்கள் கொடுக்கும் மன வேதனை தாங்க முடியாது,.
                                                     .ம்ம்ம் வலியும் பயமும் தான் முகத்தில் எழுதி ஒட்டி இருக்கே எப்படி மறைப்பது. ஏன் இப்படி உட்காந்து இருக்கே? அம்மா.............. உடனே சத்தம்.. ஐயோ.. அவர் சொன்ன மாதிரியே தடங்கல் வந்து விட்டது. இப்படி ஆகிவிட்டதே.. கடவுளே உனக்கு ஒரு முறை சொன்னா புரியாதா? தூரம் ஆனா படுக்கையை தொடாத. போய் பெட் ஷீட் யை துவை. அது தீட்டு. வலிக்குது மா.. இதுக்கு தான் ஒழுங்கா சாப்டனும் எல்ல வேலையும் செயனும். வீடு முழுவதும் தீட்டு ஆகாதே. தம்பி ஓடி வந்தான் .. ஏய்.. வெளியே போ அக்கா க்கு உடம்பு சரி இல்லை. புரிந்தும் புரியாமலும் வருத்ததுடன் வெளியே சென்றான். அவமானமாக இருந்தது. அப்பாவையும் தம்பியையும் தான் முக்கியமாக குளத்தில் குளிக்க சொலி இருக்கிறார். கார் யில் என் பக்கத்தில் உட்காந்து கொள். அவர்களை தொடதே. ஏற்கனமே நமக்கு நேரம் சரி இல்லை. தீட்டு வேற எதையும் தொடாதே பாவம் வந்து சேரும். தொட்டால் பாவமா?? கோவமும் வேதனையும் ஒன்றை ஒன்று மோதி கொண்டு வந்தது . அத்தை மாமவின் காதில் ஏதோ சொன்னார். ஒரு பார்வை பார்த்தார். சங்கடம் கோவம் அழுகை எதையும் காமிக்க முடியவில்லை.
                                     பயணத்தை ரசிபதற்கு முடிய வில்லை. கோவில் வந்தது. தீட்டு என்றால் அவர்கள் சாமிக்கு காது கேட்காது போல். கோவில் க்கு போக கூடாது. அப்படியே குதித்து ஓடிவிடலாம் போல் இருந்தது அவளுக்கு.
                                      அப்பாவும் தம்பியும் குளித்து விட்டு வந்தனர். அவளின் அந்த தனிமை சந்தோஷத்தை கொடுக்க வில்லை. அவமானமும் ஏன் தான் பெண்ணாக பிறந்தோமோ என்ற வருத்தத்தை மட்டுமே தந்தது. அம்மா பெரு மூச்சு விட்டார் நம்மை பிடித்த சனி எல்லாம் இன்றோடு போயாச்சு. சனி போச்சாம். குளித்து விட்டு துணியை அங்கயே போடு விட்டு வரணுமாம் இல்லை என்றல் சனி நம்முடனே வந்து விடுமாம்.
                                         வீடு வந்தது. அவளுக்கு தனி தட்டில் சாப்பாடு. தீட்டு என்பதால் மற்றவருடைய தட்டை தொட கூடாது. அம்மா வின் குரல் மீண்டும் சனியை விட்டு விட்டு வந்து விட்டோம்.
                           எந்த சனியை?? ஜாதகத்தில் இருக்கும் சனியை. இவர்களின் மனதில் இருக்கும் சனியை எங்கே விட போகிறார்கள்?? கேட்க தோன்றியது.. வலி தாங்க முடியவில்லை. . அவளுக்கு என்றே காத்து கொண்டு இருந்தது இருட்டு அறை.
                         தீட்டு. வீட்டுக்கு தூரம், விட்டு விலங்கு, மாத விலக்கு.. பெண் உடலில் இயற்கையாக நிகழும் உதிரபோக்கு க்கு எத்தனை பெயர்...
                  தாழ்வு மனப்பான்மை, பதற்றம், கவலை , அசதி, கோவம், எரிச்சல், தூக்க மின்மை, தனிமை விரும்புதல், இது எல்லாம் இயற்கையாக வருவது இல்லை. இதில் பெரிய பங்கு மூட நம்பிகைகள் கொடுப்பது. மாத மாதம் இதனை ஒரு பெண் அனுபவித்தால் அவளின் மன நிலை எப்படி இருக்கும்.
                 ஒன்று புரியவில்லை ஏன் எல்லா மூட நம்பிக்கைகளும் பெண்களை சார்ந்து யே உள்ளது? பெண் தலை விரித்து இருந்தாள் ஆகாது சத்தமாக சிரித்தால் ஊரு பேசும். பொட்டு  வைக்கா விட்டால் நல்லது இல்லை.. தனக்கு விருப்பமான டிரஸ் யை போடுவதற்கு
கூட சுதந்திரம் இல்லை.. நாலு பேர் நாலு விதமா பேசுவாங்கலாம். இந்த நாலு பேருக்குஆக எத்தனை compromise இனி வரைக்கும் அந்த நாலு பேரு யார் என்று தெரிய வில்லை. யாராவது தெரிந்தால் சொலுங்கள்.
அந்த நாலு பேரை நான் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
                         நாம் பின்பற்றி வரும் பல நம்பிக்கைகள்! அந்த நாள் பேரு ஆக தான். கணவன் இறந்த பிறகு வெள்ளை புடவை கட்டி கொள்வது நாம் மற்றவர்க்கு கணவன் இறந்த பிறகும் தூய்மையாக இருகிறேன் என்று சொல்வதர்காம். நாம் தூய்மையாக இருக்கிறோம் என்று நமக்கு தெரிந்தால் போதாதா? ஏன் அந்த நாலு பேருக்கு தெரிய வேண்டும்? குங்குமம் வைப்பது மற்றவர்க்கு நம்முடைய இரத்தம் சுத்தமாக உள்ளது என்று தெரிவிபதற்கு ஆம். குங்குமம் வைப்பது ஒன்றும் கஷ்டம் இல்லை. பிடித்து இருந்தால் மட்டும் வைத்து கொளலாமே எதற்கு மற்றவர்க்கு ஆக வைக்க வேண்டும்? காலில் மெட்டி போடுவதற்கான காரணம் கேட்டால் சிரிபதா அழுவதா தெரிய வில்லை. மெட்டி யை போட்டு பெண் நடந்தால் அவள் எதிர் யில் வரும் ஆண் அவளின்    மெட்டி யை பார்த்து அவள் இன்னொரு ஆணுக்கு  உடையவள்?! என்று தெரிந்து கொள்வதற் ஆம்.
                                            இப்படி பல அந்த முகம் தெரியாத நாலு பேருக்கு தான் செய்து கொண்டு இருக்கிறோம். பெரியவர்கள் எல்லாம் காரணத்தோட தான் சொலி இருப்பார்கள் என்று மட்டுமே தெரியும் என்ன காரணம் என்று கேட்டால் தெரியாது. அப்படியே ஒன்று இரண்டு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தை படித்து உளறி னாலும் மனது ஏற்று கொள்ள மறுகிறது. எதற்கு ஏற்று கொள்ள வேண்டும்? நமக்கு பிடிகாத ஒரு செயலை ஏன் செய வேண்டும்? ஆறு மணிக்கு மேல் நகம் வெட்ட கூடாது  என்று சொல்கிறார்கள். அந்த காலத்தில் கரண்ட் இல்லை ஆறு மணிக்கு மேல் இருட்டு ஆக இருக்கும் நகம் வெட்டும் போது சப்பாடுக்குள் விழுந்து விட்டால் அதனால் சொலி இருக்கலாம்  இப்ப என்ன கேடு நகம் வெட்டு வதால் என்ன ஆக போது? எளவு வீட்டுக்கு போய் வந்தால் தீட்டு ஆமா. என்ன எளவோ. பின் பக்கமாக வந்து குளித்து விட்டு தான்  வீட்டுக்குள் வர வேண்டுமாம். அந்த காலத்து எளவு வீடு பழைய படத்தில் பார்த்து இருப்போம். இறந்த உடம்பை கட்டி பிடித்து நெஞ்சில் அடித்து கொண்டு மைக்  செட் வச்சு ஒப்பாரி பாட்டு பாடி இருக்கும். நோய் வந்து இறந்த உடம்பை கட்டி பிடித்தால் கிருமிகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு அதனால் குளித்து விட்டு வர வேண்டும் என்று சொன்னார்கள். இபோ நிலைமை அப்படியா இருக்கு.. தொட வேண்டும் என்று நினைத்தால் கூட தொட முடியாது. உடம்பு நிம்மதியாக ஐஸ் பாக்ஸ் யில் இருக்கும். அழுவது கூட நாகரிகம் இல்லை என்று யோசிக்கும் கேடு கெட்ட காலத்தில்  வாழ்கிறோம். இருந்தாலும் தீட்டு தீட்டு தான்  குளித்து விட்டால் தீட்டு போயிரும் என்று நம்புகிறார்கள்.
                                            பத்து பொருத்தமும் சரி ஆக இருந்தால் கல்யாணம் பணிக்கலாமாம். என்ன கொடுமை.. அந்த பத்து பொருத்தம் பார்த்து சொல்வது பொன்னையும் பையனையும் பற்றி எதுவும் தெரியாத ஒரு ஜோசியக்காரர்! நம்மையும் நம் உணர்வுகளையும் மதிக்கும் ஒருவனை மணந்தால் தப்பு.. ஏனோ அந்த ஒருவனும் ஒருத்தியும் ஒரே ஜாதி ஆக இருப்பது இல்லை.. கலப்பு திருமணம் செய்தால் நாலு பேரு எதாவது சொல்வார்கள்! கலப்பு என்றால் என்ன. இரண்டு முற்றிலும் வேறுபட்ட ஒன்று சேர்வது. அப்படி என்றால் மழை வர வேண்டும் என்று மனிதனுக்கு கழுதை யை திருமணம் செய்து வைகிறார்கள்! அல்லவா அது தான் கலப்பு திருமணம், வேறு ஒரு ஜாதி பெண்ணும் வேறு ஒரு ஜாதி பையனும் கல்யாணம் செய்வது கலப்பு திருமணம் அல்ல.
                             விடிந்த பிறகு தூங்கினால் வீடு விளங்காதாம். நைட் ஷிபிட் போவர்கள் வீட்டில் எல்லாம் நல்லதே நடந்தது இல்லையா? கோவில் க்கு வெளியே பிச்சை எடுபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க மனம் இல்லை கார் யில் வந்து இறங்குபவர்களை கூபிட்டு பிரசாதம் என்று கொடுத்து அனதானம் செய்துவிட்டோம் என்று பெருமை கொள்கிறோம்.
                                ஒரே ஒரு வாழ்கை தான் உள்ளது அதற்கு  எதுக்கு இத்தனை வரையறைகள். பெண்களை எப்படி தான் நினைக்க வேண்டும் என்று கேட்டால்  தாகூர் உடைய வரிகள் தான் பதில் I am Chitra.  No goddess to be worshipped, nor yet the
object of common pity to be brushed aside like a moth with
indifference.
              அந்த நாலு பேருக்கு ஆக வாழ்ந்தது போதும்! இனி எனக்கான வாழ்கை வாழ ஆசை. சின்ன சின்ன ஆசை என்று  கவித்துவமாக  பொய் எல்லாம் இல்லை. எல்லாம் பெரிய ஆசை தான். எனக்கு பிடித்த உடை அணித்து கொள்ள வேண்டும், எனக்கு தோன்றும் போது மட்டும் பொட்டு வளையல் செயின் எல்லாம் போட்டு  கொள்ள வேண்டும். என் தலையன்னை உடன் உரையாடல் முடிந்த பிறகே எந்திரிக்க வேண்டும். செயகூடாது என்று பட்டியல் இட்டு சொல்வது எல்லாத்தையும் செய்து பார்க்க வேண்டும். கடந்த   கால நினைவுகளையும் கனவுகளையும் மனதில் சுமந்து கொண்டிருக்கும் போது யாரவது பார்த்து திட்டுவார்கள என்று பயம் இல்லாமல் தனிமையில்  சிரிக்க வேண்டும். அழுக வேண்டும் என்று நினைக்கும் போது அழுக வேண்டும் . பெண்கள் இரவு நேரத்தில் நடப்பது நல்லது இல்லையாம், இருக்காலம். எத்தனை வருடமாக என் சனல் வழியாக ரசித்து கொண்டே இருப்பது. பார்வைகள் மட்டுமே பரிமாற்றி கொள்கிறோம். முகத்தை பார்க்க வேண்டும் என்று ஆசை.. முழு நிலவில்.. அமைதியான இரவில் கொட்டும் மழை யில் நடக்க ஆசை...... எல்லோரும் முன் அப்பாவை கட்டி அணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசை.. யாரிடமும் சொல்லாமல் இசையும் புத்தகமும் மட்டும் துணை யாக கொண்டு பயணம் செல வேண்டும்.. படிப்பை விட்டு விட்டு சிற்ப கலை கற்று கொள்ள ஆசை.. இன்னும்... இன்னும்...இன்னும்..
                         ஆனால் அந்த நாலு பேருக்கு யார் பதில் சொல்வது????